பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைச்‌ சுருணை 367

25 27 14 13 120 1921 25 24 125 15 24 26 2B 30 13 14 15 1 N U+ R 3 + 4 b 7 8 9 10 11 12 13 14 15 1 அலைச் சுருணை 367 படம் 5. அலைச்சுருணையின் விரித்த விளக்கப்படம் மின்தொடி பொருத்தும் முறை.அலைச்சுருணையில் மின்தொடி (brush) பொருத்தப்படும் முறை சிறிது கடினமான செயலாகும் (படம் 5). மேற்கண்ட படத்தில் கடத்திகள், துருவங்களின் மேல் இட திலிருந்து வலமாக நகருவது போல்கருதப்படுகின்றது ஃபிளெம்மிங்கின் வலது கை விதியைப் பயன்படுத்தி மின்னகத்தின் வெவ்வேறு கடத்திகளில் தூண்டப் படும் மின் இயக்குவிசைகளின் திசையை அறியலாம். மின்னகத்தில் உருவாகும் இணைப்பாதைகளை அறிந்து கொள்ள, படம் 5இல் உள்ள வலய விளக்கப் படம் உதவுகிறது. சுருணை, இரண்டு மின்னியல் பகுதிகளாகப் பிரிக்கப்படுவதை இப்படத்திலிருந்து காணலாம். இதில் N-L புள்ளிகளின் இடையில் ஒரு பகுதியின் கடத்திகள் வைக்கப்படுகின்றன. N- M புள்ளிகளின் இடையில் அடுத்த பகுதியின் கடத்திகள் பகுக்கப்படுகின்றன. முதல் பகுதியில் உண்டா கின்ற மின் இயக்குவிசை இடமிருந்து வலமாகவும், இரண்டாம் பகுதியில் வலமிருந்து டமாகவும் இருப்பதைக் காணலாம். ஆகையினால், பொதுவாக ஒரு சுருணையில் இரண்டு இணைப்பாதைகள்தாம் உள்ளன. எனவே இரண்டு மின்தொடிகள் (நேர், எதிர்) மட்டுமே தேவைப்படுகின்றன. மேற்காட்டிய சமவலய விளக்கப்படத்தில்,இலை இரண்டு பகுதிகளிலும் தூண்டப்படும் மின் இயக்கு விசைகளைப் பிரிக்கும் முனை N ஆகும். ஆகவே, இப் புள்ளியே எதிர்மின்தொடியை வைக்க முடிவு செய்யும் புள்ளியாகும். இது திரட்டியின் பின்புறம் உள்ளதால் எதிர்மின்தொடி இரண்டு மாறுபட்ட இடங்களைக் கொண்டுள்ளது. அதாவது புள்ளி P அல்லது Q இல் உள்ளது. இந்தப் புள்ளிகள் சமவிளக்கப் படத்தில் 3, 11ஆம் திரட்டித் துண்டங்களைச் சார்ந்தவையாகும். நேர்மின் தொடியை அமைத்தல். தூண்டப்பட்ட மின் இயக்கு விசைகள் சந்திக்கும் இரண்டு புள்ளி களான LM ஆகியவை நேர்மின் தொடிகளைப் பொருத்தப்பட வேண்டிய புள்ளிகளாகும். இவை மின்னகத்திரட்டியின் பின்புறம் இருப்பதால், இப் புள்ளிகள் ஒரு கண்ணியால் (loop) பிரிக்கப்படுகின் றன. இவ்விணைப்பு 2, 9ஆம் கடத்திகளைக் கொண் டுள்ளது. ஆகவே இவ்விரண்டின் நடுப்புள்ளி R என்ற நேர்மின் தொடி அமைக்கப்பட வேண்டிய இடத் தைத் தீர்மானிக்கிறது. நேர்மின் தொடி புள்ளி R. இலும், எதிர்மின் தொடி புள்ளி Pஇலும் அமைக்கப் பட்டால் சுருணை கீழ்க்காணும் பாதைகளில் பிரிக்கப் படுவதைக் காணலாம். பாதை 1 9-16-23-30-7-14-21-28-5-12-19-26-3-10 2-25-18-11-4-27-20-13-6-29-22-5-8-1-24-17 + பாதை 2