பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 அலங்கார மீன்கள்‌

312 அலங்கார மீன்கள் மீன்கள் கூட்டம் கூடி வாழும் (gregarious). இவை களின் கூட்டங்களைப் பெரும்பாலும் நீர்மேற்பரப் பில் காணலாம். இம்மீன்களை ஆழம் குறைவான தொட்டிகளிலேயே வளர்க்கலாம். வாயின் முனை யில் இரண்டு நீளமான உணர் இழைகளுடன் உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் நடுவில் ஒரு தடித்த நீளவாட்டான கரும்பட்டை கண்முதல் வால் வரை நீண்டுள்ளன. பரவு. டேனியோ மலபாரிக்கஸ் (danio malaba- ricus) என்னும் சிறிய மீன் பரவு என்றழைக்கப்படு கிறது. இது ஏறத்தாழ 2 அங்குலம் வரை வளரும். இதற்கு உணர் இழைகள் இல்லை. செவுள் மூடிக்கு அருகிலிருந்து (operculumn) வாலின் பின் முனை வரை ஒவ்வொரு பக்கமும் மூன்றுக்கு மேற்பட்ட அகன்ற நெடுக்கு வாட்டான நிறப் பட்டைகள் காணப்படுகின்றன. நெமாக்கிலஸ் (Nemachilus). இம்மீன் சீரான உருளை போன்ற உடலுடையது. 2 முதல் 21 அங் குலம் வரை வளரும். இதன் செதில்கள் மிக நுண்ணியவை. இதன் வாயில் அருகில் 4 சிறிய உணர் இழைகள் உள்ளன. உடலின் பக்கவாட்டில் பல அகன்ற நிறப்பட்டைகள் குறுக்காக அமைந்துள் ளன. தலைப்பகுதியிலும், உடலின் மேலும் பல அகன்ற அடர் நிறப் பட்டைகள் குறுக்கு வாட்டில் அமைந்துள்ளன. பன்ஷியஸ் (Puntius). இம்மீன் விரைந்து இனப் பெருக்கம் செய்ய வல்லது. இது ஏறத்தாழ 2 முதல் 3 அங்குலம் வளரும். இதில் உணர் இழைகள் இல்லை. உடலின் மேல் குறுக்கு வாட்டில் அடர்த்தி யான பல நிறவரிகள் உள்ளன. செவுள் மூடியின் பின்புறம் ஒன்றும் வாலின் அருகில் ஒன்றுமாக 2 பெரிய கரும்புள்ளிகள் உள்ளன. பக்கக்கோடு தெளி வாக இல்லை. பார்பஸ் (Barbus). து சிறு கெண்டை (small carp) அல்லது மின்னோ (minnow) என்று அழைக்கப்படுகிறது. இதன் செவுள் மூடி தடித்துத் தங்க நிறமாகக் காணப்படுகிறது. தலையில் செதில் கள், உணர் இழைகள் ஆகியவை இல்லை. உடலின் மேல் உள்ள செதில்கள் பெரியவை. இதன் முதுகு உயரமாக, முதுகுப்புறமிருந்து வயிற்றுப் பக்கம் வரை அகன்ற நிறப்பட்டைகளுடன் காணப்படும். துடுப்புகள் வெண்மை அல்லது மஞ்சள் நிறமானவை. ராஸ்போரா டேனிக்கோனியஸ் (rasbora dani- conius). இது தென்னிந்தியாவில் மிகுதியாகக் காணப்படும் சிறுமீன் ஆகும். இது 3 அங்குலம் நீளம் வரை வளரும். இதற்கு உணர் இழைகள் இல்லை. கண்ணுக்கு அருகில் இருந்து புறப்படும் ஒரு கருநிற வரி சிறிது அகன்று தொடர்ந்து வால் வரை செல்கிறது. செதில்கள் பெரியவை. இது வளர்ப்பதற்கு ஏற்ற அலங்கார மீனாகும். திலேபிக் கெண்டை (Tilapia mossambia). டிலா பியா என்னும் ஆப்பிரிக்க மீன் 1952 இல் இந்தியாவில் புகுத்தப்பட்டு நன்கு பெருகி விட்டது. இது நீர்ப் பாசிகளை உண்ணும். முதுகுப்புறம் அடர்த் தியான நிறமும், பக்கங்களில் பழுப்பு நிறமும் கொண்டிருக்கும். இது முட்டைகளைத் தனது வாயி லேயே வைத்துக்கொண்டு குஞ்சுபொரிக்கும் வரை எதுவும் உண்ணாமல் பட்டினி கிடக்கும் உன்னத மான தாய்மையுணர்வை உடையது. எனவே இதனை வாயினால் குஞ்சு பொரிக்கும் ஆப்பிரிக்க மீன் (African mouth breeder) என்கிறோம். மற்ற அலங்கார நன்னீர் மீன்கள் ரோஸி டெட்ரா (rosy tetra) - ஹைபஸ்ஸோ- பிரிகோர் ரோசேசியஸ் (hyphessobrycore rosaceous); இரத்தத் துடுப்பு (blood fin) - அபியோசாராக்ஸ் ரூப்ரிபின்னல், அர்ஜென்டைனா மீன்; செர்ப்பா டெட்ரா (serpa tetra), பிரேசில் நாட்டு மீன்; மச்சக்கெண்டை (அ) புலிக்கெண்டை (tigerbarb), பார்பஸ் மஹிகோலா (barbus mahecola) பென்சில் மீன் (pencil fish) - போசிலோ-ப்ரைக் கான் ஆரேட்டஸ்கினியா, அமேசான் மீன்; எக்ஸ் கதிர் மீன் (x - ray fish) சுடர் ஒளி (glow light) நியான் டெட்ரா (neon tetra), அமேசான் மீன் நீல குராமி (blue gourami), மலேயா மீன்; குள்ள குராமி (dwarf gowrami) - ட்ரைக்கோ கேஸ்டர் ஃபேசியேட்டா; ஆர்லிகன் - ராஸ்போராஹிடரோமார்பா, மலேயா மீன்; (orlican) குள்ள கெண்டை (dwarf carp) - ஸ்டிக்மா (barbus stigma) - பார்பஸ் அம்பட்டன் கத்தி (barber's knife) - நோடாப் டிரஸ் (notopterus); ஆறாட்டி (orange chromides); முத்து கௌராமி (pearl gowrami) உளுவை (gobius)