326 அலுமினியம்
326 அலுமினியம் தோல்களைப் போட்டு சில மணிநேரம் ஆடவிட்டுப் பதனிடப்படுகிறது. மற்றொரு முறைப்படி சுண்ணாம்பு நீக்கிய தோல் களைச் சுழலும் பீப்பாயில் போட்டு ஆடவிட்டு, அத்துடன் கார அலுமினியச் சல்பேட்டு அல்லது குளோரைடு கரைசலைச் சேர்க்க வேண்டும். பிறகு இந்தப் பீப்பாயில் சோடியம் கார்பனேட்டு கரை சலைக் கொஞ்சம் கொஞ்சமாக, நீர்மம் வீழ்படியும் எல்லை வரை சேர்க்க வேண்டும். அடுத்தநாள் தோல்கள் வெளியே எடுக்கப்பட்டு, வடியவிட்டு, சுருக்கம் நீக்கப்பட்டு, சீவப்பட்டு எண்ணெய்க் குழம்பு ஊட்டப்படும். மற்றைய பதனிடு முறைகளில் பயன் படுத்தப்படும் எண்ணெய்க் குழம்புகள் இதற்கு ஏற்றவையல்ல. எனவே முட்டைக்கரு, தவிடு, ணெய் முதலியவை கலந்த பசையைத் தடவுவார்கள். பிறகு தோல்கள் உலர்த்தப்படும். எண் தற்காலத்தில் தகுந்த எண்ணெய்க் குழம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இந்தப் பதனிடு முறையில் கவனிக்கப்பட வேண்டியவை, 1) நீர்மத்தின் பி.எச். அளவு 2) நீர்மத்தின் செறிவு. 3) நீர்மத்தில் கலந்திருக்கும் நடுநிலை உப்புகளின் அளவும் தன்மையும் 4) நீர்மத்தின் காரத்தன்மை, 5) பதனிடும் கால அளவு 6) பதனிடப்படும் வெப்ப நிலை முதலியவையாகும். அலுமினியம் 20 ஆம் நூற்றாண்டில் மிகப் பயன் தரும் பொரு ளாக விளங்குவது அலுமினியம் (aluminium). இது பளபளப்புள்ள, மின்கடத்து திறன் மிகுந்த, வேதி வினைத்திறன் பெற்ற மிகவும் பயனுள்ள உலோகம். 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அரசர்கள் இதனை ஓர் அரிய பொருளாகப் போற்றி, இதனைக் கொண்டு அணிகலன்களைச் செய்துகொண்டனர். ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ இது தட்டுகள்,சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தும் மலிவானதொரு உலோகமாகி விட்டது. 20 ஆம் நூற்றாண்டினை ‘அலுமினியக் காலம்' என்று கூறுமளவுக்கு இது எங்கும் பரவி வருகிறது. அலுமினியத்தின் முக்கிய தாதுப்பொருள் பாக் சைட்டு (bauxite) எனப்படும் நீரேற்றம் பெற்ற அலு மினியம் ஆக்சைடு (bydrated aluminium oxide, A1, B,O} ஆகும் மின்சாரத்தைப் பயன்படுத்தி, அதிலிருந்து, அலுமினியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, பீகார், மத்தியப்பிரதேசம், ஒரிசா, மகாராஷ்ட்டிரம் ஆகிய மாநிலங்களில் நிலத் திலிருந்து பாக்சைட்டு வெட்டி எடுக்கப்படுகிறது. [a M la 3 4 Li Be 11 12 0 2 ila iva va Via Vilale 15 6 7 B C N BB 9 10 F Ne 13 14 15 16 17 18 Na Mg lib IVb Vb Vlb VIIb Villb llb Al Si P S CI Ar 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te Xe 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba L HI Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 Fr Ra Ac Rf Ha லாந்தனைடு 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 aulana Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 Guflens Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr இந்திய அலுமினிய நிறுவனம் பல தொழிற் சாலைகளில் அலுமினியத்தைப் பெருமளவில் உற் பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில், சேலத்துக்கு அருகே உள்ள மேட்டூரில் மலிவாக நீர்மின்திறன் கிடைப்ப தால் அதனைக் கொண்டு அங்கு அலுமினியம், பாக்சைட்டு தாதுவிலிருந்து அதிக அளவில் பிரித் தெடுக்கப்படுகிறது. அலுமினியத்தின் அணு எண் 13. இது தனிம மீள்வரிசை அட்டவணையில் (periodic table) 13 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இதன் அணு உட்கருவில் 13 புரோட்டான்களும் 13 நியூட்ரான்களும் உள்ளன. அலுமினியத்தின் அணு எடை 26.9815. இயற்கை யில் கிடைக்கும் அலுமினியத்தின் ஓரிடத் தனிமம் 41°7 LDL GLD. அலுமினியத்தின் எலெக்ட்ரான் அமைப்பு 2, 8, 3 அல்லது 1s' 2s2 2pe 3s'3pl என்று குறிப்பிடப்படு கிறது. அதன் வெளிச்சுற்றில் மூன்று எலெக்ட்ரான் களே (3s' 3p') இருப்பதால் அலுமினியத்தின் இணை திறன் மூன்று. மேற்குறிப்பிட்ட எலெக்ட்ரான் அமைப்பின் விளை வாக, தனிம வரிசை அட்டவணையில் அலுமினியம் III-B பத்தியில் (column) இடம்பெற்றுள்ளது. கண்டுபிடிப்பு. இலத்தின் மொழியில் இது அலு} மினியத்தின் ஒரு சேர்மமான படிகாரம் (alum) என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்துதான் அலு மினியம் என்ற பெயர் உருவாகியுள்ளது. .