பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தத்தோடு கலந்து செயலாற்றும் அமில எதிர்ப்பிகள்

இவை எடுத்துக்காட்டு, சோடியம் பைக் கார்பனேட்டு. எளிதில் நீரில் கரைந்து குடலில் உறிஞ்சப் படும் தன்மை உடையவை. இவை விரைவாகச் செய லாற்றினாலும், குறைந்த நேரமே செயல்படும் தன்மை உடையவை. மேலும் இதனால் இரத்தத் தில் காரமிகைவு ஏற்படும் (alkalosis) வாய்ப்பும் உள்ளது. இரைப்பையில் கார்பன் டை ஆக்சைடு உண்டாவதால் ஏற்படும் ஏப்பத்தால் நோயாளிக்கு வயிற்று வலி குறைந்தது போன்ற எண்ணம் ஏற்பட் டாலும் புண் உள்ள இடத்தில் துளை ஏற்படும் வாய்ப்பும் உண்டு. இவ்வகை அமில எதிர்ப்பிகள் வயிற்றுப்புண். இரத்த அதி அமிலத் தன்மை முதலிய வற்றுக்கும், சிறுநீரைக் காரத்தன்மை (alkalination of urinc) உடையதாக்கவும் பயன்படுகின்றன.

அமில எதிர்ப்பிகளைக் கையாளும்பொழுது கருத்தில் கொள்ள வேண்டியவை

1. பட்டினியாக இருக்கும்பொழுது அமில எதிர்ப் பிகள் சிறிது நேரமே செயலாற்றும். ஆனால் உணவருந்திய ஒரு மணி நேரத்திற்குப்பின் இவை நீண்ட நேரம் செயலாற்றுகின்றன. ஆகையால் இவற்றை உணவுக்குப்பின் 1 மணி நேரம் கழித் தும், 3 மணி நேரம் கழித்தும் கொடுத்தல் நல்லது.

2. அமில எதிர்ப்பிகளின் அமிலத்தைச் சமனப்படுத் தும் தன்மை உடலுக்கு வெளியேயும், உடலுக்கு உள்ளேயும் மாறுபடுமாகையால், உடலுக்கு வெளியே செயல்படும் ஆற்றலை வைத்து அமில எதிர்ப்பிகளின் சக்தியை எடைபோடுதல் கூடாது.

3. அமில எதிர்ப்பிகள் குடலின் சீதப்படலத்தின் மீது மட்டும் வினையாற்றும் தன்மையுடையவை யாகையால் மற்ற மருந்துகளோடு அமில எதிர்ப்பி களைக் கொடுக்கும்போது கவனம் வேண்டும்.

4. இரைப்பைப் புண் (gastric ulcer) உடையவர் களைவிட முன் சிறு குடல் புண் (duodenal ulcer) உடையவர்களின் இரைப்பையில், சுரக்கப் படும் அமிலத்தின் அளவு அதிகமானது. ஆகவே அவர்களுக்கு இரைப்பைப்புண் உடையவர்களை விட அதிகமான அளவு அமில எதிர்ப்பிகளைக் கொடுப்பது அவசியமாகிறது.

5. அமில எதிர்ப்பிகளை மாத்திரைகளாகக் கொடுப் பதைவிட நீரில் கலந்த வடிவிலோ (suspension), கூழ் வடிவிலோ (gel) கொடுத்தால் அமில எதிர்ப்பிகள் புண்களின் மேல் படர்ந்து செயலாற்றும்.


அமில எஸ்ட்டர்கள் 5

6. வயிற்றில் ஏற்படும் புற்றுநோய் முதலியவையும், வயிற்று வலி, உப்புசம் போன்ற அறிகுறிகளை யும் உடையவரானால் மருத்துவர் ஆலோசனை யின்றி இவ்வகையான அறிகுறி உடையவர்கள் அமில எதிர்ப்பிகளை உட்கொண்டால் வலி, உப்புசம் போன்ற அறிகுறிகள் மட்டும் மறைந்து அவற்றுக்குக் காரணமான நோயைக் கண்டு பிடிக்க போகக்கூடிய அபாயம் முடியாமல் உண்டு. இதனால் புற்று முதலிய நோய் அறி குறிகள் மறைந்து பரவக்கூடிய நிலையும் ஏற் படலாம்.

இவ்வாறு வயிற்றுப்புண், அமில மிகைச் சுரப்பு போன்ற நோய்களுக்கு உபயோகிக்கப்படும் மருந்து களில் அமில எதிர்ப்பிகள் மட்டுமின்றி வேறு சில மருந்துகளும் கையாளப்படுகின்றன. இவற்றை எந்த முறையில் கையாள வேண்டும் என்பதை மருத்து வர்கள் பல்வேறு ஆய்வுகளுக்குப்பின் தீர்மானிக்கின்ற னர். ஆகையினால் நோய்க்குரிய அறிகுறிகள் உடைய வர்கள் மருத்துவரை நாடி, எவ்வகையான உணவை யும், அமில எதிர்ப்பிகளையும் உட்கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. காண்க, அமில மிகைவு.

எஸ். கே. ந.


நூலோதி


1. Deasi & Others, Indian Journal of Medical Research, Vol. 58., 1970.

2. Chowdari K., Medicine for Students & Practitioners, 1984.

3. British Medical Jouraal, Vol - 1, 1966.

அமில எஸ்ட்டர்கள்

ஒரு கரிம அமில மூலக்கூறும் ஓர் ஆல்கஹால் மூலக் கூறும் வினைபுரிந்து எஸ்ட்டரும் (ester) நீரும் கிடைக்கின்றன. இவ்வினைக்கு எஸ்டராக்கல் (esterification) என்று பெயர்.

RCOOH + R'OH → RCOOR' + H,O

அமிலம், கனிம அமிலமாகவோ, கரிம அமில மாகவோ இருக்கலாம். கனிம அமிலங்கள் கனிம எஸ்ட்டர்களையும், கரிம அமிலங்கள் கரிம எஸ்ட்டர் களையும் தருகின்றன.