பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 அலைகளின்‌ குறுக்கீடு

348 அலைகளின் குறுக்கீடு G G படம் 9. சமதளம் ஆய்தல் கண்ணாடித்தட்டு W - நீர் L- ஒளி எதிரொளிரும் ஒளியும், கண்ணாடித்தட்டின். மேற் பரப்பில் எதிரொளிரும் ஒளியும் குறுக்கீட்டு விளை வைத் தோற்றுவிக்கின்றன. தட்டிற்கு மேல் உள்ள நீர்,ஆப்பு (wedge) போன்று செயல்பட்டு நேரான ஒளி, இருள் குறுக்கீட்டு வரிகளைத் தோற்றுவிக் கின்றது. இந்த வரிக்கோடுகள் நேராகவும், இணை யாகவும், சமஅளவிலும் இருந்தால் கண்ணாடித் தட்டின் மேல்தளம், சமதளமாய் உள்ளது எனக் கொள்ளலாம். படம் 10. ஹைடிஞ்சர் வளையங்கள் (Haidinger fringes). ஒரு கண்ணாடித் தட்டை வைத்து, அதைச் சோடியம் விளக்கு போன்ற ஓரியல் மூலத்தால் ஒளியூட்ட வேண்டும். தட்டின் பரப்பிற்குச் செங்குத்துத் திசை யில் பார்வையைத் தொலைவில் வைத்தால் தட்டின் மீது வட்ட வளையங்கள் தெரியும். இவை ஹைடிஞ் சர் வளையங்கள் எனப்படும்.பார்வையை நிலை யாகக் கொண்டு கண்ணாடித்தட்டை நகர்த்தும் போது, வளையங்களும் நிலையாயிருந்தால் தட்டின் மேற்பரப்பும் கீழ்ப்பரப்பும் சமதளமாயும் இணை யாயும் உள்ளன என அறியலாம். ஃபிரெனல் எண் (Fresnel coefficient). கண்ணாடி மைக்கா போன்ற மின் கடத்தாப் பொருள்களின் பரப்பில் செங்குத்தாகப் பட்டு எதிர்பலிக்கப்பட்ட ஒளியின் வீச்சு ஃபிரெனல் எண்ணால் கொடுக்கப் படுகிறது. A = A. (01-02) (D≥ + nz) (12) இதில் A. என்பது படுகதிர் அலையின் வீச்சு, n, n என்பன ஒளி அடுத்தடுத்துச் சந்திக்கும் ஊடகங் களின் ஒளிவிலகல் எண்கள். எடுத்துக்காட்டாக ஒருமின் கடத்தாத படலத்தை எடுத்துக்கொண்டால், எதிரொளிர்ந்த ஒளியின் செறிவு சமன்பாடு (13) ஆல் கொடுக்கப்படுகிறது. C = A + B + 2AB cos p (13) இங்கு B என்பது படலத்தை ஊடுருவிச் சென்று இரண்டாவது பரப்பில் எதிரொளிர்ந்து மறுபடியும் படலத்தை ஊடுருவி 'A' உடன் இணையும் ஒளியின் வீச்சு ஆகும். B இன் மதிப்பு. B = (0, - D₂) (n,+) (14) c' என்பது விளைவு வீச்சு ஆகும். I) என்பது இரண் டாவது பரப்பிலும் அப்பால் உள்ள ஊடகத்தின் ஒளிவிலகல் எண் ஆகும். இங்கு முதல் பரப்பில் ஒளி ஊடுருவும்போது ஒளிச்செறிவு மாறவில்லை என்று கொள்ளப்பட்டுள்ளது. எதிரொளிர்வு இல்லாப்படலம்(Non-reflecting films). சமன்பாடு (13) இன் பயன்பாட்டினை எதிரொளிர்வு இல்லாப் படலத்தில் காணலாம். ஒரு கண்ணாடிப் பரப்பின் மீது, மின் கடத்தாப் பொருள் ஒன்றின் ஆவியைப்படியச் செய்து அதன் எதிரொளிக்கும் திறனை மிகக் குறைந்த அளவுடையதாய் ஆக்கலாம். சமன்பாடு (13) மூலம் cos p -1 எனும்போது இது இயல்வதாகின்றது.ஓர் அகன்ற நிறமாலைப் பகுதியுடைய ஒரு கருவியில் இது பயன்படுத்தப் பட்டால், விரும்பும் நிறமாலைப் பகுதியின் மையத் தில் முதல் நிலையில் first order) குறுக்கீட்டு