பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்களின் மணத்தைலங்கள் (flavouring oils) தயா ரிக்கவும், அத்தர்கள், வாசனைப் பொருள்கள் தயா ரிக்கவும் எஸ்ட்டர்கள் பயன்படுகின்றன. எஸ்ட் டர்கள் மிகச் சிறந்த கரைப்பான்களாகப் பயன்படு கின்றன. தொழில் துறைகளில் செல்லுலோஸ் அசெட் டேட்டு, செல்லுலோஸ் நைட்ரேட்டு, எண்ணெய்கள், ரெசின்கள் ஆகியவற்றிற்கு எஸ்ட்டர்கள் கரைப்பான் களாகும். மெருகெண்ணெய்கள் (lacquers), பிளாஸ் டிக்குகள் (plastics) போன்றவற்றைத் தயாரிப்பதில் எஸ்ட்டர்கள் பயன்படுகின்றன. இயற்கையில் கிடைக் கும் எஸ்ட்டர்களான எண்ணெய்கள், கொழுப்புகள், மெழுகுகள் முதலியவை பல வகைகளிலும் பயன் படுவனவாகும்.

எத்தில் அசெட்டேட்டு. இது அசெட்டிக் அமிலத்தின் எத்தில் எஸ்ட்டர் ஆகும். ஆய்வுக்கூடத்திலும் தொழி லகங்களிலும் எத்தில் ஆல்கஹால்-அசெட்டிக் அமிலம் சேர்ந்த கலவையை அடர் கந்தக அமிலத்துடன் சூடுபடுத்தி எத்தில் அசெட்டேட்டு தயாரிக்கப் படுகிறது.

CH;COOH + HOC,H6 >H,SO, CH,COOCØH5 + HgO

எத்தில் அசெட்டேட்டு நிறமற்ற நீர்மம்; இதன் கொதிநிலை 78°C; இதற்கே உரித்தான ஆப்பிள் போன்ற மணம் கொண்டது. செயற்கை முறையில் பழங்களின் மணத்தைலம் தயாரிப்பதில் இது பயன் படுகிறது. ஒளிர் பூச்சுகளிலும், செயற்கைப் பட்டு உற் பத்தியிலும் இது கரைப்பானாகப் பயன்படுகிறது.

எத்தில் பென்சோயேட்டு. இது ஒரு நிறமற்ற நீர்மம்; இதன் கொதிநிலை 213°C. இது பென்சாயிக் அமி லத்தின் எத்தில் எஸ்ட்டர் ஆகும். பென்சாயிக் அமி லத்தையும் உலர்த்திய ஹைட்ரஜன் குளோரைடு கரைந்த ஆல்கஹால் கரைசலையும் சேர்த்து ஆவி மீளக் கொதிக்க (refluxing) வைக்கும்போது எத்தில் பென்சோயேட்டு உண்டாகிறது.

HC1 CH,COOH + HOC,H, → C%H,COOC,H, + H,O

மெத்தில் சாலிசைலேட்டு. இது சாலிசைலிக் அமி லத்தின் மெத்தில் எஸ்ட்டர் ஆகும். இது இயற்கையில் வின்ட்டர்கிரீன் தைலத்திலும் (oil of wintergreen) ஏனைய ஆவியாகும் எண்ணெயகளிலும் காணப்படு கிறது. சாலிசைலிக் அமிலத்தையும் மெத்தில் ஆல்க ஹாலையும் அடர் கந்தக அமிலத்துடன் கலந்து ஆவிமீளக் கொதிக்க வைத்து இதனைப் பெறலாம்.

இது ஒரு நிறமற்ற, நறுமணமுள்ள நீர்மம்; இதன் கொதிநிலை 224°C. இது நறுமணச் சுவையூட்டும்

அமில எஸ்ட்டர்கள் 7

இது தோலின் மீது கொண்டுள்ளதால் பொருளாகப் பயன்படுகிறது. தன்மையைக் கிளர்ச்சியூட்டும் முடி வளர்க்கும் மருந்துகளில் (hair tonics) பயன்படு கிறது. மருத்துவத் துறையில் வலி நீக்கியாகவும், சுளுக்கு நீக்கியாகவும் பயன்படுகிறது.

ஃபினைல்சாலிசைலேட்டு (o.C.H, (OH)COOC.H,} (சலால்). இது சாலிசைலிக் அமிலத்தின் ஃபினைல் எஸ்ட்டர் ஆகும். சாலிசைலிக் அமிலத்தையும் ஃபீனா லையும் ஒரு வினையூக்கி உடனிருக்கச் சூடுசெய்து ஃபினைல் சாலிசைலேட்டு தயாரிக்கப்படுகின் றது.

C,H,OH + o-C,H, (OH) (COOH) 1 C,H, (OH) COOC H

இது வெண்ணிறமுடைய திண்மம், இதன் உருகு நிலை 43°C. இது சலால் என்ற பெயரில் குடலில் கீழ் எதிர்ப்பியாகப் (antiseptic) பயன்படுகிறது.

ஆஸ்ப்பிரின் (0.C H, (OCOCH,) COOH ). இது அசெட்டைல்சாலிசைலிக் அமிலம் (acetylsalicylic acid} ஆகும். சாலிசைலிக் அமிலத்தையும் அசெட்டிக் நீரி லியையும் (acetic anhydride) குறைந்த அளவு கந்தக அமிலம் உடனிருக்கச் செய்யும்பொழுது அசெட்டைல் சாலிசைலிக் அமிலம் உண்டாகிறது.

0- C&H,(OH){COOH) + (CH,CO),0 C.H; (OCOCH3) COOH

து வெண்ணிறத் திண்மம். இதன் உருகு நிலை 135°C. இது ஆஸ்ப்பிரின் (aspirin) என்ற பெயரில் வலி குறைப்பானாகப் (pain reliever) பயன் படுகிறது.

கனிம அமிலங்களின் எஸ்ட்டர்கள். கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் போன்ற கனிம அமிலங் கள் ஆல்கஹால்களுடன் சேர்ந்து உண்டாகுபவை கனிம அமிலங்களின் எஸ்ட்டர்கள் (esters of inorganic acids) எனப்படும். மெத்தில் சல்ஃபேட்டு, எத்தில் சல்ஃபேட்டு,எத்தில் நைட்ரேட்டு, எத்தில் நைட்ரைட்டு ஆகியன இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

மெத்தில் ஆல்கஹாலுடன் அடர் கந்தக அமிலத்தைக் குறைந்த அழுத்தத்தில் வாலையில் வடித்தால் மெத்தில் சல்ஃபேட்டு கிடைக்கிறது.

இதேபோல் எத்தில் ஆல்கஹால், சல்ஃப்பூரிக் அமிலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சல்ஃபேட்டு தயாரிக்கப்படுகிறது.எனினும், முறையில் மிகையளவு அடர் தினுள் எத்திலீனைச் செலுத்தி இது தயாரிக்கப் படுகிறது. மெத்தில் சல்ஃபேட்டு (கொதிநிலை 188°C). கந்தக எத்தில் தொழில் அமிலத்