366 அலைச் சுருணை
366 அலைச் சுருணை தொகு இடைவெளி. ஒரு சுருளின் தொடக்கத் திற்கும் அச்சுருளுடன் இணைக்கப்பட்ட அடுத்த சுருளின் தொடக்கத்திற்கும் இடையிலுள்ள தொலைவு தொகு இடைவெளி(resultant pitch) யாகும். அது YR எனக் குறிக்கப்படும். திரட்டி இடைவெளி. சுருளின் இருகம்பி முனைகள் இணைக்கப்பட்ட திரட்டித் துண்டங்களுக்கிடையே உள்ள தொலைவு திரட்டி இடைவெளி (commutator pitch.) குறிக்கப்படும். யாகும். YO 10015 இது Y c = YB + YF . p- துருவ எண்ணிக்கை Y B - பின்புற இடைவெளி Y F - முகப்பு இடைவெளி YA - சராசரி இடைவெளி ஆகையினால் சராசரி (average) இடைவெளி, B + Y F 2 வட தென் வட்ட z, கடத்திகளின் அல்லது சுருள் பக்கங்களின் மொத்த எண்ணிக்கை யென்றால், YA P = z + 2 ஃ Y A= Z + 2 P YA படம் 4. அலைச் சுருணை அலைச் சுருணை அமைப்பு. இச்சுருணையில் AB கடத்தி, தென் துருவத்திலுள்ள CD கடத்தியுடன் இணைக்கப்பட்டுப் பிறகு அடுத்த வட துருவக் கடத்தி EF உடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ் வாறே வடக்கு, தெற்கு துருவங்கள் வழியாக மாறி மாறி பயணஞ்செய்து முதலில் தொடங்கிய உமான விட துருவத்திலுள்ள கடத்தி AB ஐ வந்தடைகிறது. மின்னகத்தைச் சுற்றி ஒரே திசையில் தொடர்ச்சியான அலைகளாகச் சுருணை செல்லு வதால் இச்சுருணை அலைச்சுருணை எனப்படுகிறது. ஒருமுறை மின்னகத்தைச் சுற்றியவுடன் இ சுருணை, தொடங்கிய காடியின் பக்கத்தில் இடப்புற மாக உள்ள காடியில் வந்தடைந்தால் அச்சுருணை பின்னேறு (retrogressive) சுருணை எனப்படுகிறது. மாறாகத் தொடங்கிய காடியின் வலப்புறத்திலுள்ள காடியை வந்தடைந்தால் முன்னேறு (progresisve) கருணை எனப்படுகிறது. மேற்கண்ட படத்தில் உள்ள இரட்டை அடுக்குச் சுருணையை எடுத்துக் கொண்டால் AB உம் A' B' உம் இரண்டு கடத்தி வேறுபாட்டுடன் அமைந்துள்ளன. இதிலிருந்து கீழ்க் காணும் உறவு இங்கு வரையறுக்கப்படுகிறது. p எப்பொழுதும் இரட்டைப்படையிலிருப்பதால் 2-ம் இரட்டைப் படை எண்ணிலிருக்கும். + குறி முன் னேறு சுருணையையும், - குறி பின்னேறுசுருணையையும் குறிக்கும். Y A Z + 2 p என்பதால்YA இரட்டைப் - படை எண்ணாக இருக்க, z இன் மதிப்பு இடம் தருவதில்லை.z= 32 என்றால், 4 துருவப் பொறி யில் அலைச்சுருணையைக் கையாள முடியாது. z= 30 அல்லது 34 என்றால், அலைச்சுருணையை முழுமை யாகக் கையாளலாம். எளிய இரட்டை அடுக்கு அலைச்சுருணை. (எ.கா.) துருவங்கள் 4, மின்னகக் கடத்திகள் எண் ணிக்கை 30ஆக உள்ள எளிய அலைச் சுருணையின் சராசரி புரியிடை வெளி கீழேதரப்படும். YA= 30 ± 2 7 அல்லது 8 YA=7 என எடுத்துக்கொண்டால் YB = 7 = Y p. 4ஆம் படத்தின்படி, கடத்தி எண் 5, கடத்தி எண் (5+7) = 12 க்குப் பின் புறம் எடுத்துச் செல்லப்பட்டுத் திரட்டித் துண்டம் 5 இன் முகப்புடன் இணைக்கப்படுகிறது. அடுத்து கடத்தி எண் 12, திரட்டித் துண்டம் 12 (Yc = 7 என்பதால்) உடன் இணைக்கப்படுகிறது. 12 ஆம் எண் துண்டத்துடன், கடத்தி எண் (12+7) = 19 இணைக்கப்படுகிறது. இவ்வாறே தொடர்ந்து கடத்திகளை இணைத்துக்கொண்டே வந்தால், நாம் முதலில் தொடங்கிய 5 ஆம் எண் கடத்தியையே வந் தடைவோம். இவ்விதம் இந்தச் சுருணை முடிவடை கிறது.