அல்லமொன்டைட்டு 275
பொதுப்பண்புகள். இதில் மரங்கள் அல்லது புதர்ச் செடிகள் அடங்கும். இதன் இலைகள் தனித்தவை; மாற்று இலையடுக்கமுடையவை (alternate phyllo- taxy); விளிம்பு பல்போன்றோ, முழுமையாகவோ, மடல்களாகப் பிளவுற்றோ (lobed) இருக்கும்; இவை யடிச் சிதல்கள் பக்கவாட்டிலோ, இலைக்காம்புக்கு உட்புறமாகவோ இருக்கும். மலர்கள் சைமோஸ் திர ளில் (cymose cluster) அமைந்திருக்கும். இவை இரு பாலானவை (bisexual) அல்லது ஒருபாலானவை (unisexual). பூவிதழ்கள் (tepals) 4-8 ஆக இருக்கும். இவை பிரிந்தோ இணைந்தோ இருக்கும். மகரந்தத் தாள்கள் (stamens) 4 இலிருந்து 8 வரை இருவரிசை களில் (2 + 2; 4 + 4) அமைந்திருக்கும். ஆண் மலர் களில் மலட்டுச் சூலகம் (pistillode) இருக்கக்கூடும். சூற்பை இரு சூலக இலைகளாலானது; பெரும்பாலும் ஒரே அறையுடையது (unilocular); ஒவ்வோர் அறை யிலும் ஒரு சூல் (ovule) தொங்கு சூலமைவில் (pendu- dous placentation) இருக்கும். சூலகத்தண்டு (style) (simple), எளியதாகவோ இருகிளைகளுடனோ காணப்படும். கனி, கொட்டை (nut), சமாரா (samara) அல்லது பல்சுளைக் கொட்டைகளையுடைய கனி (drupe) வகையைச் சார்ந்தது. விதைகளில் முளை சூழ்சதை கிடையாது (exendospermous). பொருளாதாரச் சிறப்பு. எலம் சிற்றினங்களின் (umus spp.) மரக்கட்டை மேசை, நாற்காலி செய் வதற்கும், சில வகைத் தச்சு வேலைகளுக்கும் பயன் படுகின்றது. அல்மஸ் தோமாஸி இன் (Ulmus thomasi) கட்டை முடிச்சுகளின்றிச் சுத்தமாக இருப்பதால் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அ. வாலிக்கியா னாவின் (U.wallichiana) தழைகளை மாட்டுத் தீவன மாகப் பயன்படுத்துகின்றார்கள். இதன் கட்டை நீரினால் பாதிக்கப்படாததாகையால் நீருக்குள்ளிருக்க வேண்டிய தளவாடங்கள் செய்வதற்கு இது பயன் படுத்தப்படுகிறது அ. ரூப்ராவின் (U. rubra) பட்டை உணவுக்குழாயில் ஏற்படுகின்ற எரிச்சலுக்கு மருந்தா கப் பயன்படுகின்றது. அ. ஃபுல்வா வின்(U.fulra) தாவ ரப்பசைப் பொருள் mucilage என்ற வழவழப்பான பொருள் நிறைந்த பட்டை, மருந்துகள் செய்யப் பயன் படுகின்றது. கெல்டிஸ் அஸ்ட்ராலிஸ் (Celtis australis) மரத்தின் கனிகள் இனிப்பானவையாதலால் உண்ணப் படுகின்றன. இவை மறதியை ஏற்படுத்தக்கூடிய அளவிற்குப் போதையை ஏற்படுத்தும் என்று கூறப் படுகின்றது. மேலும் மாதவிடாயின்மையைப்(amenor- thoea) போக்குவதற்குப் பயன்படுகின்றது. இவற் றின் விதைகளிலிருந்து கொழுப்புச் சத்துள்ள எண் ணெய் கிடைக்கின்றது. பிளானீரா அபாலிகா (Planera apalica) மரத்தின் கட்டை நறுமணமுடையது. எனவே இதனைப் போலிச் சந்தனக்கட்டை என்பர். அம்பாரத்தி அல்லது செங்கோலம் (Trema oriemalis) மரத்தை எரித்து அடுப்புக் கரி எடுக்கப்படுகின்றது. அல்லமொன்டைட்டு 275 இதன் கட்டை தேயிலைப் பெட்டிகள், தீக்குச்சிகள், தீப்பெட்டிகள் செய்வதற்குப் பயன்படுகின்றது. சொரசொரப்பான இதன் இலைகள் மரச்சாமான் களுக்கு மெருகேற்ற உதவுகின்றன. வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு வயிற்றுப் போக்கையும், சிறு நீரில் இரத்தக் கலப்பு ஏற்படுவதையும் தடுக்கின்றது. வேர்ப்பட்டையும், இலைகளும், வலிப்பு நோயைக் (epilepsy) குணப்படுத்துவதற்குப் பயன்படுகின்றன. இதன் கனிகள் இனிப்பானவையாதலால் உண்ணப் படுகின்றன.டி. பொலிட்டோரியாவும் (T.politoria) ஏறக்குறைய மேற்கூறப்பட்ட விதங்களில் பயன்படு கின்றது. ஆயா, அயில் என்கிற ஹோலோப்ட்டீலியா இன்டகிரி ஃபோலியா (Holoptelea integrifolia) சாலை யோரங்களிலும், கோயில்களிலும் வளர்க்கப்படு கின்றது. இதற்கு வணிகத் துறையில் கஞ்சு (kanju) அல்லது இந்திய எல்ம் (Indian elm) என்று பெயர். இதன் கட்டை ஒட்டுப்பலகை (plywood), கணிதக் கருவிகள், பெட்டிகள், படகுகள் முதலியவை செய்வ தற்குப் பயன்படுகின்றது. பினாரி (Pinari; celtis cinnamomea) கட்டையின் மேல் நீர் விழுந்தால் மல நாற்றம் வெளிப்படும். இதன் மரத்தூளை ஸ்ரீலங்கா (Sri Lanka) மக்கள் எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து சரும நோய், சொறி சிரங்கு ஆகியவற்றைக் குணப் படுத்துவதற்குக் குடிக்கின்றார்கள். திருவிதாங்கூரில் தலைவலிக்கு மருந்தாகக் கருதப்படுகின்றது. ஜாவா வில் நரம்புக் கோளாறுகளைப் போக்குவதற்கும் காய்ச்சலுக்கும் மருந்தாகப்பயன் படுத்துகின்றார்கள். அடா, கோனா (Ada cona Celtis tetrandra) வின் கட்டை தீப்பெட்டிகளும், தீக்குச்சிகளும் செய்வதற்குப் பயன்படுகின்றது. நூலோதி கா.இரா. 1. Lawrence, G.H.M;Taxonomy of Vascular Plants. The Macmillan Co., New York, 1951. 2, Rendle, A.B; The Classification of Flowering Plants. Vol. II. Dicotyledons. Cambridge Univ. Press, London, 1957 (Repr.) 3. Richens, R.H. in The Oxford Encyclopaedia of Trees of the World. (Ed. Hora, B.) Oxford Univ. Press, London, 1981. 4. The Wealth of India. Vol. II. 1950; CSIR Publ. New Delhi, 1976. அல்லமொன்டைட்டு அல்லமொன்டைட்டு (allemontite) ஆர்செனிக்கும் (arsenic) ஆன்ட்டிமொனியும் ஒன்றோடொன்று