பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 அலித்தன்மை

324 அலித்தன்மை X அல்லது Y குரோமோசோம் எண்ணிக்கை கூடுத லாக அல்லது குறைவாக இருந்தால் அல்லது முறை யாகச் செயல்படாததால் இந்தப் போலி அலித் தன்மை உண்டாகிறது. எடுத்துக்காட்டாக, கருவில் ஒரு எக்ஸ் (X) குரோ மோசோம் இயல்பாகச் செயல்படாதபோது ஒரு X குரோமோசோமுடன் பெண்ணாகப் பிறப்பார்கள். அவர்கள் 2,500 பேர்களுக்கு ஒருவர் வீதத்திலும், அகன்ற குட்டையான கழுத்துள்ளவர்களாகவும் காணப்படுவர். அவர்களுக்கு வயது வந்த பின்னரும் கூடப் பெண் இனப்பெருக்க உறுப்புகள் மிகச் சிறுத் துக் குழந்தைகளுக்கு உள்ள அளவிலேயே இருக்கும். இக்குறைப்பாட்டை 1983 ஆம் ஆண்டு,டர்னர்(Turner) என்பவர் கண்டுபிடித்ததால் இதை டர்னர் நோய்க் குறித் தொகுப்பு (Turner's syndrome) என்று சொல் வார்கள். அதுபோல் ஒரு X குரோமோசோம் கூடுதலாகக் கொண்டு பிறக்கும் ஆடவர் 500 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் இருப்பர். இவர்களுக்கு XXY குரோ மோசோம்கள் உண்டு. இவர்களுக்கு ஆண் இனப் பெருக்கத்திற்கு முக்கியமாக இருக்க வேண்டிய விந்த கம் அழிந்து போயிருக்கும். மூளை வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதைக் கிளினி ஃபில்ட்டர் நோய்க்குறித் தொகுப்பு (klinefilter syndrome) என்று கூறுவார்கள். மற்றுமோர் எடுத்துக்காட்டு, ஒரு Y குரோமோ சோம் கூடுதலாகக் கொண்டு பிறக்கும் ஆண்கள் அதாவது XY Y குரோமோசோம் உள்ளவர்கள். இவர் கள் பயங்கரக் கொலைக் குற்றவாளிகளாக வாழ் நாள் முழுவதும் சிறைச்சாலையில்தான் இருப்பார் கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு வழக்கில் நீதிபதியிடம் ஒரு வழக்கறிஞர் இது குற்றம் புரிந்தவரின் தவறல்ல; அவர் குற்றம் புரியக் காரணமாயிருக்கின்ற XYY குரோமசோம்களின் தவறு எனக் கூறி வழக்குரைத்தார். ஆகவே அவர் களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதுபோல் ஒரு X குரோமசோம் கூடுதலாகக் கொண்டு பிறக்கும் பெண்ணை அதிபெண் (super female) என்று கூறுவார்கள். இவர்களுக்கு XXX குரோமசோம்கள் இருக்கும். ஆனால் மிகவும் வியக்கத் தக்க வகையில், இவர்களிடம் பெண் தன்மை சாதா ரண பெண்களைவிடக் குறைவாகவே இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண் போலி அலித்தன்மை உண்டாவதற்கான காரணங்கள் (Testicular feminization) 1) தாயின் கருப்பையில் ஆண் சிசு, வளரும் போது சிசுவின் விதைக்காய்களில் அதிகமாகப் பெண் மைக்குரிய ஊக்கிகள் (hormone) உற்பத்தியாவதால் ஆண் போலி அலித்தன்மை உண்டாகலாம். 2) பிறவியிலேயே 17 - ஹைட்ராக்சிலேசு (17- hydroxylase) குறைவாக உற்பத்தியாவதால் கூட ஆண் அலித்தன்மை உண்டாகலாம் (congenital (17-hydroxylase deficiency). 3) அண்ணீரகச் சுரப்பியில் கொழுப்புத் திசுக் கள் அதிகமாக வளர்ந்தாலும் ஆண் அலித்தன்மை உண்டாகலாம் (lipoid hyperplasia of the adrenals). 4) வேறு பலவித உயிர்வினை ஊக்கிகள் இல் லாத காரணங்களால் கூட ஆண் அலித்தன்மை உண்டாகலாம் (various non-hormonal factors). 5) விந்தணுவும், சினையணுவும் இணைந்து தொடக்ககாலப் பிளவுப் பெருக்கத்தின் பொழுது ஏற்படும் பாரம்பரிய மாறுபட்ட மாற்றங்களாலும் ஆண் பெண் போலி அலித்தன்மை உண்டாகலாம் (improper mitotic division after feminization). பெண் போலி அலித்தன்மை உண்டாவதற்கான காரணங்கள் 1) பிறவியிலிருந்தே அண்ணீரகம் (adrenal gland) என்ற சுரப்பி அதிகமாக வேலை செய்தால் பெண் போலி அலித்தன்மை உடையவர்கள் பிறக்க நேரிடும். 2) தாயின் கருப்பையில் கட்டி வளர்ந்திருந் தாலும் பெண் போலி அலித்தன்மை உண்டாகலாம். 3) தாய் கருவுற்றிருக்கும் பொழுது புரோஜஸ் ட்டிரான் (progesterone) மாத்திரைகளை அதிக மாகச் சாப்பிட்டாலும் பெண் போலி அலித்தன்மை ஏற்படலாம். 4) கருவுற்ற காலத்தில் கருப்பையில் வளரும் பிளசண்டா (placenta) என்னும் நஞ்சுப் பையில் ஊக்கிகள் அதிகமாகச் சுரந்தாலும் பெண் போலி அலித்தன்மை ஏற்படலாம். நூலோதி - LOU. IT. 1. Best & Taylor, Physiological Basis of Medical Practice, 8th Edition, W.B. Saunders Co, Philadelphia, 1967. 2. Parkes, A.S. (Ed)., Marshell's Physiology of Reproduction, Third Edition, Spottrs Wood Ltd., London & Calchester, 1966.