பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலிஃ.பாட்டிக்‌ ஹைட்ரோக்கார்பன்கள்‌ 311

அலிஃபாட்டிக் ஹைட்ரோக்கார்பன்கள் 321 அல்க்கீன்கள் (ஒலிஃபீன்கள்).இரட்டைப் பிணைப் புகளைக் கொண்ட அடைபடாத (unsaturated) கரிமச் சேர்மங்கள் அல்க்கீன்கள் ஆகும். இவற்றின் பொது வாய்பாடு CuHn. அல்க்கீன் படிவரிசையில் முதலாவது சேர்மம் எத்திலீன். எனவே இப்படிவரி சைச் சேர்மங்களுக்கு எத்திலீன் வரிசை (ethylene series) என்று பெயர். எத்திலீன் தாவரங்களிலிருந்து வெகுவாக வெளியேற்றப்படுகிறது. எத்திலீனின் செறிவு தாவரங்களின் காய்களில் அதிகமானாலோ அல்லது எத்திலீனைக்காய்களின்மேல் தெளித்தாலோ, அவற்றின் பழுக்கும் நிலை விரைவுப்படுத்தப்படு கிறது. அல்க்கீன்களின் கரியணுக்கள் இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டிருப்பதாலும் மற்றப் பொருட்களுடன் எளிதில் சேர்க்கை வினை (addition reaction) புரிவதாலும் இவை அடைபடாத ஹைட் ரோக்கார்பன்கள் எனக்குறிப்பிடப்படும். அல்க்கேன் மூலக்கூறிலுள்ள ஹைட்ரஜன் அணுக்களை விடக் குறைந்த ஹைட்ரஜன் அணுக்களையே இவை பெற் றிருக்கின்றன. இவ்வரிசைச் சேர்மங்கள் பொதுவா கத் தொழில்துறையில் மிகவும் பயனுள்ளவையாக விளங்குகின்றன. அல்க்கீன்களுக்குப் பெயரிடுதல். அல்க்கீன் படிவரி சையிலுள்ள சேர்மங்கள் 'ஈன்' (- ene) அல்லது 'லீன் (-lene) என்ற பின்னொட்டை அல்க்கேன் பெயர்களு டன் இணைப்பதன் மூலம் குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டு, எத்திலீன் (ethylene), பியூட்டின் (butene). IUPAC முறைப்படி பெயரிட இரட்டைப் பிணைப்பைக் கொண்ட அதிக நீளமுள்ள பகுதியை அடிப்படையாகக் கொள்ளவேண்டும். இரட்டைப் பிணைப்புடைய இரு கரி அணுக்களுக்குக்குறை மதிப் பெண் கொடுக்கக்கூடிய முறையில் எண்ணிக்கை அமையவேண்டும். சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடும் போது இவ்வெண்ணைப் பெயருக்கு முன்பு எழுத போன்ற வேண்டும். ஹாலோஜன், அல்க்கைல் தொகுதிகள் சேர்ந்திருக்கும் பொழுதுஅல்க்கீனுக்குக் கீழ்க்கண்டவாறு பெயரிடலாம். 4 3 2 1 {C-CH-CH=CH, பியூட் - 1 - ஈன் 3 2 1 HgC-C=CH; CHa 2-மெத்தில்புரோப்-1- ஈன் 2 3 4 H&CCH,-C-CH-CH3 CH, 2- எத்தில்-3-மெத்தில் பியூட்-1-ஈன் 4 3 2 I HC-CH=CH-CH, CH 1 - குளோரோ பியூட் - 2 -ஈன் இரட்டைப் பிணைப்பு எந்தக்கரியணுவுக்கு அடுத்து வருகிறதோ அந்தக்கரியணுவின் எண்ணைக் குறித்து பெயரிடவேண்டும். H,C=CH-CH,CH, 1-பியூட்டீன் CH-CH-CH CH₂ 2-பியூட்டீன் இரு இரட்டைப் பிணைப்புகளை கொண்டிருந் தால் 'ஈன்' என்ற முடிவுக்குப்பதில் இருஈன் (diene) என்றும் மூன்று இரட்டைப் பிணைப்புகளிலிருந் தால் மூஈன் (triene) என்றும் பெயரிடப்படுகிறது. அதிக இரட்டைப்பிணைப்புகளைக் கொண்ட அல்க்கீன்கள் பல்ஈன்கள் (polyenes) என்றும் அழைக் கப்படுகின்றன. 4 3 2 1 H,C-CH-CH-CH, பியூட்டா -1-3-இருஈன் 1 2 3 4 5 6 H,C=CH-CH=CH-CHCH, ஹெக்சா-1,3,5- மூஈன் அல்க்கைன்கள் (ஒலிஃபீன்கள்). அல்க்கைன் படி வரிசையிலுள்ள கரியணுக்கள் முப்பிணைப்பால் (triple bonds) இணைக்கப்பட்டுள்ளன. இவை மிக அதிகமான அடைபடாத் தன்மையைக் கொண்ட ஹைட்ரோக்கார்பன்கள் ஆகும். இவற்றின் பொது வாய்பாடு CH,a_9 அல்க்கைன் மூலக்கூறுகளின் அவற்றுக்குச் சமமான அல்க்கேன் மூலக்கூறுகள் அல்லது உள்ளதை விட நான்கு ஹைட்ரஜன் அணுக் கள் குறைவாக உள்ளன. அல்க்கைன் படிவரிசையில் முதலாவது சேர்மம் அசெட்டிலீன் - எனவே இப்படி (acetylene series) வரிசை அசெட்டிலீன் வரிசை என்றும் குறிப்பிடப்படுகிறது. அசெட்டிலீன் தொழில் துறையில் மிகவும் பயனாகிறது. அலக்கைன்களுக்குப் பெயரிடுதல். இரு முறைப்படி அல்க்கைன்கள் பெயரிடப் படுகின்றன. அல்க்கைன் களை அசெட்டிலீனின் பெறுதிகளாகக் கொண்டு பெயரிடுவது ஒருமுறை. சான்றாக, HC=C-C,H, எத்தில் அசெட்டிலீன் H₁C-C=C-CH, இருமெத்தில் அசெட்டிலீன்