அலைச் சுருணை 365
முகப்பு இடைவெளி திரட்டி இடைவெளி பின்புற இடைவெளி படம் 2, திரட்டி இடைவெளி ஒரு சுருணையின் சுருள் இடைவெளி, துருவ இடை வெளிக்குச் சமமாக இருந்தால். அந்தச் சுருணை முழுமையான இடைவெளிச் (full pitch) சுருணை எனப்படும். இந்தவகைச் சுருள் பக்கங்கள் எதிரிடை யான துருவங்களின் கீழ் அமையும். ஆகையினால் தூண்டப்பட்ட மின் இயக்குவிசை கூடிக் கொண்டே போகும். தூண்டப்பட்ட பெரும மின் இயக்குவிசை இரண்டு சுருணைப் பக்கங்களினால் தூண்டப்பட்ட தனித்தனி மின் இயக்குவிசைகளின் தொகு கூட்ட லுக்குச் சமமாகும். சுருளின் இடைவெளி, துருவ இடைவெளியை விடக் குறைவாக இருந்தால் அந்தச் சுருணை, பகுதி இடைவெளிச் (partial pitch) சுருணை எனப்படும். இவ்வகைச் சுருணைப் பக்கங்கள் இரண்டின் மின் இயக்கு விசைகளிடையே தறுவாய் வேறுபாடு (phase difference) இருக்கும். ஆகையினால் மொத்த மின் இயக்குவிசை இரண்டு பக்கங்களின் மின் இயக்குவிசை களின் திசையக் கூட்டலுக்குச் (vector sum) சமமாகும். இது முழு இடைவெளிச் சுருணையினுடைய மொத்த மின் இயக்குவிசையைவிடக் குறைவாகவே இருக்கும். அலைச் சுருணை 365 நடைமுறையில் சுருள் இடைவெளி, துருவ இடை வெளியில் 8/10 பங்கு வரையில் இருக்கலாம். இதனால் மிகக் குறைந்த அளவே மின் இயக்கு விசை குறையும். திரட்டலினைச் சீர்ப்படுத்தவும், ஓர் இணைப்பின் செம்புச்செலவை மிச்சப்படுத்தவும், பகுதிப்புரியிடை வெளிச் சுருணைகள் உதவுகின்றன. சுருணை இடைவெளி. மின்னகப் பகுதியில் உள்ள ஒரே சுருளின் இருபக்கங்களிடையே உள்ள காடிகளின் எண்ணிக்கை அல்லது மின் கட த்தி களின் எண்ணிக்கையால் குறிக்கப்படும் இடைவெளி சுருணை இடைவெளி (winding pitch) எனப்படுகிறது. பின்புற இடைவெளி. மின்னகத்தின் பின்புறத்தில் சுருள் முன்னேறும் தொலைவை மின்னகக் கடத்தி களின் எண்ணிக்கையால் அளந்தால் அதுவே பின்புற இடைவெளி (back pitch) ஆகும். இது YB எனக் குறிக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட திரட்டித் துண்டத்தில் இணைக்கப்பட்ட கடத்திகளின் எண் ணிக்கை வேறுபாட்டிற்குச் சமமாகும். முகப்பு இடைவெளி. மின்னகத் திரட்டியின் ஓர முகப்பில் அமைந்த ஒரு சுருளில் அடங்கியுள்ள கடத்தி களின் எண்ணிக்கை முகப்பு இடைவெளி (front pitchy எனப்படும். இது YF எனக் குறிக்கப்படுகிறது. அல்லது, ஒரு சுருளின் இரண்டாவது சுருள் பக்கத் திற்கும் அடுத்த சுருளின் முதல் சுருள் பக்கத்துக்கும் (இரண்டும் மின்னகத் திரட்டியின் முகப்பு ஓரத்தில் இணைக்கப்பட்டன) இடையிலுள்ள தொலைவு முகப்பு இடைவெளி எனப்படும். இது மின்னகக் கடத்திகளின் எண்ணிக்கையில் குறிக்கப்படும். வேறு முறையில் கூறினால், மின்னகத்தின் மின் முனையில் இணைக்கப்பட்டுள்ள கடத்திகளின் எண்ணிக்கை வேறுபாடு முகப்பு இடைவெளி எனப்படும். படம் 3. இல் உள்ள அலைச் சுருணையின் விளக்கப்படம், முகப்பு இடைவெளியையும் பின்புற இடைவெளியையும் காட்டுகிறது. Y YC படம் 3. அலைச் சுருணை