332 அலுவலகக் கருவிகள்
332 அலுவலகக் கருவிகள் ஒரு புட்டியில் குளிரச் செய்து, வெண்ணிறமுள்ள பொடியாகப் பெறலாம். அதன் மூலக்கூறு வாய்பாடு Al,CI-இது,ஒரு சகப்பிணைப்புச் (covalent) சேர்மம் ஆகும். இதனால்தான், இப்பொருள், இப்பொருள், பென்சீன் போன்ற கரிமக் கரைப்பான்களில் எளிதில் கரை கிறது. பலவகைக்கரிமச் சேர்மங்களைத் தயாரிக்க ஃப்ரீடல் - கிராஃப்ட்ஸ் வினையில் (FriedelCrafts reac- tion) நீரற்ற அலுமினிம் குளோரைடு ஒரு சிறந்த வினையூக்கியாகப் பயன்படுகிறது. . அலுமினியம் சல்ஃபேட்டு(AI,(SO,), 18H,O).படிக வடிவில், பாக்சைட்டுத் தாதுவும். அடர் கந்தக அமிலமும் வினைபுரியும்போது இது உருவாகிறது. இது ஒரு வெண்மையான உப்பு. காகிதம் தயாரிக்கும் தொழிலிலும் நீரைத் தூய்மையாக்கவும் இது பயன் படுகிறது. பொட்டாஷ் படிகாரம் (Potash Alum). படிகாரங் களில் இது மிகவும் முக்கியமானது. இது படிக நீருடன் கூடிய பொட்டாசியம் சல்ஃபேட்டு, அலு மினியம் சல்ஃபேட்டு ஆகியவற்றின் இரட்டை உப்பு (double salt) ஆகும். அதன் மூலக்கூறு வாய்பாடு K,SO, A}2(SO4): 24 H,O-இந்த இரண்டு சல்ஃபேட் உப்புகளும் சமமோலார் (equimolar) அளவில் சேர்ந்த நீர்க்கரைசலை ஆவியாக்கும்போது, படிகாரப் படிகங்கள் உருவாகின்றன. இவை எட்டு முகங்களை உடைய எண்பட்டக (octahedron) வடிவில் உள்ளன. படிகாரம் பயனுள்ள ஒரு பொருள். பருத்தித் துணி களுக்குச் சாயம் ஏற்றும் முறையில், நிறம் ஊன்றி (mordant) ஆகவும், தோல் பதனிடும் பணியிலும் (tanning), முகத்தை மழிக்கும் போது தொற்று நீக்கி (disinfectant) ஆகவும், குடிநீரைத் தூய்மை செய்ய வும் படிகாரம் பயன்படுகிறது. அண்மையில் விண்வெளியில் கதிரியக்க அலு மினியம் (Alt) மிகவும் அதிக அளவு இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கதிரியக்க மக்னீசியமும் (Mg26) விண்வெளியில் அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கண்டுபிடிப்புகளின் பயனாக இயல் அறிஞர்கள் சூரிய மண்டலத்தின் தோற்றத்தின் கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நம்பப்படுகிறது. நூலோதி வான் நெ.சு.ஞா. 1. McGraw-Hill Encyclopaedia of Science and Technology. Vol. 1, Fourth Edition, McGraw- Hill Book Company. New York. 1977. 2. The New Encyclopaedia Britannica. Micropaedia, Vol 1, Fifteenth Edition, Encyclopaedia Britan. nica Inc., Chicogo, 1982. 3. The Hindu, June 2, Madras 1985, அலுவலகக் கருவிகள் காண்க, கருவிகள், அலுவலகக் அலுவலக மேலாண்மை அலுவலகம் ஒரு தொழிலமைப்பின் மூளை-அறிவின் இருப்பிடம் எனச் சொன்னால் மிகையாகாது. ஒரு தொழிலமைப்பு செம்மையாகவும் சிக்கனமாகவும் இயங்குவதற்குக் கொள்முதல் துறை, உற்பத்தித் துறை, விற்பனைத் துறை போன்றவை செவ்வனே இயங்குவது எவ்வளவு இன்றியமையாததோ அவ்வ ளவு இன்றியமையாததே அதன் அலுவலகமும் செம் மையாகச் செயல்பட வேண்டுவதும். அலுவலகம் தொழிலை ஒரு முறைப்படுத்தும் தலைமையகமாகவும் பணிநிலையமாகவும் (service station) செயல்படுகிறது என்று கூறலாம். அலுவல் கம் தொழிலைச் சார்ந்த அனைத்துத்தகவல்களையும் திரட்டி அத்தகவல்களைத் தக்கபடி ஆராய்ந்து செய லாக்குநருக்குக் (executives) கொடுத்து, அதன்மூலம் பங்கீடு (distribution), உற்பத்தி (production), கொள் முதல் (procurement), பொதுநிதி (finance) முதலிய வற்றை ஒருமுகப்படுத்த உதவிபுரிகிறது. அலுவலகத்தை *மேலாண்மையின் ஊழியன் (servant of management) என்றும் கூறலாம். 'கடி காரத்திற்கு அதன் தலைமை விற்சுருள் (main spring) எத்தகையதோ அத்தகையதே தொழிலமைப்புக்கு அதன் அலுவலகமும்", என்று பேராசிரியர் டிக்சி (Dicksie) அலுவலகத்தின் இன்றியமையாமையை வலியுறுத்திக் கூறுகிறார். மேலாண்மை என்பது உற்பத்தித் திறனை மிகுதி யாக்கும் நோக்குடன் பல துறைகளையும் ஒருமுகப் படுத்துகிறது. மேலாண்மையின் பொதுக்கோட்பாடு களை, அலுவலகச் செயல்முறைகட்குப் பயன்படுத் தலே அலுவலக மேலாண்மையாகும். அலுவலக மேலாண்மையை நான்கு கூறுகளாக (factors) பகுத்து வரையறுக்கலாம். அவையாவன, வழிமுறை (methods), சாதனங்கள் (equipment), மூலப்பொருள்