பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 அலகு குத்தல்‌

298 அலகு குத்தல் பிடிக்கலாம். 'ஷன்-மின்' என்னும் புள்ளியில் ஓர் ஊசியைச் செலுத்தி விதிப்படி திருகினால் இரு நூற்றைம்பது முதல் முந்நூறு மைக்ரோ வோல்ட் மின் அழுத்தமும், மூன்று முதல் ஆறு அதிர்வெண் அலை வீச்சும் உண்டாகும். இது மூளையை வந்த டைந்தவுடன் உறக்கத்தையோ அல்லது மயக்கத் தையோ உண்டாக்கும். ஒருவனுக்கு வயிற்றுவலி இருப்பதாகக் கொள்வோம். அவன் வயிற்று வலிக் குக் காரணம் "ஹைட்டிரோக் குளோரிக் அமிலம்" அதிகரிப்பினால் ஏற்படுவதாக இருந்தால் உடனே எச்.2. ஏற்பி (receptors) அமைதிப்படுத்தும் "ஜுசானில்' என்னும் ஊசி உணர்வுத் தூண்டல் முனைகளில் இரண்டு ஊசிகளைக் கொண்டு "யூ-பு" முறையில் திருகினால் சில வினாடிகளில் கேந் திரத்தை அமைதிப்படுத்தி ஹைடிரோக் குளோரிக் அமிலச் சுரப்பை நிறுத்தி ஏற்கனவே சுரந்துள்ள அமிலத்தின் அமிலத் தன்மையைக் குறைக்கச் சில எண்ணெய்களைச் சுரக்கச் செய்து வலியை அகற்றி விடலாம். ஊசி உணர்வுத் தூண்டல் முனைகளில் ஊசி செலுத்தி மருத்துவர்களின் தேவைக்குத் தக்க வாறு மின் துடிப்பை மாற்றி மூளைக்கு அனுப்பி னால் மூளை நோயின் தன்மைக்கு ஏற்பச் சில வேதியியல் பொருள்களை அது உடலில் உண்டாக் கும். அல்லது சில வகை ஊக்கிகளை உற்பத்தி செய்ய வழி வகுக்கும். மற்றும் சில புள்ளிகளில் ஊசி செலுத்தினால் 'டோபமின்' (dopamine), செரோட் டோனின் (serotonin) 'நார்-எப்பி-நெஃபிரின்' (Nor epi-nephrine) போன்ற உயிரியல் வேதிப்பொருள்கள் உண்டாகும். இவ்வகை உயிரியல் மின் அணுக்களில் 'டோபமின்' என்பது வாதமுடக்கு நோய்களுக்கு மிகவும் பயனுடையது. "நார் - எப்பி-நெஃபிரின்' இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. 'செரோட் டோனின்' தூக்கத்தையும் விழிப்பையும் கட்டுப் படுத்தும் தன்மையினைக் கொண்டுள்ளது. மற்றும் சில உணர்வு முனைகளில் ஊசியால் குத்தித் திருகி னால் அது அதிக அளவு 'அட்ரினல்' சுரப்பதைக் கட்டுப்படுத்தி இரத்தத்தில் அதன் விளைவால் விளைந்த 'வாக்ட்டேட்டு' ([actate) என்னும் பொரு ளின் அளவைக் குறைத்துச் சிலவகை மன நோய் களைக் குணப்படுத்தும். வேறு சில முனைப்புகளில் ஊசியால் உணர்வு படுத்தப்பட்டால் உடற் செல் களில் உள்ள பல இழைகளைக் கொண்ட 'நியூக் கிளிக்' அமிலங்கள், இன்ட்டர்ஃபெரான்' (inter- feron) என்ற புரதப் பொருளை உண்டுபண்ணி உடலில் வந்தடைந்த நச்சு உயிரினங்களை அழித்து நோயை நீக்குகின்றன. அதேபோல் உறுப்பு களில் ஏதேனும் சிதைவு அல்லது அடி, வெட்டுக் காயம் போன்றவை ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள திசுக்கள் ஒரு வகை மின் துடிப்புகளை உண்டு பண்ணி மூளைக்கு அனுப்புகின்றன. இம்மின் துடிப் புகள் மூளையை வந்தடைந்தால்தான் பாதிக்கப்பட்ட உறுப்புகளில் வலி உணர்வு உண்டாகிறது. இல்லை யேல் வலி தோன்றவே தோன்றாது. இம்மின் துடிப்பை மூளைக்குச் செல்லாமல் தடைப்படுத்தும் ஊசி உணர்வு தூண்டல் முனை எது என்பதைத் தெரிந்து கொண்டு ஓர் ஊசியால் முறைப்படி குத்தித் திரு உணர்வுபடுத்தினால் மின் துடிப்புச் செல்லும் வழியில் குறுக்கீடு (short circuit) ஏற்பட்டு மின் துடிப்பு மூளைக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டு, வலி உணர்வு தோன்றாமல் இருக்கும். இம்முறையைப் பயன்படுத்தியே இன்று சீனாவில் இலட்சக்கணக் கான அறுவை மருத்துவம் செய்கிறார்கள். மற்றும் சில ஊசி உணர்வு தூண்டல் முனைகளில் ஊசி செலுத்தித் திருகினால் நமது உடலில் உள்ள திசுக் களில் காணப்படும் 'சின்த்தெட்டேஸ்' (synthetase), 'அராகி டோனிக்' (arachidonic) ஆகிய அமில வகை களை அது கட்டுப்படுத்தி 'பிராஸ்ட்டோ கிளாண் டின்' (prostaglandin) என்னும் உயிர் வேதியியல் பொருள்கள் உண்டாவதைக் குறைத்து வலி உணர்வு அரும்புகளில் (pain receptors) தோன்றும் வலியைப் போக்கும். வேறு சில ஊசி உணர்வுத் தூண்டல் முனைகளில் ஊசியைக் குத்தினால் அது செயற்கை வலி அகற்றியான (analgesic effect). ஆஸ்பிரின் (aspirin), பாரா அசெட்டமால் (para acetamol) போன்றவைகளைப் போல் என்கிஃபாலின் (enkepha- lin) என்னும் வேதிப் பொருளை உடலில் உண்டாக்கி வலியை அகற்றும். சில ஊசி உணர்வு முனைகள் நேரடியாகச் செயல்படும். மற்றும் சில, முனையைத் தூண்டி முனை வழி உடலில் உள்ள நிணநீர்ச் சுரப்பி, மண் ணீரல், உள்நாக்கு, வெள்ளை அணுக்கள், சில வகை உயிர்வினை ஊக்கிகள் ஆகியவற்றை இயக்கவும், நோய்க் கிருமிகளை அழிக்கவும் தேவையான பலவித எதிர்ப்பொருள்களையும், சிலவகை 'இயங்கு நீர்', ஷிஸ்டமின்' ஆப்ஸானின், "வைசின்", பிரஸிப் டின்ஸ் போன்ற இயற்கை வேதிப்பொருள் களையும் உண்டுபண்ணி நோய்க் கிருமிகளை அழித்து நோயைக் குணப்படுத்தும். "ஷீன்-ஜீ-யூ" என்று சீன மொழியில் அழைக்கப் படும் இந்த ஊசி உணர்வுத் தூண்டல் மருத்துவ முறை சீனர்கள் கையாண்ட அதே காலத்தில் உலகத் பாசுங்களில் தில் பல பெயர்களில் இருந்து வந்ததாக வரலாறு கூறுகின்றது. பல் இந்திய மருத்துவ சாத்திரத்தில் கூறப்படும் 'சக்ராஸ்", "படுவர்மம்", "தொடுவர்மம்" என் பவைகளும், ஜப்பானில் இன்று ஜப்பானில் இன்று கையாளப்படும் "ஜுடோ", கொரிய நாட்டில் உள்ள "கயுன்கர்க்"