288 அலகுகளும் பருமானங்களும் செந்தரங்களும், மின்னியல்
288 அலகுகளும் பருமானங்களும் செந்தரங்களும், மின்னியல் அனைத்துலக ஆம்பியர் (International ampere). ஒரு வெள்ளி நைட்ரேட்டு நீர்க்கரைசலில் ஒரு நொடிக்கு 0.0011800 கிராம் எடையுள்ள வெள்ளியை வீழ்படி யச் செய்யத் தேவைப்படும் மாறாத மின்னோட்டமே ஓர் அனைத்துலக ஆம்பியர் ஆகும். அனைத்துலக வோல்ட் (International volt). ஓர் அனைத்துலக ஓம் தடையுள்ள கடத்தியில் ஓர் அனைத்துலக ஆம்பியர் மின்சாரத்தை உண்டாக்கத் தேவைப்படும் நிலையான மின் அழுத்தமே ஓர் அனைத்துலக வோல்ட் ஆகும். அனைத்துலக வாட் (International watt). மாறாத ஓர் அனைத்துலக ஆம்பியர் ஓர் அனைத்துலக வோல்ட் மின் அழுத்தத்தில் பாயும்போது, ஒரு நொடி யில் வெளிப்படும் மின்னாற்றல் ஓர் அனைத்துலக வாட் ஆகும். அனைத்துலக அலகுகளின் தனிநிலை அளவைகள் தடையை அளத்தல் (Measurement of resistance). வெபர் (Weber), லாரன்சு(Lorenz), ராலே (Raleigh) ஸ்மித் (Smith), கேம்பெல் (Campbell), குருனீசன் (Gruneisan), pd(Giebie) போன்ற பல ஆய்வாளர்கள் அனைத்துலக ஓமைத் தனிநிலை அளவில் அளவீட்டு ஆய்ந்துள்ளார்கள். அவர்களுடைய முடிவுகளிலிருந்து, அனைத்துலக ஓம் என்பது 1.00048× 10 செ.கி. நொ.அலகு என்பது தெளிவாகிறது. மின்காந்த முறையில் தடை LT என்ற பரு மானங்களைக் கொண்டுள்ளது. அதில் மதிப்பு ஒன்று என்பதால் இந்தப் பருமானம் ஒரு விரைவின் பருமானமாகும். எனவே தடையைத் தனிநிலை அளவில் அளக்க ஒரு விரைவையோ, விரைவைத்தீர் மானிக்கும் நீளத்தையும் நேரத்தையுமோ அளந்தால் போதுமானது. மி.கா. முறையில் துண்டத்தின் பருமானம், நீளம் என்பதால் தடையை அளக்க தூண் டத்தையும் நேரத்தையும் அளக்க வேண்டியுள்ளது. லாரன்சு முறை (Lorenz method). தடையின் தனி நிலை அளவுக்கு, லாரன்சால் 1873ஆம் ஆண்டு முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்ட இம்முறை, பல ஆய் வாளர்களால் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. லாரன்சு முறையில் தடையின் தனிநிலை அளவை அளத்தல். ஒரு கம்பிச்சுருளின் நடுஅச்சில் நிறுத்தப் பட்டுள்ள வட்ட வடிவமான உலோகத்தட்டு சீரான வேகத்தில் சுழற்றப்படுகிறது. கம்பிச்சுருளுடன், ஒரு தாழ்தடை, தொடர்நிலை யில் இணைக்கப்பட்டுள்ளது. தாழ்தடையின் ஒரு 3949999004069940036 சுழலும்தட்டு www படம் 1, லாரன்சு முறையில் தடையின் தனிநிலை அளவை அளத்தல் துல்லியமான கால்வனாமானி முனையில் ஒரு (galvanometer) இணைக்கப்பட்டு கால்வனாமானி யின் முனை சுழலும் தட்டின் நடுவில் அழுத்திக் கொண்டுள்ள சிறிய தொடியுடன் (brush) இணைக் கப்பட்டுள்ளது. தாழ்தடையின் மறுமுனை சுழலும் தட்டின் ஓரத்தில் அழுத்திக் கொண்டுள்ள மற்றொரு தொடியில் இணைக்கப்பட்டுள்ளது. தட்டு கம்பிச்சுருளின் புலத்திற்குச் ( field) செங் குத்தாக அமைந்திருப்பதால், தட்டு சுழலும்போது மின்னியக்குவிசை தூண்டப்படுகிறது. தாழ்தடை Rஇல் கம்பிச் சுருளின் மின்னோட்டம் I பாய்வதால் ஏற்படும் மின்னழுத்த வீழ்ச்சி, வீழ்ச்சி, தூண்டப்பட்ட மின்னியக்குவிசையை எதிர்க்கும் வகையில் தட்டின் மேலுள்ள தொடிகளிலிருந்து, தாழ்தடை Rக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே தூண்டப்பட்ட மின்னியக்குவிசை, மின் அழுத்த வீழ்ச்சிக்கு, அதாவது, I. R. வீழ்ச்சிக்குச்சரிசமமாகும் போ து, கால்வனாமானியில் மின்னோட்டம் பாயாது. எனவே அதில் விலக்கமும் ஏற்படாது. தட்டிற்கும், கம்பிச்சுருளிற்கும் இடையேயுள்ள பிறிதின் தூண்டலை (mutual inductance) M எனக் கொள்வோம். அதாவது, ஒரு செ. கி. நொ. மின் காந்த அலகு மின்னோட்டம் கம்பிச்சுருளில் பாயும் போது தட்டில் செங்குத்தாக ஏற்படும் காந்தப் பெருக்கு (magnetic flux) M. எனவே I அலகு மின் னோட்டம் கம்பிச்சுருளில் பாயும் போது, தட்டை வெட்டும் காந்தப் பெருக்கு M.I. வரிகள். கால்வனாமானியில் மின்னோட்டம் பாயா வண்ணம் தட்டின் வேகத்தை தேவைப்பட்டால் மின்னோட்டம். I ஐயும், தடை R ஐயும் மாற்றி மாற்றலாம். .