336 அலுவலக மேலாண்மை
336 அலுவலக மேலாண்மை எழுது பொருள்கள் எனக கீழ்க்காண்பவற்றை இனவாரியாகப் (classification) பிரிக்கலாம். அவை கரிஎழுதுகோல் (pencil), பேனா,மை, அழிப்பான் (erasers), பிடிப்புஊக்கு (clips), ரப்பர்வளையம் (rubber bands), தட்டச்சு நாடா (typewriter ribbon) கரிபடித்தாள் (carbon paper), அட்டை (card), இலச்சினைத்தாள் (letter beads), உறைகள் (enve- lopes), அச்சிட்டதாள் (printed papers), படிஎடுக்கும் தாள் (copy sheet), துளையச்சுத் தாள் (stencils), தட்டச்சுத் தூய்மி (type cleaner), கோப்பு மடிகள், கோப்புத் தாங்கிகள் (file folder and guides), மேசை நாட்காட்டி (desk calender), குறிப்புச் சிட் டைகள் (memo pads) இன்ன பிற. அலுவலக மேலாண்மையர் தம் அலுவலகத்தில் உள்ள உடை மைகளுக்குப் பொறுப்பு வகிப்பவரென்றால் அவர் அவ்வுடமைகளைத் தூய்மையாக வைப்பதற்கு வேண்டிய துடைப்பான் (mops), வழலைக்கட்டி (soap), வாளி (bucket) ஆகியவற்றை உரியவர்களுக்கு வழங்குதல் வேண்டும். சிறந்த முறையில் அலுவலகப் படிவங்களைத் தேர்ந்தெடுப்பதனால் அலுவலக மேலாண்மையர் அதிக அளவில் தம் அலுவலகச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். மிகுந்த செலவு செய்து படி வங்கள் ஆக்கப்படுகின்றன. ஆனால் அப்படிவங்கள் தகுந்த பணிக்கு ஏற்ப அமையவில்லை என்றால் படிவம் ஆக்க ஆன செலவும் எழுத்தருக்கான நேரமும் வீணாகி அலுவலகச் செலவை மிகைப் படுத்திவிடும். செலவைக் குறைக்க அலுவலக மேலாண்மையர் பொருள்களை வாங்குவதிலும் இருப்பு வைப்பதிலும் பொருள்களைப் பயன்படுத்து வதிலும் மிகப் பொறுப்புள்ளவராக இருப்பாரே யானால் அலுவலகச் செலவுகளைச் சிறந்தமுறையில் கட்டுப்படுத்த முடியும். பணியாளர்த்தொகுதி (Personnel). பணியாளர் அலுவலக மேலாண்மையில் இன்றியமையாத செயற் கூறாவர். எல்லாச் செயலாக்குநரும் மற்றவருடன் சேர்ந்து அல்லது மற்றவர்களின் உதவியோடு பணி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். அலுவலகத் தின் வழிவகைகளையும் பயன்படுத்திப் பணிகளைச் செய்விப்போர் இவர்களே. தக்க பணியாளரைத் தேர்ந்தெடுந்து முறையாகப் பயிற்சியளித்து அவர் களுக்குச் சலிப்போ சோர்வோ தோன்றாதவாறு பணியாற்றச் செய்வது இவரது இன்றியமையாத பணியாகும்.பணியாளரை எழுது தேர்வு மூலமாகவும் பேட்டி (interview) மூலமாகவும் இயல்பார்வத்தைச் (aptitudes) சோதித்துத் தேர்ந்தெடுக்கலாம். சில சமயங்களில் உடல் சோதனையும் (physical examina- tion) பணியாளரைத்தேர்ந்தெடுப்பதற்குத் தலையாய தொன்றாகிறது. பணிக்கு அமர்த்தப்பட்டபின் அலு வலகச் செயலாக்குநர் அல்லது துறைத்தலைவர் தம் அலுவலகத்தில் பணிபுரிய வந்துள்ள புதிய பணியாள ருக்கு முதல் சில நாட்களுக்கு அவருடைய பணியைப் பற்றியும் அலுவலகப் பழக்கவழக்கங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள மிகுந்த கவனத்தோடு வழிகாட்ட வேண்டும். அவ் அலுவலகத்தைப் பற்றியும் மற்ற உடன் பணிபுரியும் பணியாளர் பற்றியும் ஏற்படும் முதல் எண்ணமும், பணியாளரின் மனத்தில் முதலில் பதியும் பதிவும் நல்லபடி அமைதல் மிகவும் இன்றிய மையாதது. இந்தக் காலகட்டத்தில்தான் புதுப்பணி யாளர் தன் பணியைப் பற்றித் தெரிந்து கொள்ளுவ திலும் புதுப்பழக்க வழக்கத்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ளுவதிலும் ஆர்வம் பெருகப் (encouragement) பெரிதும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லாவற்றை யும் தொடக்க காலத்திலேயே பணியாளருக்கு உகந்த முறையிலும் அதே சமயத்தில் அலுவலகத்தின் நன்மையையும் கருத்தில் கொண்டும் பயிற்சி அளிக்க வேண்டும். புதுப் பணிகளில் அமர்த்தப்படும்போது பல அலுவலகங்களில் பணியாளருக்கு அப்பணிக்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியானது சில நாட்கள் அல்லது சில வாரங்கள் அளவு இருக் கலாம். அப்பயிற்சி நாட்களில் பணியாளருக்கு அலுவலகத்தைப் பற்றியும் அலுவலகத்தில் அவரது நிலை (position) பற்றியும் அலுவலகத்தின் கொள்கை களைப் (policy) பற்றியும் விரிவாகக் கற்பிக்கப் படுகிறது. வேலைநேரம், விடுமுறைகள், ஓய்வு நேரம், உடைகள், ஒழுங்குமுறைகள் (discipline), பணியு யர்வு (promotion), ஈடுசெய்தல் (compensation) போன்ற இன்னும் பலகூறுகளை ஆள்வதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகச் சங்கங்கள் பணியாளரின் பாதுகாப்பு, உடல் நலம் முதலியன வற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மற்றும் பிற சில்லறைச் சலுகைகள் (fringe benefits ) பணியாளருக்குக் கிடைக்குமாறு செய்தல் வேண்டும். பணியாளர்கள் கொடுக்கும் முன்னேற்றத்திற்கான கருத்துகளையும் பணி எளிமையாக்கம் போன்றவற் றையும் வரவேற்று அவற்றை அலுவலக இயக்கத்திற் குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பணியாளர்களுக்குத் தகுந்தவாறு சீர்திருத்த வேண்டும். இவ்வாறு பணியாளர்கள் தொழிலகத்தின் முன்னேற்றத்திற்கான கருத்துகளை எடுத்துச்சொல்லி அவற்றை நடைமுறைப் படுத்து வதால் பணியாளர்கள் தொழிலகத்தில் பங்கேற் கும் (participation) பொறுப்பை உணர்கிறார்கள். மேற்பார்வையாளரைத் (supervisors) தேர்ந் தெடுத்தல், பயிற்சி அளித்தல், அவர்களைத் தொழி லகத்தின் நோக்கத்திற்கு இயக்கல் ஆகியன பணியா