அலசிகள் 317
இருபக்கத்தட்டுகள், ஸ்கூட்டா, டெர்கா போன்ற ஆறுதகடுகளால் மூடப்பட்டுள்ளது.இவ்வுயிரி நீரினுள் இருக்கும் சமயம் தன்னுடைய வளைந்த மெல்லிய ஆறு சோடி மார்புக்கால்களைத் திறப்பின் வழியாக வெளியே நீட்டுகிறது. இவ்வுயிரியும் நீரோட்டத்தை உண்டுபண்ணி உணவுப் பொருள்களை வாய்க்குள் கவர்கிறது. வயிற்றின் அடிப்பகுதியில் அண்டச் சுரப்பிகள் காணப்படுகின்றன. லிப்பாஸ் உயிரியில் காணப்படு வதைப் போன்றே இவ்வுயிரியிலும் வாழ்க்கைச் சுழற்சியில் நாப்ளியஸ் லார்வா காணப்படுகின்றன. அலசிகள் மிதக்கும் கலங்களில் பெரும் இழப்பைச் சில சமயங்களில் உண்டுபண்ணுகின்றன. பெருமள வில் இவை கப்பல்களில் ஒட்டிக் கொண்டு வாழ் வதனால், கப்பலின் வேகமும் தடைப்படுகிறது. அலசிகள் கப்பலில் துருப்பிடிப்பைத் தடுக்கப் பயன் படுத்தப்படும் குழைவணப் பூச்சினை ( எளிதா படம் 4. அலசிகளால் தாக்கப்பட்ட உலோகத் தகடு அலசிகள் 317 நீக்கி விடுகின்றன. இதனால் துருபிடித்தல் விரைவாக நடைபெறுகிறது. மேலும் தாம் உயிரோடு இருக்கும் போது மட்டுமின்றி இறந்த பின்பும், சில பாக்டீரி யாக்களை, முக்கியமாக சல்பேட்டைக் குறைக்கும் பாக்டீரியாக்களை, அதிகம் வளரத் துணை செய் கின்றன. இவ்வகைப் பாக்டீரியாக்கள் கடலுக்கடியில் போடப்பட்டுள்ள இரும்புக்குழாய்களுக்குச் சேதத்தை உண்டு பண்ணும். கப்பலில் பயன்படுத்தப்படும். ஆழம் காட்டும் கருவிகளையும் இவ்வலசிகள் பாதிக் கின்றன. பலானஸ் டின்டின்னாபுலம் (balanus tintinna- bulam) போன்ற உயிரிகள் பெருஞ்சேதத்தை உண்டு பண்ணக்கூடியவை. அவசிகளில் மற்றொரு வகை யான மெகலாஸ்மா ஆழ்கடல் தொலைவரிக் கம்பி களில் காணப்படும் மற்றொரு வகை உயிரினமாகும். பலானஸ் நபிலிஸ் (B. nubilis) 7-10 செ.மீ. குறுக்களவும் 12-15 செ.மீ. உயரம் வரையிலும் வளரக்கூடியது. பலானஸ் பலானாய்டஸ் இனத்தின் வடு வெண்மை,சாம்பல், பழுப்பு நிறங்களில் காணப்படும். . பலானஸ் பெர்ஃபோரேட்டஸ் (B. perforatus) ப.எபுர்னியஸ்,(B, eburneus). ப. பவானஸ் (B. balanus) போன்றவை இவ்வினத்தைச் சேர்ந்த உயிரிகளா கும். ஆமை பார்னகிள் என்றழைக்கப்படும் கிலோனி பியா டெஸ்ட்டுபினேரியா (Cheloniba testubinaria) உயிரியானது ஆமைகளின் ஓட்டுடன் ஒட்டிக் கொண்டு, கேரினாவில் உள்ள வேர் போன்ற அமைப்பின் மூலம் ஆமையின் ஓட்டைத் துளைக்கிறது. இத்தகைய சேதங்களிலிருந்து கப்பலைப் பாது காக்கப் பலவழிகளைப்பயன்படுத்துகின்றனர். குறிப் பிட்ட மாத காலத்திற்குப் பின்னர் கப்பலைக் கரைக் குக் கொணர்ந்து அலசிகளைச் சுரண்டிப் பின்னர் பூச்சு செய்து கப்பலின் அடிப்பகுதியைச் சுத்தமாக வைத்திருத்தல் இன்றியமையாததாகும். இதற்கான செலவு கப்பலைப் பொறுத்து மாறுபடுகின்றது. இவ் வாறு நேரமும் பணமும் விரையமாவதை அலசிகள் வளர்ச்சியைத் தடுப்பதால் குறைக்கலாம். கப்பலுக் குப் பூச்சு அடித்தல் பெருமளவில் கையாளப்படு கின்றது. கப்பலின் அடிப்பகுதியில் தாமிரம் அல்லது துத்தநாகத் தகடுகள் நெடுங்காலமாகப் பயன்படுத்தப் பட்டு வந்தன. அலசிகளின் வளர்ச்சியைத் தடுக்க நச்சுத் தன்மையுள்ள உப்புகளை, குறிப்பாக.தாமிரம், பாதரசம், துத்தநாகம் போன்றவற்றைப் பூச்சுடன் கலந்து பயன்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் இந்த நச்சுத் தன்மையுள்ள பொருள்கள் கடல் உயிரினங்களுக்கு ஆபத்தை விளை 'க்கக் கூடியவை என்ற காரணத்தினால் இவ்வாய்வு முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடலில்