பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லைல்‌ ரெசின்‌ 283

சேர்மங்களை உருவாக்கும் வினையில் இது ஓர் இடைநிலைப் பொருளாக (intermediate) விளங்கு கிறது. ஸ்பைரேன்கள். அல்லீனிலிருக்கும் இரட்டைப் பிணைப்புகளை கரிம வளையங்களால் பதிலீடு செய் யும்போது ஸ்பைரேன்கள் (spirans) கிடைக்கின்றன. இதில் கரிம வளையங்கள் ஒன்றிற்கொன்று செங் H CH, 7H,C H₂ CH, (I) CHC) CH, CH, (II) と குத்தாக இருக்கின்றன. தகுந்த பதிலீட்டு வினையின் மூலம் ஒளிசுழற்றும் தன்மை கொண்ட ஸ்பைரோ சேர்மங்களைப் பெறலாம். நூலோதி ஆர். சே, 1. Finar, I.L., Organic Chemistry, Vols. I & II, Sixth Edition, ELBS, London, 1973. 2. March, Jerry., Advanced Organic Chemistry, Third Edition, McGraw-Hill Kogakusha Ltd, Tokyo, 1977. அல்லைல் குளோரைடு இதன் வேதிப் பெயர் 3 - குளோரோபுரோப்பீன் (3-chloropropene). அல்லைல் குளோரைடு (ally- chloride) ஒரு நிறமற்ற, காரமான, வெறுப்பு உணர்ச்சி தருகின்ற நீர்மம். இதன் கொதிநிலை 45°C; இது நீரில் கரையாது; ஆல்கஹால், குளோ ரோஃபார்ம், ஈதர் போன்ற கரிம வேதிக்கரைப்பான் களில் எளிதில் கரையக்கூடியது. தொழில் முறையில் புரோப்பிலீனை அதிக வெப்பத்தில் குளோரினேற்றம் (chlorination) செய்து அல்லைல் குளோரைடு தயாரிக் கப்படுகிறது. அல்லைல் ஆல்கஹால் ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரிவதால், குறைந்த அளவில் இது கிடைக்கிறது. அல்லைல் ரெசின் 283 CH=CHCH,OH + HC1 CH,=CHCH,CI + H,O இதுதான் ஆய்வுக் கூடத்தில் அல்லைல் குளோ ரைடு தயாரிப்பு முறையாகும். இது எளிதில் தீப் பற்றக் கூடியது; தோலில் பட்டாலோ, உட்கொண் டாலோ, சுவாசித்தாலோ நச்சு சுத்தன்மையை உண்டாக்கக் கூடியது. அல்லைல் ஆல்கஹால் தயாரிப் பிலும், மற்ற அல்லைல் பெறுதிகள் தயாரிக்கவும், வார்னிஷ்கள், பிளாஸ்டிக்குகளுக்குத் தேவையான ரெசின்கள், மருந்துகள், கிளிசராவ் (glycerol) ஆகி யவை தயாரிக்கவும் அல்லைல் குளோரைடு பெரிதும் பயன்படுகின்றது. நூலோதி 1. Finar I.L., Organic Chemistry, Vol I, Fifth Edition. ELBS, London, 1973. 2. Hawley. Gessner G., The Condensed Chemical Dictionary, Tenth Edition Galgotia Book Source Publishers, New Delhi, 1984. அல்லைல் ரெசின் அல்லைல் ஆல்கஹாலும் (allyl alcohol) ஒரு இரு காரவியல் அமிலமும் (dibasic acid) பல்லுறுப்பாக்க (polymerisation) வினைக்கு உட்பட்டால் கிடைக்கும் பல்லுறுப்பு எஸ்ட்டர் (polyester) சேர்மத்திற்கு அல்லைல் ரெசின் (allyl resin) என்று பெயர். ரெசின் களில் இவை தனித்தன்மை வாய்ந்தவையாகும். இரு அல்லைல் தாலேட்டு(diallyl phthalate), இரு அல்லைல் அய்சோதாவேட்டு(diallyl isophthalate),இருஅல்லைல் மெலியேட்டு(diallyl maleats) போன்றவை இவ்வகைச் சேர்மங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். நிறைவுறா (unsaturated) அல்லைல் இரட்டைப் பிணைப்பு (double bond) பல்லுறுப்பாக்கல் மூலம் கிடைக்கும் இச்சேர்மங்கள் அடர்த்தியுள்ளவை. வேதிப் பொருள்கள், ஈரப்பதம், உராய்வு, வெப்பம் ஆகியவற்றால் எந்த வகையிலும் பாதிக்கப்படாத தன்மை உடையவை. இவற்றிற்கு மின்கடத்தும் திறனும் உண்டு; சுருங்கும் திறன் மிகக் குறைவு. பயன்கள். கண்ணாடி, அபிரகம் (mica) போன்ற பொருள்களை ஒட்டவும், வார்னிஷ் (varnish) தயாரிக் கவும், மிக நுண்ணிய மின்னியல் கருவிகளைப் பதித்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லவும், வார்ப்பு உலோகம், பீங்கான் (chinaware)