பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 அல்லனைட்டு

276 அல்லனைட்டு இணைந்து வளர்ந்து உருவான கனிமமாகும். இதன் வேதியியல் உட்கூறினை ஆர்செனிக் கலந்த ஆண்டி மொனி என்பர். இதை (Sb As) என்ற வேதியியல் வாய்பாட்டால் குறிப்பிடலாம். இது முடிச்சுகள் போன்ற திண்ணிய படிமக் கனிமங்களாகக் கிடைக் கின்றது. இதன் அடர்வு எண் 6. 203 ஆகும். இது உலோக மிளிர்வைப் பெற்றது. இது வெண்மை அல்லது சிவப்பு கலந்த சாம்பல் நிறங்களை உடையது. இங்கிலாந்து நாட்டிலுள்ள அட்லின் (Adlin) பகுதி யிலும், பிரான்சு நாட்டில் அலிமோண்ட் என்னும் இடத்திலும், பொகிமியா (Bohemia) பகுதியிலும் கிடைக்கின்றது. அல்லனைட்டு -ஞா.வி.இரா. இக்கனிமம் எப்பிடோட்டு (epidote) என்னும் கனிமத் தொகுதியைச் சேர்ந்ததாகும். இது ஒற்றைச்சரிவுத் தொகுதியில் (monoclinic system) படிகமாகின்றது. இதன் படிக அச்சுகள் a : b : c= 1.5509:1:1.7691 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. இதனுடைய குட்டை அச்சிற்கும் (a) நிலைஅச்சிற்கும் (c) இடையே உண்டாகும் குறுங்கோணத்தின் (3) அளவு 64° 54' ஆகும். இவற்றின் படிகங்கள் நீண்டு மெல்லிய ஊசியொத்த வடிவானலையாகவும் (acicular), தட்டையான மெல்லடை போன்ற அடுக்கானவை களாகவும் (tabular) அடிக்கடி காணப்படுகின்றன. இவை திண்ணிய உருவமற்ற மனிகளாகப் பாறை களில் பதிந்தும் காணப்படலாம். இவற்றின் கனிமப் பிளவு செவ்விணைவடிவப் (orthopinacoid) பக்கத் திற்கும், அடியிணைவடிவப் (basalpinacoid) பக்கத் திற்கும் இணையாக இரு திசைகளில் காணப் படும். இவை ஒழுங்கற்ற கனிம முறிவுத் தன்மையைப் பெற்றிருக்கின்றன, இவை நொறுங்கும் தன்மை உடையவை. இவற்றின் கடினத்தன்மை 5.5 முதல் 6 வரையில் இருக்கும். இவற்றின் அடர்த்தி எண் 3 இலிருந்து 4.2 வரை வேறுபட்டுக் காணலாம். இவற்றின் கனிம மிளிர்வு குறைவான உலோக மிளிர்வை (sub-metalic) ஒத்ததாகவோ, பிசினை ஒத்த (resinous) மிளிர்வாகவோ இருக்கலாம். இக் கனிமங்கள் பழுப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரையுள்ள இடைப்பட்ட நிறங்களில் காணப்படு கின்றன. இக்கனிமங்கள் குறைந்த ஒளிக்கசிவுத் (sub- translucent) தன்மையிலிருந்து ஒளி கசியாத் (opaque) தன்மை வரை மாறும் இயல்பு உடையனவாக இருக் கலாம். இவற்றின் பலதிசை அதிர்நிறமாற்றம் (pleo- chroism) மிகவும் தெளிவாக இருக்கும்; மெது அதிர்வு அச்சுக்கு (z) இணையாகப் பழுப்புக் கலந்த மஞ்சள் நிறத்தையும், இடைஅதிர்வு அச்சுக்கு (y) இணையாகச் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தையும், விரை அதிர்வு (x) அச்சுக்கு இணையாகப் பச்சை கலந்த பழுப்பு நிறத் தினையும் கொண்டிருக்கும். ஒளியியல் தன்மைப்படி இவற்றை எதிர்மறைக் கனிமமாகக் கணித்துள்ளார் கள். இக்கனிமத்தின் மெது, விரைவு அதிர்வு அச்சு களைத் தாங்கியுள்ள ஒளியியல் அச்சுத்தளம் (axial- plane) சாய்வு இணைவடிவப் (010) பக்கத்திற்கு இணையாக இருக்கும். இவற்றின் நிலைஅச்சிற்கும் (c) விரைஅதிர்வு அச்சிற்கும் (x) இடைப்பட்ட கோணம் ஏறத்தாழ 324° ஆகும். இவற்றின் மெது. விரை அதிர்வு அச்சுகளுக்கு இடைப்பட்ட கோணம் (2v) எப்பொழுதுமே மிகுந்து காணப்படும். இவற் றின் அதிர்வு அச்சுகளுக்கு இணையாக உள்ள ஒளி விலகல் எண் (refractive index) 1.64 முதல் 1.80 வரையில் வேறுபட்டுக் காணப்படும். இவற்றின் ஒளி விலகல் எண் இடைவெளி (birefriengence) மிகுந்த வேறுபாட்டைக் காட்டும். இக்கனிமங்கள் விரைவில் வேதியியல் உட்கூறில் மாற்றப்பட்டுச் சிதைவுறும் தன்மை பெற்றவை. அதனால் இவற்றின் ஒளியியல் தன்மைகளில் அடிக்கடி மாறுதல் காணப்படும். இவற்றின் அடர்த்தி எண்ணும் ஒளிவிலகல் எண்ணும் குறைந்து காணப்படும் பொழுது திசைக்கேற்ப ஒளித் தன்மை மாறா (isotropic) இயல்பைப் பெறுகின்றன, இவை ஒரே பாறையிலிருத்தாலும் வேதியியல் உட் கூறில் மிகுந்த வேறுபாட்டைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. பயோட்டைட்டு (biotite) என் னும் கனிமத்தினுள் உள்ளடக்கப்பட்டிருந்தால் (inclu- ded) அவற்றினுள் இக்கனிமத்தைச் சுற்றி ஒருவித மான புள்ளிசூழ் பலதிசை அதிர்நிறத்தன்மையைச் (pleochroic halo) சுட்டிக்காட்டிடும் புள்ளிகள் உரு வாகின்றன. அல்லனைட்டுக் கனிமத் தோற்றம் இக்கனிமங்கள் சிறிய படிகங்களாகக் கருப்பு நிறத்தில் மேக்னட்டைட்டு (magnetite) என்னும் கனிமத்தோடு கலந்து நீர் நீக்கப்பட்ட அல்லனைட்