342 அலைகள்
342 அலைகள் அலைகள் ஓர் ஊடகத்தினுள் ஒலியும் அலைகளாகப் பரவு கின்றன என்பதை நாம் அறிவோம். இந்த அவைகள் ஆற்றவை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குக் கடத்திச் செல்கின்றன. பொதுவாக அலைகளை இரு வகைப் படுத்தலாம். அலை முன்னேறும் திசைக்குச் செங்குத்துத் திசையில் ஊடகத் துகள்கள் அதிர்வுறு மேயானால் அவ்வலைகள் குறுக்கலைகள் (transverse waves) என்றும், அலைகள் செல்லும் திசையிலேயே துகள்களும் அதிர்வுறுமானால் அவ்வலைகள் நெட் டலைகள் (longitudinal waves) என்றும் அழைக்கப் படும். குறுக்கலையில், நடுநிலைப் புள்ளியிலிருந்து துகள்கள் மேலும் கீழுமாக மாறி மாறித் தள்ளப் படுகின்றன. துகள்கள் பெரும் உயரத்திற்குச் செல்லும் நிலை முகடு (crest) என்றும், மிகவும் தாழ்வாகச் செல்லும் நிலை அகடு (trough) என்றும் அழைக்கப்படும். நெட்டலை முன்னேறுகையில், அதன் வழியில் ஊடகத்தின் அடர்த்தி கூடியும் குறைந்தும் இருக்கும். இந்நிலைகள் முறையே நெருக்கம் (compression), தளர்வு (rarification) என்றும் சொல்லப்படும் (படம் 1,2) குறுக்கலை .λ கட்டத்தில் அதிர்வுறும் இரு புள்ளிகளுக்கு இடையே யுள்ள தொலைவு அலைநீளம் எனப்படும். அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், 27 ரேடியன் கட்ட வேறுபாடு (phase difference) கொண்ட இரு துகள் களுக்கு இடையேயுள்ள தொலைவு அலைநீளமாகும். 2ள கட்டவேறு பாட்டில் அலை நீளம் அமையும் வகையைப் படம் 3 காட்டுகிறது. குறுக்கலையில் அலை நீளமானது அடுத்தடுத்து இரு முகடுகளுக்கு இடை யேயுள்ள தொலைவு, அல்லது இரு அகடுகளுக்கு இடையேயுள்ள தொலைவு என்றும் கூறலாம். இதே போல், நெட்டலைகளில் அடுத்தடுத்துள்ள இரு நெருக்கங்களுக்கு இடையேயுள்ள தொலைவையோ, இரு தளர்வுகளுக்கு இடையேயுள்ள தொலை வையோ அதன் அலைநீளம் எனலாம். அலைநீளத்தை 1 (லாம்டா-lambda) என்னும் கிரேக்க எழுத்தால் குறிப்பது மரபு. நிலை அலை -000 எதிர்க்கணு of படம் 3. அலைநீளம் பின்வரும் அலகுகளால் அளக்கப் அலை செல்லும் திசை படுகிறது. C அகடு T முகடு படம் 1. நெட்டலை R CRCRCR CR c நெருக்கம் படம் 2. R தளர்வு அலை செல்லும் திசையில், அடுத்தடுத்து ஒரே மீட்டரும் அதன் மேல் கீழ் அலகுகளும் மைக்ரான் (micron) 10-8 மீட்டர் நானோ மீட்டர் (nano meter) = 109 மீட்டர் ஆங்ஸ்ட்ராம் அலகு(Angstrom unit) = 10-10 மீட்டர் ஓர் அலையியற்றியிலிருந்து (wave generator) ஒரு நொடிக்கு in அலைகள் வெளிப்படுமானால், அலைகளின் அதிர்வெண் n எனப்படும். ஓர் அலை யின் நீளம் ஆனதால், n அலைகளின் மொத்த நீளம் ni ஆகும். எனவே, ஒரு நொடியில் அலைகள் சென்ற தொலைவு, அதாவது அலையின் விரைவு v = n d ஆகும். நீர் நிலைகளில் ஏற்படும் அலைகளின் நீளம், சில சென்டிமீட்டர்களிலிருந்து சில மீட்டர்கள் வரை இருப்பதுண்டு. ஒலியின் வேகம் 0°C வெப்பநிலையில்