பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலங்கார மீன்கள்‌ 313

ஆ) அலங்காரக் கடல் மீன்கள் (Ornamental marine fishes) வரிக்கெண்டை (Zebra fish). இது ஒரு தட்டை யான இந்திய மீனாகும். இதன் உடலில் உள்ள அடர்த்தியான குறுக்கு நிறப்பட்டைகள் நெருக்க மாக இருப்பதால் இதனை வரிக்கெண்டை என் கின்றனர். முதுகுத் துடுப்பு, மலப்புழைத்துடுப்பு, வால் துடுப்பு ஆகியவை இணைந்து ஒரு தொடர்ச்சி யான செங்குத்துத் துடுப்பு ஆகியுள்ளன. பேழை மீன் (trunk fish or coffer fish). ஆஸ்ட்ரேசியான் (ostracion) பேழை மீன் என்றும் பெட்டக மீன் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உடலிலும் தலையிலும் உள்ள செதில்கள் இறுகிக் கடினமாக இருத்தலால், உடலானது ஒரு பேழையி னுள் பாதுகாக்கப்பட்டிருப்பது போல் உள்ளது. தலையிலும் உடலிலும் உள்ள 6 பக்கங்களைக் கொண்ட பெரிய செதில்கள் (hexagonai scales) அடுத்தடுத்துப் பொருந்தி (juxtaposed) ஒரு கடின மான ஓடு போன்ற மூடியாக அமைந்துள்ளன. இம் மீனின் வாய், துடுப்புகள், வால் ஆகியவை மட்டுமே அசைய வல்லவை. தலையின் முன்பகுதியில் ஒரு இணை கொம்பு போன்ற முட்கள் இருத்தலால் இத னைப் பசுமீன் என்றும் அழைக்கின்றனர். இதில் சில இனங்களில் பச்சை நிற உடலும், மஞ்சள் நிற வயிற்றுப் பக்கமும், செம் மஞ்சள் வாலும், உடலின் மேல் பளபளப்பான நீல நிற வரிகளும், அவற்றின் இடையே கரும் பழுப்பு நிறமும் காணப்படும். கோள மீன். (Globe fish). இது புடைத்த பலூன் போன்ற அல்லது கோளம் போன்ற கடல் மீனாகும். டெட்ரடான் (tetradon) என்னும் இம் மீனின் உடல் பழுப்பு நிறமாகவும், அடர் பழுப்பு வரிகளைக் கொண்டும் இருக்கும். இது தண்ணீ ரையோ காற்றையோ விழுங்கி உடலைப் பலூன் போன்று உப்பச் செய்கிறது. உடலின் மேல் முட்கள் உள்ளன. நீண்ட முன் பகுதியிலிருந்து (snout) முதுகுத் துடுப்பு வரை பல வட்டமான அல்லது முட்டை வடிவமான புள்ளிகள் உள்ளன. இம்மீனை நுரையீரல் நோய்க்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர். பல மூளியன் (Trigger fish). பாலிஸ்ட்டிஸ் (Balistes) என்னும் அழகிய மீன் நெருக்கமாக அடுத்தடுத்துப் பொருந்தியுள்ள (juxtaposed) செதில்களையுடையது. இதில் மிகவும் பளபளப்பான நிறங்கள் உண்டு. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துடுப்புகள் மாறு பாடடைந்து முட்களாகியுள்ளன. இம்மீன் தனது தோள்வளையத்தினால் (pectoral girdle) ஒலியெழுப்பு வதாக அறிந்துள்ளனர். உடலின் பக்கங்களில் க அ.க-2 பல நீள வாட்டமான அலங்கார மீன்கள் 313 வண்ணப் பட்டைகள் உள்ளன. தோள்துடுப்பின் அடியில் வயிற்றுப் பக்கத்தில் பல நிறப்புள்ளிகள் உள்ளன. தெரப்பான் (Therapon ). இது கடலில் வாழும் ஒருவகைச்சிறுகெண்டை மீனாகும். இது 10 அங்குலம் வரை வளரும். இதன் வயிற்றுப் பகுதி பளபளப் வெண்மையாகவும், மற்றப் பகுதிகள் அடர் பழுப்பாகவும் இருக்கும். இது மீன் தொட்டிகளில் வளர்க்கச் சிறந்த மீனாகும். Rகு பர் பேடிஸ் (Badis). இது இந்தியாவிலும் பர்மா விலும் மட்டுமே வாழும் சிறு மீனாகும்; மிக அழ கான பலவித நிறங்களையுடையது. பேடிஸ் படிஸ் (Badis badis) என்னும் இனம் ஏறத்தாழ 3 அங்குலம் வரை வளரும். இதன் செவுள் மூடியின் பின் முனை யின் நடுப்பகுதியில் ஒரு பெரிய அடர் புள்ளியும் வாலின் தொடக்கத்தின் மேற்புறம், மையப்பகுதி வயிற்றுப் புறம் ஆகிய இடங்களில் ஒவ்வோர் இடத் திலும் ஒரு பெரிய கரும்புள்ளியும் உண்டு. இதன் உடலின் மேல் குறுக்கு வாட்டத்தில் பல நிறங்களைக் கொண்ட வரிகள் உள்ளன. 7. அம்பாசிஸ் ரங்கா (Ambassis ranga). இது முள் துடுப்பாரை மீன் (spiny rayed fish) எனப்படும் கடல் மீனாகும். இதன் உடல் பக்கவாட்டில் மிகத் தட்டையாகவும், உடல் அரைகுறை ஒளி ஊடுருவத் தக்கதாகவும் (translucent) உள்ளது. துடுப்புகளில் முட்கள் உள்ளன. தோள் துடுப்பின் மேற்புறம் உடலில் சில குட்டையான குறுக்கு நிற வரிகள் உள்ளன. பொதுவாக 6 வரிகள் இருக்கும். செவுள் மூடியின் பின் முனையில் அதன் முதுகுப் பக்கமாக ஒரு பெரிய அடர்புள்ளி (dark spot) உள்ளது. பக்க வாட்டக் கோடு(lateral line)முதலில் சிறிதுவளைந்து பின்னர் நேராகி வால்வரை தொடர்கிறது. குழல் மீன் (Pipe fish). மெலிந்த குழல் போன்ற சிங்நேத்தஸ் (syngnathus) குழல் மீன் என்றழைக்கப்படுகிறது. இதன் தலையின் முன்பாதி யில் உள்ள தாடைகள் இணைந்து நீண்டு குழல் வளையங்களைப் போல் உள்ளன. இதற்குப் பல போன்ற புறச்சட்டகப் பட்டைகள் உடல் முழுவதும் உள்ளன. கடற்பூண்டுகளின் இடையில் வாழ்வதால் இது அச்செடிகளின் சிறு குச்சிகளைப் போன்றுள்ளது. உடல் சூழ்நிலையையொத்த நிறம் கொண்டுள்ளது. இம்மீன் நீந்தும் போது செங்குத்து வாக்கில் நீந்துதல் பார்ப்பதற்கு அழகான தோற்றமாகும். ஆணின் வயிற்றுப்பகுதியில் உள்ள கருவளர்பையில் (broed pouch) பெண் முட்டையிடுகிறது. கடற் குதிரை மீன் (Sea horse). ஹிப்போகேம்பஸ்