அலகு, பறவை 299
அரேபியர்களின் சூட்டு மருத்துவமுறை முதலியவை யும் இதன் அடிப்படைத் தத்துவத்தைக் கொண்டவை. இந்த மருத்துவ முறையில் கூறப்படும் "கி- யுஹா" என்ற உயிராற்றல் சித்தாந்தம்,டாயு- ஹிங்' என்னும் பஞ்ச பூதக் கொள்கை, "பீசிங்" என்ற நாடி முறை அனைத்தும் இந்திய மருத்துவச் சித்தாந் தங்களின் தழுவல்களாகவே காணப்படுகின்றன. நம் நாட்டில் யானைப் பாகர்கள் அங்குசத்தின் கூர் ஊசியால் யானைகளின் உடலில் உள்ள மறை விடங்களைக் குத்தி அவற்றைத் தங்கள் கட்டளைக் குட்படுத்திப் பணியச் செய்கிறார்கள். இந்த மறை விடங்களை "நிலா" (nila) என்று வட மொழியில் கூறுவார்கள். அவ்விதமே பசுக்களுக்கும், மற்றைய உயிரினங்களுக்கும் இந்த ஊசி உணர்வு முனைகள் உள்ளன. நமது "கோய வாஹி" என்னும் கிரந்தத்தில் குறிக்கப்பட்டுள்ள "ஸ்ரோதங்கள்" என்னும் கண் ணுக்கு புலப்படாத கால்வாய்களே சீனர்களின் ஊசி உணர்வுத் தாரைகள். "ஸுச்ருத ஸம்ஹிதை" என்ற இந்திய நூலில் எழுதப்பட்டுள்ள நூற்று ஏழு மர்ம மான இடங்கள் தான் சீனர்களின் ஊசி உணர்வு முனைகளின் இருப்பிடம். இவை அன்று யோகி களுக்கே வசமாகக் கூடியவையாக இருந்ததால், மறைந்து வழக்கழிந்து போயின. நூலோதி கே.அல. First 1. Essentials of Chinese Acupuncture, Edition, Beijing College of Traditional Chinese Medicine, Shanghai College of Traditional Chinese Medicine,Nanjing College of Traditional Chinese Medicine, The Acupuncture Institute of the Academy of Traditional Chinese Medicine, Foreign Languages Press, Beijing, China, 1980. 2. An outline of Chinese Acupuncture, The Academy of Traditional Chinese Medicine. Foreign Languages Press, Peking 1975. 3. Fianming Zhenjiuxue (Elementary Acupuncture), Section of the The Acupuncture Research Nanking Academy of Chinese, Ji angesu People's Publishing House, Nanking, 1959, 4. Zhulian Xin Zhenjiuzue (New Acupuncture). People's Hygiene Publishing House, Peking. 1954. அலகு, பறவை 299 5. Husson, S. lbert, Huang, Di Nei., Jing. Su Wen., Association scientifique des Medecines Acupunc- ture de France, 1973. அலகு, பறவை பல்வகைப்பட்ட இயற்கை நிலையும் வெப்ப, வானி லையும் கொண்ட உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சிறப்பினங்களைச் சேர்ந்த பறவைகள் வாழ்கின்றன. தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவை தகவமைப்புகளைப் (adaptations) பெற்றிருக்கின்றன. பறவைகளின் அலகுகள் (beaks) அவை உண்ணும் உணவுக்கேற்பவும் உண்ணும் முறைக்கேற்பவும் தக லமைந்துள்ளன. பறவைகளின் தாடை எலும்புகள் நீண்டு கொம்புப் பொருளாலான உறையினால் மூடப்பட்டு அலகுகளாக மாறியுள்ளன. இவற்றில் பற்கள் இல்லை. வெவ்வேறு பறவை இனங்களில் அலகுகள் வெவ்வேறு அமைப்பைக் கொண்டுள்ளன. ஊலுண்ணும் பறவைகளின் அலகுகள். ஊனுண்ணி களின் அலகுகள் பொதுவாக வலிமை மிக்கவை; நீளம் குறைந்தவை; வளைந்த அமைப்புப் பெற்றவை; கூரிய விளிம்புடையவை. இந்த அலகுகள் வலிய தாடைத்தசைகளினால் இயக்கப்படுகின்றன. இவ் வகை அமைப்புடைய அலகுகள் இப்பறவைகளுக்கு இரையாகும் விலங்குகளின் தசைகளைப் பிய்த் தெடுக்கப் பயன்படுகின்றன. வகை இப் இந்தியாவில் பல்வேறு ஊனுண்ணும் பறவைகள் உள்ளன. அவற்றில் கழுகுகள், வல்லூறு கள், பருந்துகள் ஆகியவை சிறப்பானவை. பறவைகள் உயிருள்ள சிறு விலங்குகளை வேட்டை யாடி உண்ணும். பிணந்தின்னிக் கழுகுகள் (vultures) உயிருள்ளவற்றை வேட்டையாடுவதில்லை; இறந்த விலங்குகளின் உடல் தசைகளையே உண்டு வாழ் கின்றன. பொதுவாக ஊனுண்ணும் பறவைகளின் மேல் அலகு கூர்மையாகவும், முன்பகுதி கொக்கி போல் வளைந்தும் காணப்படும். இரையாகும் விலங்குகளின் உடலைக் குத்திக் கிழிக்க இவற்றின் கூரிய அலகுகள் பயன்படுகின்றன. நத்தை உண்ணிகளின் அலகுகள். பொதுவாக இப் பறவைகள் மெல்லுடலிகளின் ஓட்டிைைன உடைத்து உள்ளிருக்கும் உடலை உட்கொள்வதற்கேற்ற அமைப் பைப் பெற்றுள்ளன. நத்தைக் குத்தி நாரையின் (open billed stork) மேல் அலகிற்கும் கீழ் அலகிற்கும் இடையே ஓர் இடைவெளி உள்ளது. இப்பறவையின்