பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலகு குத்தல்‌ 293

இல்லாமல் அறுவை மருத்துவம் செய்ததில் 90 விழுக் காடு வெற்றி கிட்டியுள்ளது. இப்புதிய முறையால் வழக்கத்திலுள்ள உணர்வகற்றும் முறையில் ஏற் படும் கேடுகளும், பின்விளைவுகளும் பெருமளவில் தவீர்க்கப்பட்டன. அதுமட்டுமன்றி இம்மருத்துவ முறைக்குப் பல மின்னியல் கருவிகளும் கண்டுபிடிக்கப் பட்டன. எனவே மருத்துவர்கள் பல நிமிடங்கள் கைகளினால் ஊசியைத் திருகி மருத்துவம் செய்யும் நிலை மாறியது. அப்பணியை மின்னியக்கக் கருவிகளே செய்யத் தொடங்கின, "நீலச்சாவு" (blue death ) என்ற உணர்வுப் புள்ளியில் ஊசி குத்தியதும் இதய இயக்கம் அடங்கி வருவதைக் கண்கூடாகக் கண்டனர். ஜப்பானில் உள்ள ஒசாகா மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் திரு. மஷயேஷி ஹைடோ, எம்.டி., (Dr. Masayoshi Hyodo-M.D.) ஐயாயிரத்திற்கு அதிகமான பேர்களுக்கு ஊசி உணர்வுத் தூண்டல் மருத்துவம் அளித்து பலதரப் பட்ட வலிகளைக் குறைத்தார். பீக்கிங் நகரில் செஓ-பு-யூ (Chae-pu-yu)வின் தலைமையில் ஒரு மருத்துவக் குழு 175 பள்ளிகளில் உள்ள 168 காதுகேளா மாணவர்களைக் காது கேட்க வைத்தும், 149 ஊமை மாணவர்களைப் பேச வைத்தும் இச்சிகிச்சை முறையில் சாதனை புரிந்துள்ளார். சோவியத் நாட்டில் உள்ள கோர்கி (Gorky) என்றமருத்துவ மனையில் எண்ணூறுக்கும் அதிகமான நோயாளிகளுக்கு ஊசி உணர்வுத் தூண்டல் சிகிச்சை அளித்ததில் எண்பது விழுக்காட்டினர் முழுவதும் குணம் அடைந்தனர். பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் லூயீஸ் மோஸ் (Dr. Loues Moss) தன்னுடைய அலகு குத்தலும் நீங் களும் ( Acupuncture and You) என்ற நூலில் வாத சம்பந்தமான நோய்களுக்கு இதைவிடச் சிறந்த ஒரு சிகிச்சை முறை இல்லை என்று கூறுகிறார். அலகு குத்தல் உடலில் வேலை செய்யும் முறை உடல் கூறு அடிப்படையில் இதுவரை விளக்கப்பட வில்லை. இஃது ஓர் அனுபவ சிகிச்சை முறையே என்று உலகப் புகழ் பெற்றவரும், நோபல் பரிசு அடைந்தவருமான ருஷ்ய உடல் கூறு இயல் நிபுணர் இவான் பாவ்லால் குறிப்பிடுகிறார். கொரிய அரசாங்கம் இந்த முறையில் சற்றே சுவனம் கொண்டு பேராசிரியர் டாக்டர் கிம்பான்- கான் (Dr Kimbon - Khan) என்பவர் தலைமையில் ஓர் ஆராய்ச்சிக் குழு அமைத்து ஏராளமான பொருள் அலகு குத்தல் 293 செலவில் நவீன அறிவியல் கருவிகளின் உதவியால் ஆராய்ந்தது. மனித உடலில் தோலுக்குக் கீழ், கண்ணுக்குப் புலப்படாத கோடுகளும் முனைகளும் இருக்கின்றன; ஆனால் இது நோய்களைப் போக்கும் தன்மை விளங்காத புதிராகவே உள்ளது என்று கிம் பான்கான் தமது அறிக்கையில் கூறினார். இந்தச் சிகிச்சை முறையால் நோயாளி குணமடை கிறார் என்பது உண்மைதான். ஆனால் ந்த உண்மைக்கு விளக்கமான அறிவியல் ஆதாரம் ல்லை என்று ஐரோப்பிய மருத்துவமுறை கருது கிறது. இயற்கையின் செயல் நெட்டாங்குப் பாதை களில் எவ்வாறு செயல்படுகிறது என்பது இன்னும் விளங்காத புதிராகவே உள்ளது. இம்மருத்துவ முறையின் நோய் நீக்கும் ஆற்றல் மற்ற எந்த மருத்துவ முறையைக் காட்டிலும் வேக மாகவும், சீராகவும் இயற்கையோடு இயைந்திருப்பது அனுபவ வாயிலாக அறியப்பட்டது. மேலை நாட்டு மருத்துவ அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து இதை அறிவியல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறார்கள். பிரான்சு, ஜப்பான், தைவான், கொரியா போன்ற நாடுகளில் இந்த மருத்துவ முறையைக் கற்றுத் தரும் கல்லூரிகள் தோன்றியுள்ளன. உடல் உடல் உறுப்புக்களின் இயக்கங்களையும், மாற்றங் களையும் கட்டுப்படுத்தவும், சீராக்கவும் கூடிய உயிர் வேதியியல் பொருள் (master-factor) ஒன்று உயிரினங் களில் இருப்பதாகச் சீனர்கள் கருதினர். இதை அவர் கள் கி-யூ-ஹா (chi-yu-hua) உயிராற்றல் என்கிறார் கள். இந்த உயிராற்றல் உடலில் பன்னிரண்டு இணை பாதைகளை அமைத்து அப்பாதைகள் வழி உறுப்புகளின் இயக்கக் கதியினைப் பாது காத்து ஒழுங்கு நிலையில் செயல்பட உதவுகிறது. மனித உடலில் உள்ள முக்கிய உறுப்புகளான. இதயம். நுரையீரல், இரைப்பை, சிறுகுடல், சிறுநீரகம், மண்ணீரல், வோர் உறுப்பையும் பாதுகாக்கத் தனித்தனியாக இந்த உயிராற்றல் பாதையமைத்துச் செயல்பட்டு வருகிறது. அதைத் தவிர ஒரு தனிப்பாதை நடுமுது கிலும், மற்றொன்று முன்புற உடலின் நடுப்பகுதி யிலும் உள்ளன. ஒவ்வொரு பாதையிலும் உயிராற்றல் செல்லும் பாதையை 'நெட்டாங்குப் பாதைகள்' (meridian lines) என்கிறார்கள்.இம்மருத்துவ முறைக்கு இப்பன்னிரண்டு இணைப் பாதைகளும், இரண்டு தனிப் பாதைகளும் ஆக மொத்தம் பதினான்கு பாதைகள் மிகவும் சிறப்பான பாதைகள் ஆகும். கல்லீரல் போன்ற ஒவ் இந்தப் பதினான்கு பாதைகளில் முந்நூற்று அறு பத்தோரு உணர்வு முனைகள் உண்டு. தற்பொழுது