அறிவியல் களஞ்சியம் தொகுதி - 2 அமில அளவியல் ஓர் அமில/காரக் கரைசலில் கரைந்துள்ள கரை பொருளின் எடையைப் பருமனறி பகுப்பாய்வின் மூலமும் (volumetric analysis), எடையறி பகுப்பாய் வின் மூலமும் (gravimetric analysis) கணக்கிடலாம். பருமனறி பகுப்பாய்வில் நடுநிலையாக்கல் வினை பயன்படுகிறது. H + OH அமிலம் காரம் H,O கொடுக்கப்பட்டிருக்கும் கரைசலிலுள்ள அமிலத்தை அளவிடுதல், காரத்தை போன்ற அளவிடுதல் வற்றிற்கும் நடுநிலையாக்கல் (neutralisation) முறை பயன்படுகிறது. பருமனறி பகுப்பாய்வில் ஒரு திறன் தெரிந்த கரைசலுக்கும் (standard solution), எடை கண்டறிய வேண்டிய கரைசலுக்கும் இடையே முறிவு வினையை (titration) நிகழ்த்த வேண்டும். எந்தக் கரைசலின் கனஅளவும், கரைந்துள்ள பொருளின் எடையும் தெரியுமோ அந்தக் கரைச் லுக்குத் திறன் தெரிந்த கரைசல் என்று பெயர். திறன் தெரிந்த கரைசலைப் பயன்படுத்தித் திறன் தெரியாத கரைசலின் திறனை வேதியியல் வினை மூலம் கண் டறியும் முறைக்கு முறித்தல் என்று பெயர். இதற்குப் பிப்பெட் (pipette) நியமக் பியுரெட் (burette), குடுவை (standard flask) போன்ற துணைக்கருவி பயன்படுத்தப்படு களும், காட்டியும் (indicator) கின்றன. அமில, கார அளவியலில் (acidimetry and alkali- metry) அமிலத்தையோ காரத்தையோ ஒன்றை மற் றொன்றால் முறிக்கலாம். பொதுவாக அமிலத்தைப் பியுரெட்டிலும், காரத்தைப் பிப்பெட்டிலும் எடுக்க வேண்டும். அமில-கார முறித்தலில் காட்டி பயன படுத்தப்படுகிறது. காட்டி, அமில நிலையில் ஒரு நிறமும், கார நிலையில் மற்றொரு நிறமும் பெற்றி ருக்கும். இதனால் முறித்தலின்பொழுது முடிவு நிலையைக் கண்டறியக் காட்டி உதவுகிறது. அமில, கார அளவியலில் பொதுவாக ஃபினால்ஃப்தலீன் (phenolphthalein), மெத்தில் ஆரஞ்சு (methyl orange) ஆகிய இரு காட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஃபினால்ஃப்தலீன் அமில நிலையில் நிறமற்றதாகவும், கார நிலையில் இளஞ்சிவப்பு (pink) நிறமுற்ற தாகவும் உள்ளது. மெத்தில் ஆரஞ்சு அமில நிலையில் இளஞ்சிவப்பு நிறமாகவும் கார நிலையில் ஆரஞ்சு நிறமாகவும் உள்ளது. முறித்தல், வீரிய அமிலத்திற்கும் (strong acid), வீரிய காரத்திற்கும் (strong base) இடையில் நிகழும் பொழுது ஃபினால்ஃப்தலீன் அல்லது மெத்தில் ஆரஞ்சு காட்டியைப் பயன்படுத்தலாம். முறித்தல், வீரிய காரத்திற்கும் வீரியம் குறைந்த அமிலத்திற்கும் (weak acid) இடையில் நிகழும்பொழுது ஃபினால்ஃப் தலீன் காட்டியாகவும், வீரிய அமிலத்திற்கும் வீரியம் குறைந்த காரத்திற்கும் (weak base) இடையில் முறித்தலைக் காட்ட மெத்தில் ஆரஞ்சு காட்டியாகவும் பயன்படுகின்றன. தரம் பார்க்கும் முறை. திறன் தெரிந்த காரக் கரை சலை 20 மி.லி. பிப்பெட்டினால் எடுத்துக் கூம்புக் குடு வைக்குள் (conical flask) விட்டு, அமிலக் கரைசலைப் பியுரெட்டில் எடுத்துக் கொண்டு, பியுரெட்டில் தொடக்க அளவைக் குறித்துக்கொள்ள வேண்டும். பியுரெட் அளவுகளைப் பார்க்கும்பொழுது இட மாறு தோற்றப் பிழையில்லாமல் (parallax error) இருக்க வேண்டும். கூம்புக் குடுவையில் எடுத்துக் கொண்ட 20 மி.லி. காரத்துடன் ஒரு துளி காட்டி யைச் சேர்க்கவேண்டும். கூம்புக் குடுவையினுள் அமிலத்தைச் சிறிது சிறிதாகச் சேர்த்து முறிவு நிலை யைக் கரைசலின் நிறம் மாறுதல் மூலம் கண்டறிய வேண்டும். பியுரெட் அளவுகளிலிருந்து அமிலத்தின்
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/31
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை