பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 அலைச்‌ சுருணை

368 அலைச் சுருணை முதல் பாதையில் 9ஆம் கடத்தியின் மின்இயக்கு விசை இப்பாதையின் மற்ற கடத்திகளின் மின் இயக்குவிசைகளுக்கு எதிராக உள்ளது. இதே போன்று பாதை2 இல் உள்ள கடத்தி எண்2 இன் மின் இயக்குவிசை அப்பாதையின் மற்ற கடத்திகளின் மின்இயக்குவிசைகளுக்கு எதிராக இருக்கும். எப்படி யாயினும் இவை எவ்வித வேறுபாட்டையும் ஏற்படுத் துவல்லை. ஏனெனில், இக் கடத்திகள் பெரும்பாலும் துருவங்களுக்கு இடையில் அமைகின்றன. ஆகவே இந்த கடத்திகளின் மின் இயக்குவிசைகள் புறக்கணிக் கப்படலாம். அமைந்துள்ள L, M புள்ளிகளின் இடையில் கடத்திகள் 2-உம் 9-உம் எடுத்துக் கொள்வோம். மின்னகக் கடத்திகள் துருவ முகங்களின் மேல் இடை விடாமல் சுழலுவதால் படத்தில் காட்டிய கடத்தி களின் நிலை கண நேரத்திற்கு மட்டுமே யானதாகும். இதை மனத்தில் கொண்டால் கட த்தி 2 தென்துருவப் புலத்திலிருந்து வடதுருவப் புலத்திற்கு நகர முயலுவது தெள்ளத் தெளிவாகப் புலப்படும். ஆகையால் மின் இயக்குவிசை சுழி எதிர்திசையில் திரும்புகின்ற கட்டத்திலுள்ளது. ஆனால் கடத்தி 9 இதற்கு முன்பே திசைதிரும்புகின்ற நிலையைக் கடந்துவிடுகிறது. ஆகையினால் இதனுடைய மின் இயக்குவிசையின் அளவு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே போகிறது. மிகக் குறைந்த இடைவெளியில் உள்ள M புள்ளி மின் இயக்கு விசை களின் சந்திக்கும் புள்ளியாகிறது. ஆனால் இப்புள்ளி மின்னகத்தின் பின்புறமாக இருப்பதால், நேர்மின் தொடி இரண்டு மாறுபட்ட இடங்களில் ஒன்று R புள்ளியிலோ அல்லது S புள்ளியிலோ அமையும். இது அமையும் திரட்டித் துண்டத்தின் எண் 14. ஒரு நேர்மின் தொடி 7ஆம் துண்டத்துடன் தொடர்பு கொண்டால் இரண்டாவது நேர் மின் தொடி 14ஆம் துண்டத்துடன் தொடர்புகொள்ளும். R எண்ணிக்கைக்குச் சமமாயிருந்தால் இரண்டு மின் தொடிகள் மட்டுமே தேவை. மின்னோடியின் மின் இயக்குவிசை இவ்விரண்டு இணைப் ப தைகளில் ஒன்றில் மட்டும் ஏற்பட்ட மின்இயக்குவிசைக்குச் சமமாகும். E ay பன்மை அலைச் சுருணைகள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளியவகைச் சுருணைகள் ஒரே மின்னகத்தின் காடிகளில் பொருத்தப்பெற்றால் அது பன்மை அலைவகைச் சுருணையாகும் (multiplex wave winding). இவ்வகைச் சுருணையின் இணை வழிகளின் எண்ணிக்கை அதனுடைய எளிய வகைச் சுருணைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கிறது. நடைமுறையில் இருமைச் சுருணைகள் தாம் பயன் படுத்தப்படுகின்றன. இந்த இருமைச்சுருணையில் எத்தனை துருவ எண்ணிக்கை இருந்தாலும் நான்கு இணைவழிகள் மட்டுமே அமையும். மின்னகத்தைச் சுற்றிச்செல்லும் அலையைக் காணும்போது அலைமுனை முதல் துண்டத்திற்கு அடுத்த துண்டத்தில் வராது. ஆனால் முதல் துண்டத் திலிருந்து இரண்டு துண்டங்கள் முன்னமைந்த துண்டத்திற்கு வந்து சேரும். இத்தகைய இருமைவகை அலைச் சுருணையை அணைச்சுருணையுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இவ்வகைச் சுருணை அப்போது தவளைக்கால் சுருணை (frog leg winding) எனப்படும். சம மின்னிலை இணைப்பு முறைகள். இணை வழிகளின் மின்தடை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மின் இயக்கு விசையில் சிறிய மாறுதல் ஏற்பட்டால் அதன் காரணமாக ஈடு செய்யும் மின்னோட்டம் சுருணையின் ஓர் இணைப்பாதையிலிருந்து அடுத்த இணைப்பாதைக்குஓடும். இதனால் மின்தொடி மீது Q 9 2-25-18-11-4-27-20-13-6-29-22-15-8-1- 23-30-7-14-21-28-5-12-19-26-3-10- மாறுபட்ட நிலையில் 4 தொடிகள் மட்டும் அமைக்கப்பட்டால் அதனுடைய பலன், ஒரே துருவ அமைப்பில் உள்ள இரண்டு மின்தொடிகளை இணைக்கும் இணைப்பைக் குறுக்கிணைப்புச் செய் வதாகும். இதுவே மேலுள்ள சம விளக்கப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆகையினால் இரண்டு மின் தொடிகள் அல்லது நான்கு மின்தொடிகளைப் பயன் படுத்தினாலும் மின்னகச்சுருணையின் இணை நிலைப் பாதைகளின் எண்ணிக்கை இரண்டாகும். எனவே, மின்தொடிகளின் எண்ணிக்கை துருவங்களின் 24 1 P 17 அதிக மின்சுமை ஏற்பட்டு திரட்டியில் தீப்பொறி ஏற்படும். இத்தகைய ஈடு செய்யும் மின்னோட்டத் தைத் தவிர்ப்பதற்குச் சம மின்னிலை இணைப்பு கள் (equipotential connections) பயன்படுகின்றன. . இந்த இணைப்புகள் ஒரே துருவத்திலுள்ள மின்தொடிகளின் அடியிலுள்ள திரட்டித் துண்டங் களை இணைக்கின்றன. சம மின்னிலை இணைப்பு கள் மின்தொடிகளின் மின்சுமையைக்குறைப்பதுடன், இவற்றின் வழியாக ஓடும் மின்னோட்டம், காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது. இதனால் காந்தச் சுற்றில்