பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அமில எதிர்ப்பிகள்

அமில எதிர்ப்பிகள்

இரைப்பை, சிறுகுடல் ஆகிய உணவுப் பாதைகளில், அமில மிகைத்தலால் ஏற்படும் புண்களை ஆற்றக் கையாளும் மருந்துகளில் அமில எதிர்ப்பிகள் (antacids) முக்கியப் பங்காற்றுகின்றன. வயிற்று அமில எதிர்ப்பிகள், வயிற்றில் உள்ள அமிலத்தைக் குறைக் கவோ, முழுமையாக அகற்றவோ. முறிக்கவோ உபயோகிக்கப்படும் மருந்துகளாகும். மருத்துவர்கள் இதனை வயிற்றுப்புண், அதி அமிலத் தன்மை (hyperchlorhydria ) முதலியவற்றுக்குக் கையாளுகிறார்கள். இவை பெரும்பான்மையான மக்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. தவறான பிரசாரங்களின் விளைவாக ஏப்பம் போன்ற மிகச் சாதாரண வயிற்று நோய்களுக்குக் கூட இவ்வகையான மருந்துகளை மக்கள் உபயோகிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமறியா மக்களும் தாமாக அமில் எதிர்ப்பிகளைப் பெருமளவில் உபயோகிக்கிறார்கள். அமில எதிர்ப்பிகள், அமிலத்தன்மை கூடுவதால் (pH< 3.5) ஏற்படும் வயிற்றுப்புண் விளைவிக்கும் வலியைக் குறைக்கும் தன்மை வாய்ந்தவை. இந்த வலிநீக்கும் தன்மை, இரைப்பைப்புண்ணை, இரைப்பை அமிலம், பெப்சின் (pepsin) ஆகியவற்றின் அரிப்புத் தன்மை யில் இருந்து பாதுகாப்பதால் ஏற்படுகின்றது.

சிறந்த அமில எதிர்ப்பிக்கான குணங்கள். அவை யாலன, நீரில் கரையாமை, கார அல்லது அமிலத் தன்மையில்லாது நடுநிலையில் இருத்தல் (neutral), இரைப்பை அமிலங்களோடு சேர்ந்து அரிப்புத் தன் மையைக் கட்டுப்படுத்தும் குணம், அதிக நேரம் வினை ஆற்றும் குணம், உட்கொண்டவுடன் வேக மாகச் செயல்படும் தன்மை, வயிற்றுப்போக்கும், மலச் சிக்கலும் ஏற்படுத்தாமை, அமில எதிர்ப்பி உட் கொள்ளுவதை நிறுத்தியவுடன் பெருமளவில் அமிலம் சுரப்பதை ஏற்படுத்தாமை, உடலின் அமில - கார (acid base balance) சமத்தன்மையை மாற்றாமை, சிறுநீரகத்தில் சுண்ணாம்பு போன்ற காரைக் கற் களை உண்டுபண்ணாமை என்பனவாகும்.

அமில எதிர்ப்பிகளின் வகைகளாவன,

(1) இரத்தத்தோடு கலந்து செயலாற்றும் வகை (Systemic Antacids).

எடுத்துக்காட்டு, சோடியம் க்ை கார்பனேட்டு (Sodium-bi-carbonate).

(2) இரத்தத்தோடு கலவாது செயலாற்றும் வகை Non Systemic Antacids).


எடுத்துக்காட்டு, அலுமினியம் ஹைடிராக்சைடு (aluminium hydroxide).

இரத்தத்தோடு கலந்து செயலாற்றும் வகை அமில எதிர்ப்பிகள் இரத்தத்தின் அமில கார சம்த் தன்மையைப் பாதிக்கும்; ஆகையால் இரத்தத்தோடு கலவாத அமில எதிர்ப்பிகளே இரைப்பைப்புண், அதி அமிலத்தன்மை முதலியவற்றுக்குச் சிறந்தவை யாகும்.

இரத்தத்தோடு கலவாத அமில எதிர்ப்பிகள்

அலுமினியம் ஹைடிராக்சைடு. இதன் அமில சமன் படுத்தும் தன்மை மிகவும் தாமதமானது. இது பெப்சின் செயலாற்றும் தன்மையைக் குறைக்காது. இது மலச்சிக்கலை ஏற்படுத்தும் குணம் பெற்றிருப் பதால் இத்துடன் மக்னீசியம் ட்ரைசிலிக்கேட்டு (magnesium trisilicate) என்னும் மருந்தைச் சேர்த்துக் கொடுக்கும் மரபு உள்ளது. குடலில் உள்ள பாஸ் பேட்டுகள் உறிஞ்சப்படுவதைத் தவிர்க்கும் குணத் தால் இது ஆஸ்டியோ மலேசியா (osteo malasia) என்னும் எலும்பிளகல் நோய் ஏற்படக் காரண மாகிறது.

அலுமினியம் பாஸ்பேட்டு (Aluminium Phosphate.) இவ்வமில எதிர்ப்பிக்குக் குடலில் பாஸ்ஃபேட்டுகள் உறிஞ்சப்படுவதைத் தவிர்க்கும் குணமில்லை.

டைஹைட்ராக்சி அலுமினியம் அமைனோ அசெட் டேட்டு (Di-Hydroxy Aluminium Amino Acetate), இதற்கு விரைவாகச் செயலாற்றும் தன்மை உண்டு.

மக்னீசியம் ட்ரைசிலிக்கேட்டு. இது மெதுவாகச் செயலாற்றத் தொடங்கினாலும் தீண்டநேரம் செயலாற்றும் தன்மை வாய்ந்தது. மேலும் இது இரைப்பையில் கூழ் போன்று மாறுவதால் புண்களின் மேல் படர்ந்து மேற்கொண்டு புண்கள் பெருகுவதைத் தடுக்கின்றது. எனினும் இது லயிற்றுப் போக்கை விளைவிக்குமாகையால் இதனை அலுமினியம் ஹைட் ராக்சைடுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

மக்னீசியம் ஆக்சைடு, ஹைட்ராக்சைடு (Magnesium Oxide, Hydroxide). இவை விரைவாகச் செயல் படத் தொடங்கி நீண்ட நேரம் செயலாற்றும் தன்மை வாய்ந்தவை. இவற்றால் ஏற்படும் வயிற்றுப் போக் கைக் கால்சியம் உப்புகளைச் சேர்ப்பதனால் தவிர்க் கலாம்.

மக்னீசியம் கார்பனேட்டு (Magnesium Cari nate). மருத்துவர்களால் இது ஒரு சிறந்த அம் எதிர்ப்பியாகக் கருதப்படுகின்றது.