பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அமில எஸ்ட்டர்கள்

CH3COOH + C,H,OH C_H,OH + H_SO, 2 C,H,OH + H₂SO₁ CHCOOC,H, + HO > HSO_OC,H, + H,O → SO,(OC,H,), + 2 H2O

வகையாக கனிம வகையைச் சேர்ந்த உப்புக்களைப் போல் கரிமச் சேர்மங்களில் முதன்மையான எஸ்ட்டர்கள் விளங்குகின்றன. உலோக ஹைட்ராக் சைடுகள் கனிம அமிலங்களுடன் வினைபுரிந்து கனிம உப்புகளையும் நீரையும் விளைபொருள்களாகத் தருகின்றன.

ஒரு கரிம அமிலத்தின் கார்பாக்கில் தொகுதியி லுள்ள ஹைட்ரஜன் அணுவிற்குப் பதிலாக அல்க் கைல் அல்லது அரைல் தொகுதி பதிலீடாக்கப்பட்ட பெறுதிகளே (derivatives) எஸ்ட்டர்கள் எனவே எஸ்ட்டர் ஆகும். தொகுதியை - COOR என்று குறிக்கலாம். R - என்பது அல்க்கைல் அல்லது அரைல் தொகுதியாகும்.

0 l| RCOH அமிலம் O " RCOR' எஸ்ட்டர்

தயாரிக்கும் முறைகள். அமிலம், ஆல்கஹால் ஆகியவற்றை ஆவியாக்கி, இந்த ஆவியைச் சூடான நிலையிலுள்ள தோரியா (ThO,) மீது செலுத்தினால் எஸ்ட்டர்கள் கிடைக்கின்றன.

அமில குளோரைடுகள் ஆல்கஹாலுடன் வினை புரிந்து எஸ்ட்டர்களும் ஹைட்ரஜன் குளோரைடு வளிமமும் உண்டாகின்றன. வளிமம் வெளியேறி விருவதால் முன்னோக்கு வினை (forward reaction) ஊக்குவிக்கப்படுகின்றது.

RCOCI+ ROH RCOOR + HCl

அமில நீரிலிகளை ஆல்கஹாலுடன் வினைப்படுத் தும்பொழுதும் எஸ்ட்டர்கள் உண்டாகின்றன.

(RCO),O + 2 R′OH 2 RCOOR' + H2O

இயற்புப் பண்புகள். பழங்கள், பூக்கள் ஆகியவற் றின் இனிய மணத்திற்குக் சாரணம் எஸ்ட்டர்கள். சிறிய அல்க்கைல், அமிலத்தொகுதிகளைக் கொண் டுள்ள எஸ்ட்டர்கள் ஆவியாகும் நீர்மங்களாக உள்ளன; ஏனையவை மெழுகு போன்ற (wax like) திண்மங்களாகும். இவை நீரில் குறைந்த அளவே கரையும்; ஆல்கஹால், ஈதர், பென்சீன் போன்ற

கரிமக் கரைப்பான்களில் நன்கு கரையும். மெத்தில், எத்தில் எஸ்ட்டர்களின் கொதி நிலைகளைக் காட் டிலும் அவற்றின் தாய் அமிலங்களின் கொதிநிலைகள் அதிகமாகவே இருக்கும். அமிலங்களில் இருப்பது போல மூலக்கூறுகள் இடைப்பட்ட (intermolccular) ஹைட்ரஜன் பிணைப்பு எஸ்ட்டர்களில் இல்லாமையே இதற்குக் காரணமாகும். ஏனெனில், எஸ்ட்டர்களில் ஹைட்ராக்சில் தொகுதிகள் கிடையா.

களான வேதிப் பண்புகள். நீருடன் எஸ்ட்டர்கள் வினை புரியும்போது நீராற் பகுப்படைந்து மூலப்பொருள் அமிலங்களையும் ஆல்கஹால்களையும் அளிக்கின்றன. இது எஸ்ட்டராதலின் மீள் வினை யாகும். கனிம அமிலங்களை அல்லது காரங்களைக் கொண்டு எஸ்ட்டர்களை நீராற் பகுக்கலாம். காரங் களைக் கொண்டு எஸ்ட்டர்களை நீராற் பகுக்கும் வினைக்குச் சோப்பாக்கம் (saponification) என்று பெயர்.

RCOOR' + H,O RCOOR’ + NaOH NaOH H₂O RCOONa + R'OH RCOONa + R'OH

அம்மோனியாவின் அடர் கரைசலுடன் ஓர் உண்டாகின்றன. இவ் எஸ்ட்டரை வினைப்படுத்தினால் அமிலத்தின் அமைடும் ஆல்கஹாலும் வினை அம்மோனியாவாற் எனப்படும். பகுப்பு (ammonolysis)

RCOOR’ + NH RCONH, + R′OH

வீரிய அமிலங்கள் உடனிருக்க எஸ்ட்டர்கள் ஆல்கஹாலுடன் வினை புரிந்து, மீண்டும் இந்த ஆல்கஹால்களுக்குரிய வேறு எஸ்ட்டர்களைக் கொடுக் கின்றன. ஆல்கஹாலின் அல்க்கைல் தொகுதி இவ் வினையில் எஸ்ட்டராக மாற்றப்படுகின்றது.

RCOOR' + R"OH RCOOR* + R'OH

இல்வினை எஸ்ட்டர் பரிமாற்று வினை (transesterification) என்றும் அழைக்கப்படுகிறது.

பயன்கள். மலர்கள், கனிகள் ஆகியவற்றின் இனிய மணத்திற்குக் காரணமானவை எஸ்ட்டர்களேயாகும். எடுத்துக்காட்டாக, வாழைப்பழத்தில் இருப்பது அமைல் அசெட்டேட்டு (amyl acetate) என்ற எஸ்ட் டர். ஆரஞ்சுப் பழத்தில் இருப்பது ஆக்டைல் அசெட் டேட்டு (octylacctate); அன்னாசிப்பழத்தில் இருப்பது n-பியூட்டைல் பியூட்டிரேட்டு (n - bityl butyrate); ஆப்பிளில் இருப்பது ஐசோஅமைல் ஐசோவாலெ ரேட்டு(isoamyl isovaleratc). எனவே செயற்கையாகப்