பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 அலைகளின்‌ குறுக்கீடு

344 அலைகளின் குறுக்கீடு வீச்சு சிறுமமாக இருக்கும. இரண்டு அலைகளின் வீச்சும் சமமாயிருந்தால் சிறும மதிப்பு சுழியாகும். வீச்சு பெரும மதிப்பு அடையும்போது அதனைக் குறுக்கீட்டு ஆக்க விளைவு (constructive interference) என்கிறோம். வீச்சு சிறும மதிப்பு அடையும்போது குறுக்கீட்டு அழித்தல் விளைவு (destructive interfer- ence) என்கிறோம். அலை ஆற்றல் அதன் வீச்சின் இருமடிக்கு நேர்விகிதத்தில் இருக்கும். தனி அலை யாய் இருந்தால் ஆற்றல் சமச்சீராய்ப் பரவும். ஒன் றுக்கு மேற்பட்ட அலைகள் குறுக்கிடும்போது விளையும் வீச்சு இடத்திற்கு இடம் மாறுபடுவதால் ஆற்றல் சமச்சீரற்றதாய்ப் பரவும். அலைகளின் மொத்த ஆற்றல் அழியாது. ஆனால் இடத்தைப் பொறுத்து ஆற்றல் பெரும மதிப்போ, சிறும மதிப்போ கொண்டிருக்கும். இந்த விளைவுக்கு அலை களின் குறுக்கீட்டு விளைவு என்றுபெயர். இந்த விளைவைப் பயன்படுத்தி, ஒலி அலைகளை உண்டு பண்ணி ஒரு மனிதனைச் சென்று அடையுமாறு செய்து அதன் ஓசை அவனுக்குக் கேட்காதவாறு செய்ய முடியும். இருஅலைக் குறுக்கீடு. குறுக்கீட்டு விளைவை இரு அலைகள் கொண்டு கணித மொழியில் விளக்க லாம். ஏதேனும் ஒரு புள்ளியில் முதல் அலையின் வீச்சு A = A, sin (ot + 0,) (1) என்று எழுதலாம். இதில் A. என்பது உச்ச வீச்சு மதிப்பு, என்பது அதிர்வெண்ணைப் போல 2 மடங்கு ஆகும். இரண் டாவது அலையின் வீச்சு B = Bo sin (ot + ) (2) ஆகும். இதில் (0-0g) என்பது இரண்டு அலைக ளுக்கும் உள்ள கட்ட வேறுபாடு B. என்பது இரண் டாவது வீச்சின் பெரும வீச்சு மதிப்பு இரண்டு அவை களின் குறுக்கீட்டால் உண்டாகும் விளைவு வீச்சு (A+B) Ao sin (wt+0₁) + Bo sin (wt+0₁₂) (3) அதாவது (A+B) = (A, sin D + Bo sin Vg cos ot + (Ao cos + Bo cosa) sin cot (4) C A, sin 0, + B, sing, = C sing), (5) என்றும் ,+ A. cos, + Bocos, = C Cos9, எடுத்துக் கொண்டால் (A+B) = C sin (ot + I) 2 C₁ = A+B + 2 A,B, cos (01-01) (6) என்றும் (7) (8) 'C' யின் மதிப்பு, A அல்லது B யின் மதிப்பை விடக் வீச்சின் குறையும்போது குறுக்கீட்டு அழித்தல் விளைவு உண் டாகிறது. அதிகமாகும்போது குறுக்கீட்டு ஆக்க விளைவு உண்டாகிறது. ஒளிபோன்ற ஒரு மின்காந் தக் கதிருக்குச் சமன்பாடு (7) இல் உள்ள மதிப்பு, மின்புல வலிமையைக் குறிக்கிறது. மின் புலத்தின் திசை, அலை இயக்கத்தின் திசைக்குச் செங்குத்தாக இருக்கும். இந்த மின்புல வெக்ட்டர் களை (vectors) அவை இணையாய் இல்லாத போது கூடக் கூட்டுதல் இயலும். ஒளிக் குறுக்கீட்டு நிகழ்ச்சி இரு அலைத் தொகு திகளை உண்டாக்கும் ஒளி மூலங்கள் ஓரியல் மூலங் களாக (coherent sources) இருத்தல் வேண்டும். யங் ஆய்வு (young experiment). ஓர் தனி மூலத் தைக் கொண்டு இரு ஓரியல் மூலங்களை அடையும் முறை யங் என்பவரால் 1801 இல் கையாளப்பட் டது. அதுவே ஒளியின் அலை இயக்கத்தை விளக்கும் முதல் ஆய்வாக அமைந்தது. இந்த ஆய்வில் ஒரு குறுய சிறு பிளவு ஒரு மூலத்தால் ஒளியூட்டப் படுகிறது. இந்தப் பிளவிலிருந்து வரும் ஒளி மேலும் இரண்டு இணையான அருகருகே உள்ள இரண்டு பிளவுகளை ஒளியூட்டுமாறு செய்யப்படுகிறது. இரண்டு பிளவுகள் மூலம் வெளிவரும் ஒளிகள் ஒன் றையொன்று குறுக்கிட, எதிரில் உள்ள வெள்ளைத் திரையில் குறுக்கீட்டு விளைவைக் காணமுடிகிறது. குறுக்கீட்டு விளைவின் காரணமாகத் திரையில் ஒளி வரிகளும் இருள்வரிகளும் அடுத்தடுத்து வரிசையாக இணையாகத் திரையில் தோன்றுகின்றன. அவை குறுக்கீட்டு வரிகள் எனப்படும். S, S படம் 1. யங் ஆய்வு ஒளி மூலம் ஓர் அலைநீளம் உடையதாயிருந்தால் (monochromatic) குறுக்கீட்டு வரிகள் தெளிவாகத் தெரியும். வரிகளின் அகலம் அலைநீளத்தைப் பொறுத் தது. அதிகமான அலைநீளம் உடையவை அகலமான வரிகளையும், சிறிய அலைநீளம் உடையவை குறுகலான வரிகளையும் தோற்றுவிக்கும். வெள்ளை ஒளியில்