328 அலுமினியம்
328 அலுமினியம் இயற்கையில் காணப்படுகிறது. பூமியின் மேலோட்டி லும் (earth's crust) சந்திரனின் மேலோட்டிலும் (moon's crust)மிக அதிகமாகக் கிடைக்கும் உலோகம் இது. உ எரிமலைகளில் இருந்து வெளியாகும் தீக்குழம்பு (lava), கெட்டியாகி உருவாகும் ஃபெல்ஸ்பார் (felspar), அபிரகம் (mica), சிலிகேட்டு கனிமங்களில் அலுமினியம் காணப்படுகிறது. இவை சிதைந்து, களிமண் உருவாகிறது. எனவே, களிமண்ணிலும் அலுமினியம் உள்ளது. பூமியின் மேலோடு 16 கிலோ மீட்டர் ஆழமுள்ளது. அதில், 8% அலுமினியம் உள்ளது. எனவே, உலகின் மேலோட்டில், மிக அதிக அளவு காணப்படும் உலோகம் அலுமினியமே. அலுமினா(alumina) பிற தனிமங்களில் சிறிதளவு ஆக்சைடுடன் கலந்த நிலையில், பல பயன்மிகு கனிமங்களாக இயற்கையில் கிடைக்கிறது. அணி கலன்கள் செய்யப் பயன்படும் சிவப்புக்கல் (ruby), நீலக்கல் (sapphire) ஆகியவற்றில் முறையே குரோ மிய ஆக்சைடும், குரோமியம்/இரும்பு ஆக்சைடுகளும், அலுமினிய ஆக்சைடுகளும் கலந்துள்ளன. தேய்ப்புப் பொருளாகப் (abrasive) பயன்படும் கொரண்டம் (corundum), எமரி (emery) ஆகியவற்றில் அலுமினா வுடன் சிறிதளவு இரும்பு ஆக்சைடு (FeO ) கலந் திருக்கும். அலுமினியத்தை உற்பத்தி செய்யத் தேவைப் படும் பாக்சைட்டும். க்ரையோலைட்டும் மிக அதிக அளவில் வெட்டி எடுக்கப்படும் அலுமினியக் கனிமங் களாகும். . பிரித்தெடுத்தல். பாக்சைட்டு தாதுப் பொருளின் இரும்பு ஆக்சைடு, டைட்டேனியம் ஆக்சைடு, சிலிக்கா போன்ற மாசுகள் கலந்துள்ளன. அவை, பேயர் முறையில் (Baeyer process) (Baeyer process) முதலில் நீக்கப்படு கின்றன. இம்முறையில், சுட்ட பாக்சைட்டு, அடர் சோடா காரக் கரைசலுடன், 150°C உயர் அழுத்தக் கலன்களில் கொதிக்க வைக்கப்படுகிறது. அப்போது, அலுமினா கரைந்து, சோடியம் அலுமினேட்டு கரை சலைத் தருகிறது. அலுமினாவில் உள்ள மாசுகள் கரைவதில்லை, மாசுகள் வடிகட்டி நீக்கப்படுகின்றன. Al,Q + 2 NaOH + 2 NaAlO2 + H O இவ்வாறு கிடைக்கும் சோடியம் அலுமினேட்டு கரை சலுடன், சிறிதளவு தூய அலுமினியம் ஹைட்ராக் சைடைச் சேர்த்துக் கலக்கும்போது, பெருமளவு அலு மினியம் ஹைட்ராக்சைடு (Al(OH)) வீழ்படிவாகப் பிரிகிறது. இதனை, 1200°C க்குச் சூடுபடுத்தி தூய அலுமினா (A),0 ) பெறப்படுகிறது. உருகிய நிலையிலும், அலுமினா மின்சாரத்தை நன்கு கடத்துவதில்லை. ஆனால் 20% அலுமினா, 60% க்ரையோலைட், 20% ஃபுளுவோஸ்ஃபார் (fluorspar, CaF2) ஆகியவற்றின் கலவை, உருகிய நிலையில் (900°C) மின்சாரத்தை நன்கு கடத்து கிறது. இக்கலவை மின் உலையில் இடப்பட்டு, நேர் மின்சாரம் செலுத்தப்படும்போது, அலுமினியம் எதிர் மின்வாயில் (cathode) உண்டாகிறது. இந்த மின் உலையில், இரும்புக்கலன் ஒன்றில் உட்புறம் அமைந்துள்ள கிராஃபைட்டு (graphite), எதிர்மின்வாய் ஆகச் செயல்படுகிறது. இக்கலனில் தொங்கிக் கொண்டிருக்கும் கிராஃபைட்டுத் தண்டு கள், நேர்மின்வாய்களாகச் (anode) செயல்படுகின்றன. இவற்றிற்கிடையே, முன்பு குறிப்பிட்ட கலவை நிரப் பப்பட்டு மின்சாரம் செலுத்தப்பட்டு (900°C க்கு) சூடுபடுத்தப்படுகிறது. உருகிய கலவையின் திண்மநிலையில் கலவை இருக்கும். இதன் மீது தூளாக்கப்பட்ட கல்கரியின் படலம் இருக்கும். மின்பகுப்பு நிகழும்போது, பின்வரும் வினைகள் நிகழ்கின்றன. 3+ Al,O, + 2 Ajs+ + 30" எதிர்மின்வாய் : Al' + + 3 e நேர்மின்வாய் : 0^ → (O) +26 நேர்மின்வாய் : 2 (0) 0, → மீது Al இவ்வாறு, எதிர்மின்வாயில் உண்டாகும் அலு மினியம், உருகிய நிலையில் இருக்கும்; இரும்புக் கலனின் அடைப்பானை நீக்கி, அது வெளியேற்றப் படுகிறது. அதன் 99.5% தூய்மை அதனுடன் இரும்பு, சிலிக்கான் போன்ற மாசுப் பொருள்கள் சிறிதளவு கலந்திருக்கும். ஆகும். கிராஃபைட்டு நேர்மின்வாயில் வெளியாகும் ஆக் சிஜன், மின்வாயுடனேயே வினைபுரிந்து, கார்பன் மோனாக்சைடு அல்லது கார்பன் டைஆக்சைடு வளிமங்களைத் தரும். மின் பகுப்பு தொடர்ந்து நிகழ்வதால், அலுமினாவின் அளவு குறைய ஆரம் பிக்கும். இதனை ஈடு செய்யத் தேவையான அலுமினா மின் உலையில் சேர்க்கப்படும். மேற்குறிப்பிட்ட முறையில் பெறப்படும் 95.5% தூய்மை உள்ள அலுமினியம், ஹுப்பே முறையில் (Hoope's process) மீண்டும் மின்சாரத்தைத் கொண்டு தூய்மை ஆக்கப்படுகிறது. அப்போது, 99.99% தூய அலுமினியம் கிடைக்கிறது.