264 அல்சியோனேரியா
264 அல்சியோளேரியா சில கடினமான பொருள்களின் மேல் அடித்தட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மணற்பாங்கான இடங்களில் வாழும் சில இனங்கள் வேர் போன்ற அமைப்புகள் மூலமாகவோ கூர்மையான அடிப்பகுதி கள் மூலமாகவோ ஊன்றிக்கொள்கின்றன. கார்கோனியன் தொகுதிகள் 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை. பொதுவாக அல் சியோனேரியாக்கள் மஞ்சள், சிவப்பு,ஊதா,பழுப்பு, கறுப்பு முதலிய நிறங்கள் அல்லது இவை கலந்த நிறங்கள் பெற்றிருக்கும். கார்கோனியன்கள் வகை யைச் சார்ந்த அல்சியோனேரியாக்கள் கடலடியில் 'ஆழ்கடல் பூந்தோட்டங்கள் (sub-marine gardens) போன்று காணப்படுகின்றன. ஆந்தோகோடியம் கிளாவுலேரியா தொகுதி கோனன்கைம் பாலிப் அகப்படை புறப்படை நடுப்படை சைபனோகிளிப் ஆந்தோ கோடியம் தாண்டைக்குழாய் குறுக்கு வெட்டுத் தோற்றம் படம் 1. அல்சியோனேரியா குடல்தாங்கி ஒவ்வொரு பாலிப்பும், புறப்படை, அகப்படை, நடுப்படை என்னும் மூன்று வகையான திசுக்களைக் கொண்ட சுவரையுடையது. புறப்படை மெல்லிய தோல் போன்று ஓர் அடுக்குச் செல்களாலானது. இப்புறப்படை தொகுதி முழுவதும் பரவியுள்ளது. நடுப்பசை பருத்து ஜெல்லி போன்று விரிவடைந்து உள்ளது.இப்பசை சுண்ண முட்களைப் (spicules) பெற்றுள்ளது. பாலிப்புகள் "சொலினியாக்கள்" எனப்படும் அகப்படைக் குழாய்களைக் கொண் டுள்ளன. பாலிப்புகள் பல கிளைகளையுடையனவாய் இருந்தாலும், அவற்றின் உடல்கள் முழுவதும் முன முனைகளைத் தவிர, மற்றப் பகுதிகள், "சீனம் கைம்" என்னும் சதைப் பகுதியில் புதைந்தும், அகப்படைக் குழாய்களால் இணைக்கப்பட்டும் உள்ளன. எனவே பாலிப்பின் வாய்முனை மட்டும்தான் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். இம்முனையை "ஆந்தோ கோடியம்" (anthocodium) என்பர். ஆந்தோகோ டியம் வட்டமான வாய்த் தட்டையும் (oral disc), வாய்த்தட்டின் நடுவில் வாயையும், வாயைச் சுற்றி வட்டமாக அமைகின்ற, இறகு போன்ற, உணர்வு நீட்சிகளையும் கொண்டது. வாய் புறப்படையால் சூழப்பட்ட தொண்டைக் குழாயினுள் திறக்கிறது. தொண்டையின் கீழ்ப்பக்கத்தில் அதன் ஒரு முனை யில் குற்றிழைகள் நிறையப்பெற்ற ஒரு பள்ளம் (groove) உள்ளது. இப்பள்ளத்தை "சைபனோ கிளிஃப்" என்பர். இது சுவாசத்திற்குப் பெரிதும் உதவுகிற நீரோட்டத்தைக் குழிக்குடலுக்குள இழுக்கும் செயலில் ஈடுபடுகிறது. குடல் தாங்கிகள் (mesenteries) என்னும் எட்டு இடைச் சுவர்கள் நீளவாக்கில் அமைந்து உடற்சுவருக்கும் தொண்டைக்கும் இடையே உள்ளன. இவை குழிக் குடலை எட்டு அறைகளாகப் பிரிக்கின் றன. தொண்டைக்குக் கீழ், குடல்தாங்கி களின் தனித்த முனைகள், குடல் தாங்கி இழைகளைக் mesenterial filaments) கொண்டுள்ளன. சிறிய உயிர்கள் இவற்றின் உணவு ஆகும். உணவை உணர்நீட்சிகள் பிடித்துக் குழிக்குடலுக்குள் தள்ளுகின்றன. அங்கு உணவு பகுக்கப்பட்டுப் பாதி செரிக்கப்படுகிறது. இவ்வாறு பகுக்கப்பட்ட உணவை, அகப்படைச் செல்கள் உட்கொள்கின்றன. அங்கு செல்லினுள் சீரணம் முழுமை பெறுகிறது. நரம்புத் தொகுப்பு நரம்புச் செல்களைக் கொண்டுள்ளது. நரம்பு நார்களால் இணைக்கப்பட்ட இச்செல்கள், நடுப்பசையில் அமைந்து, புறப்படைக் கும் அகப்படைக்கும் அருகில் இருக்கின்றன. உணர்வு நீட்சிகளிலும் வாய்த்தட்டிலும் இச்செல்கள் திரளாக அமைந்துள்ளன. அல்சியோனேரியாக்கள் பொதுவாக "ஒருபால்' உடலிகளாகும். ஆனால் சில வகைகள், பெண் உறுப் புகள் முதலில் முதிர்வு பெறும் 'இருபாலின" உடலி