340 அலைக் காய்ச்சல்
340 அலைக் காய்ச்சல் 0.5-0.7 மைக்ரான் அகலமும் கொண்டவை. இவை ட்டிரிப்டோ ஃபாசுபேட்டுக் கரைசலில் (trypto phos- phate broth) அமில நிலை 6.6-6.8 இல் நன்றாக வளரவல்லவை. குடுவையில் 10% கார்பன்-டை- ஆக்ஸைடு சேர்ந்தால் வளர்ச்சி மிகும். ஐயம் ஏற் படின், சீமை எலியின் உடலில் (guinea pigs) நோயு யிரிகளின் கரைசலைச் செலுத்தி, வளர்முறையைக் கண்டு தெளிவடையலாம். பால், திரட்டுப்பால் (cheese), குழாய் நீர், ஐஸ் கிரீம். உப்பிட்ட பன்றியிறைச்சி ஆகியவற்றில் இந்நோயுயீரி பல நாட்கள் உயிருடன் இருக்கும். தொழுவங்களின் சுவர்கள், தரை, சாணம் முதலிய வைகளில் இந்நோயுயிரி வெகுநாட்கள் வளரவல்லது. கதிரவன் ஒளி, மிகுந்த அமில நிலை ஆகிய வற்றால் இந்நோயுயிரி மடியும். மாடுகளி நோய்நிலை. இந்தியாவில் பண்ணை டையே 5.21 விழுக்காடும், ஊரக மாடுகளிடையே 6.55 விழுக்காடும் இந்நோய் பரவி நிற்கிறது. அர் சென்டீனா நாட்டில், வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லி யன் (பத்து இலட்சம்) கன்றுகள் இந்நோயால் அழிவு தாகக் கணக்கிட்டுள்ளார்கள். சூடான். நைஜீரியா நாடுகளில் பண்ணை மாடுகளிடையே 60 விழுக்காடு வரை இந்நோய்ப்பரவல் இருப்பதாகத் தெரிகிறது. நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்நோய் வெகுவாகக் குறைந்துள்ளது, அல்லது இல்லை என்றே சொல்லலாம். மாந்தர்களிடம் இந்நோய் அரிதாகவே காணப் படுகின்றது. 210 மில்லியன் மக்கள் தொகையுள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஆண்டொன்றுக்கு 200 பேர் இந்நோயினால் அவதியுறுகிறார்கள். தமிழகத்தில் ஓசுர், பவானி, கோபி, அவிநாசி. கோலை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், பழனி, பெரியகுளம், திருவில்லிப் புத்தூர், தென்காசி, சங்கரன்கோயில் வட்டங்களில் புருசெல்லா நோய் அதிகமாகக் காணப்படுகின்றது; மாடுகள், ஆடுகள், பன்றிகள் என்ற முறையில் இந் நோய் பரவியுள்ளது. செம்மறி ஆடுகளிடையே இந் நோய் குறைவாகத்தான் காணப்படுகின்றது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Medical Research) 1968 இல் நடத்திய ஆய்வின்படி, மாந்தர்களின் இரத்தத்தில், புருசெல்லா முறிபொருள் (Antibody) 1 இல் 100 என்ற விகிதத் திற்கு மேல் கீழ்க்கண்ட அளவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்நிலையை புருசெல்லா நோய் நிலைக்கு ஒப்பாகக் கொள்ளலாம். செங்கற்பட்டு 7.7% புனே 2.0% சென்னை 0.75% கல்கத்தா 10.0% தஞ்சாவூர் 1.0% வாரணாசி 1.0% வேலூர் 3. 6% டெல்லி 1.4% LO மதுரை 15.7% லூதியானா 0.2% அவுரங்காபாத் 17.0% பரவுமுறை. மக்களிடையே இந்நோய் நெருங்கிய உறவின் மூலமாகப் பரவுகிறது. பிறந்த கன்றின், பாதிக்கப்பட்ட நஞ்சுக்கொடியை உண்ணுதல், இறந்த கன்றை நக்கிக் கொடுத்தல், கருப்பைக் கசிவு களுடன் தொடர்பு ஏற்படுதல்,தொழுவச் சுவர்கள், தரை ஆகியவை மூலமாக நோயுயிரி பரவுகின்றது. விலங்கினங்களுடன் நெருங்கிப் பழகுதலே மக் களிடையே, இந் நோய் பரவக் காரணமாகிறது. சில இடங்களில் கொதிக்க வைக்காத பால் பருகும் பழக் கம் உள்ளது; இதுவும் ஒரு காரணம். தொழில் வழி பாதிப்பாக, உழவர்கள், ஆடு, மாடு மேய்ப்போர், கால்நடை மருத்துவர்கள், இறைச்சி தயாரிப்போர், அலுவலர் போன்றோர் இந்நோயினால் தாக்கப்படுகின்றனர். உடலுள் நுழைந்தவுடன் நோயணுக்கள் நிணநீர் முண்டுகளை அடைந்து, அங்கிருந்து இரத்தத்தில் கலந்து கல்லீரல், மண்ணீரல், எலும்பு மச்சை சிறு நீரகங்கள் முதலிய உறுப்புகளை அடைகின்றன. அவற்றில் உள்ள உட்பரப்புப் படைத்திசுச் (Raticulo endothelial) செல்களின் உள்ளே செல்கின்றன. இந் நோய் நுண்ணுயிரிகளை விழுங்கி, மடியச் செய்வது பெருந்துகள் அணுக்களே (Macrophage cells). நோய்க்குறி. நோயுயிரி உட்சென்ற மூன்று வாரங்களுக்குள் நோயாளிக்குக் காய்ச்சல், வியர்வை, மிகுந்த சோர்வு, உடல்வலி, பலமின்மை ஆகியவை தெரியவாம். காய்ச்சல் 37.7° இல் இருந்து 41.0 செல் சியஸ் வரையிலும் ஏறலாம் முதற்கட்ட உச்சநிலை தாண்டிய பின்பு, அக்காய்ச்சல் உயர்நிலை, தாழ்நிலை என அலை போன்று 5, 6 நாள்களில் தணியும், பின்னர் திரும்பும். இதையே அலைக் காய்ச்சல் என்ற பெயர் சுட்டுகிறது. இருப்பினும் பலருக்கு முறைப்படாக் காய்ச்சலே காணப்படும். அடுத்த கட்டமாக, முதுகுவலி, முதுகெலும்பு வலி, சோர்வு, உடல்சூடு, நிணமுண்டுகள் வீக்கம், ஈரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், மூட்டுகளில் தொடுவலி, மருத்துவர்களின் பரிசோதனையின் போது நுரையீரல்களில் நீரொலிகள் (குமிழ் ஒலிகள்)