266 அல்சீமர் நோய்
266 அல்சீமர் நோய் சீனிக்அமிலத்துடன் மேலும் சோடியம் கார்பனேட்டுக் கரைசலைக் கலந்து சோடியம் அல்சினேட்டுக் கரை சலைப் பெறலாம். கால்சியம் குளோரைடு. ஹைடி ரோக்குளோரிக் அமிலம்,பால்மப்படுத்திய(emulsified) ஆலிவ் எண்ணெய் ஆசியவை கலந்த தொட்டியில் கால்சியம் அல்சினேட்டுக் கரைசலைக் குழையச் செய்து கால்சியம் அல்சினேட்டு இரேயான் பொருளை உண்டாக்கலாம். நூற்பின்போது படலங்கள் நீட்டு விக்கப்படுகின்றன. உருவாகும் நூல் நல்ல தோற்ற முடையதாய் அமைகிறது. இது நெசவுக்கும் பின்ன லுக்கும் ஏற்ற இழுவலிமையும் (tenacity), (0.15 முதல் 0.18 நிய/துகில்) கையாளும் திறனும்,நீளும் இயல்பும், நுண்மையும் (2 டெசிடெக்ஸ் படல் அள வுக்கு) பெற்றுள்ளது. இந்தக் கட்டத்தில் உள்ள அல் சினேட்டு இரேயான் இழை சவர்க்காரம், சோடா ஆகியவற்றில் எளிதாகக் கரையும். இதற்குக் கார எதிர்ப்புத்திறன் ஊட்ட வேண்டும். இதை நூலாக வோ, நெய்தோ, பின்னியோ, சீர்செய்த வடிவிலோ உலோக உப்புத் தொட்டிகளில் இட்டுப் பதப்படுத்த வேண்டும். பெரில்லியம் உப்புகள் அல்சினேட்டு இரேயானுக்கு நிறமின்மை தரும். இது இழைக்குக் கார எதிர்ப்புத்திறன் தருவதோடு தீப்பற்றாத இயல்பையும் ஊட்டும். இந்த உலோக அல்சினேட்டு இரேயான் துணிப்பொருள்கள் திரைச்சீலைகளுக்கும், இருக்கைகளின் உறைக்கும், விரிப்புகளுக்கும் ஏற்றவை. கால்சியம் பெரில்லியம் அல்சினேட்டு இரேயான் நீருறிஞ்சுபவை; காற்றில் நன்குலர்ந்த இழைகளைப் போல 80 விழுக்காடு இழுவலிமை மிக்கவை. அல் சினேட்டு இழைகளுக்குச் சாயம் ஊட்டும் சாயப் பொருள்கள் பல வண்ணமூட்டவும், ஒளியிலிருந்தும் சலவையிலிருந்தும் நிறத்தைக் காத்து நிலை நிறுத் தவும் வல்லவை. உடைகளில் சிறப்பு விளைவுகளை ஏற்படுத்த அல்சினேட்டு இரேயானின் கரைதிறன் நன்கு பயன் படும். முறுக்கில்லாத கரையாத நூலுடன் கால்சியம் அவ்சினேட்டு இழைகளை இணைத்து முறுக்கி நெய் தற்கேற்ற வலுவூட்டலாம். பிறகு நெய்த துணியிலி ருந்து கரைதிறப் பொருள்களைச் சவர்க்காரக் கரை சலால் கழுவி எளிதாக நீக்கிவிடலாம். இது மயிர்- பருத்தி கலவைத் துணியில் அமிலக் கரியாக்கல் acid carbonisation) செயல்முறை மூலம் பருத்தி இழைகளை நீக்கும் பிரிமயிராடையின் தத்துவத்தை யொத்தது. கரையும் அல்சினேட் பொருளை நீக்க அமிலத்தைப் பயன்படுத்தும் கூடுதல் செயல் முறை இங்குத் தேவைப்படுவதில்லை. அல்சினேட்டுப் பொருளை எந்தத் துணிப் பொருளுடனும் சேர்த்துப் பயன்படுத் தலாம். இந்தச் செயல்முறைத் தத்துவம் துணிகளில் பல சிறப்பு விளைவுகளை ஏற்படுத்த உதவும். கரை நூலுடன் இழைத் தொகுதிகளைச் சேர்த்துத் திரித்து முறுக்கலாம். அல்லது அதிக நீளமுள்ள நூலுடன் கரைநூலைத் திரித்து முறுக்கலாம் அல்லது துணியின் சில புரிகளை மட்டும் அல்சினேட்டு இழையை நெய்யப் பயன்படுத்தலாம். சவர்க்காரக் கரைசலில் தோய்க்கும்போது கரைநூல் கரைந்ததும், ஆடையின் ஒருபுறத்தில் மட்டுமோ இருபுறங்களிலுமோ குஞ்சம், சுருள், சுருக்கு, கண்ணி, சுருட்டை அமைப்புகள் நிலவச் செய்யலாம். நூலோதி Grosicki, Watson's Textile Design & Colour. Newnes-Butterworths, London, 1980 அல்சீமர் நோய் அல்சீமர் லயது முதிர்ந்தோரில் காணப்படும் நோய் (Alzeimer's disease) நோயாளியிடம் அறிவுத் திறன் கடுமையாகப் பாதிக்கப்படுதலைக் (senile dementia) குறிக்கும். இந்நோய் இன்ன காரணத்தால் வருகிறது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. வேறு வகையான மன மழுக்கத்தினின்றும் தனைப் பிரித்துக் காட்ட முழுமையான ஒரு மருத் துவ மதிப்பீடு செய்ய நரம்பு மண்டலத்தின் நிலை, இரத்த ஆய்வுகள் ஆகியன உதவும். அமெரிக்காவில் சில இடங்களில் முதுமை மன மழுக்க நோய் ஆண்களை விடப் பெண்களையே அதிகம் தாக்குவதால், அது பற்றிய அறிவியல் புள்ளி விவரம் அறுதியாகத் தெரியவில்லை. முதுமை மனமழுக்கத்தின் காரணம் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. சில ஆசிரியர் கள் இதை நரம்பு மண்டலத்தின் முதுமை நிலை என்பர். வேறு பலர் பாரம்பரியக் காரணி ஒன்றைச் சுட்டிக்காட்டுவர். இந்த நோயின் பின்னணியில் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கக்கூடும் என்பதும் பொருந்தும். அல்சீமர் நோய் பீடிக்கையில் மூளை மிகவும் சுருக்கம் (atrophy) அடைகிறது. மூளையின் உள் ளறைகள் (ventricles) விரிவடைகின்றன. முதுமை மனமழுக்கமாகிய அல்சீமர் அறிகுறியாக மூளையில் முதுமைக் நோயின் கோடுகள்