பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைநீளச்‌ செந்தரங்கள்‌ 373

எனப்படும். இப்புதியமுறை நடைமுறையில் புகுந்தால் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் செந்தரங்கள் வழக்கொழிந்து விடலாம். 1960 ஆம் ஆண்டுவரை 86 Kr கதிரின் அலை நீளமான 1,650763. 73 மீட்டரின் செந்தரமான அள வாகக் கொள்ளப்பட்டது. அப்போது இருந்த தொழில்நுட்ப முறைகளுக்கு ஏற்பப் பிறப்பிக்கப் பட்ட கூர்மையான நிறமாலைக் கோடுகளுக்குத் தக்க வாறு தரக்குறிப்பீடுகள் (specifications) வடிவமைக் கப்பட்டன. லேசர்கள். 20 நிலைப்படுத்தப்பட்ட 3He Ne போன்ற பொருத்தமான வளிமக்கலவையுடைய (gas mixture) மின்மக்குழலும் (plasma tube) மீத்தேன் அல்லது அயோடின் போன்ற ஆவிகள் (vapours) தக்க அழுத்தத்தில் அடைக்கப்பட்ட உறிஞ்சுகலமும் (absorption cell) ஒரு குழியில் (cavity) பொருத்தப் பட்ட அமைப்பே நிலைப்படுத்தப்பட்ட லேசர் ஆகும். 20 முதல் 30 செ.மீ. வரை நீளமுள்ள இந்தக் குழியின் இரு முனைகளிலும் உள்ள பிடிகளில் (holder) ஆடிகள் (mirror) மாட்டப்பட்டுள்ளன. ஒரு பொருத்தியில் அழுத்தமின் ஆற்றல் வடிவமாற்றி (piezo-electric-transducer) மாட்டப்பட்டுள்ளது.தக்க பகுதிகளுடைய ஒரு கட்டுப்பாட்டுக் கண்ணி (servo loop) மின்திறன் உள்ளீட்டையும் நிலைப்படுத்தியை யும் கட்டுப்படுத்துகின்றது.ஓர் எளிய லேசரைக் குறுக் கீட்டுமானியால் (interferometer) பகுத்தாய்ந்த போது, அத்தகைய லேசரிலிருந்து வரும் ஒடுங்கிய ஒளிக்கற்றை டாப்ளர் பட்டைகளுடன் (Doppler) broadening) நிறமாலை வரியினைக் காண்பித்தது. காந்த இயல்புள்ள ஓரிடத்தனிமத்தின் அதிநுண்கட்ட மைப்பையும் (magnetic-isotope hyperfine structure) காண முடிந்தது. He - Ne - இல் பலவகை ஓரிடத் தனிமங்கள் கிடைப்பதால் அவை லேசர் தயாரிப் பிற்குப் பயன்படுத்தப்படுகின்றன எடுத்துக்காட்டாக 2He -Ne மட்டும் அல்லது He -22Ne மட்டும்). பி.எச். லீ என்பவரும் எம்.எல்.எஸ். கலோனிக் (M.L.S.Kolonic) என்பவரும் டாப்ளர் பட்டையா தலைத் தவிர்க்கத் தெவிட்டு உறிஞ்சல் (saturation absorption) முறையை 1967இல் பயன்படுத்தினர். அன்றிலிருந்து லேசர் நிலைப்படுத்தப்படுதற்கும் உயர் தெளிவுடைய நிறமாலையியலுக்கும் (high resolution spectroscopy) மீத்தேன், அயோடின் போன்ற சில குறிப்பிட்ட ஆவிகளைப் பயன்படுத்திய முறையே நடைமுறையில் பயன்பட்டு வருகிறது. மீதேனிலுள்ள 12.39 nm அளவுடைய உறிஞ்சு கோட்டின் உதவியுடன் ஒரு He-Ne லேசர் நிலைப் படுத்தப்பட்டது. 1271 அல்லது 1291 முதலிய வற்றிலுள்ள 633nm அளவுடைய உறிஞ்சுகோட்டின் நுண் கட்டமைப்பின் உதவியுடன் "He-2°Ne லேசர் அலைநீளச் செந்தரங்கள் 373 நிலைப்படுத்தப்பட்டது. பார்க்க, அணுக்கட்டமைப் பும் அலைமாலையும்; அதிநுண்கட்டமைப்பு; குறுக் தீட்டளவியல், ஓரிடத்தனிமப் பெயர்ச்சி; லேசர். அ.அ.அ.கு. (CIPM) பரிந்துரைகள். ஐந்து பல்வேறு ஆய்வகங்களின் மீத்தேன், அயோடின் மூல மாக நிலைப்படுத்தப்பட்ட லேசர்களைப் பயன் படுத்தி ஒளியின் வெற்றிட அலைநீளங்களைக் (vacuum wavelengths) குறுக்கீட்டுமானியால் அளந்து அ.அ.அ.கு.(CIPM) 1973ஆம் ஆண்டு சில பரிந்துரை செய்தது. அ.அ.அ.கு. அமைத்த மீ.வ.ப.கு. அதாவது மீட்டர் வரையறை பரிந்துரைக் குழு (CCDM - Commite Consultativ pour la Definition du Metre) பரிந்துரைத்த அளவீடுகளின் சுருக்க விவரம் பின்வருமாறு. சுளைச் 1) மீதேன் மூலக்கூற்றின் V. பட்டையில் (V, Band) P (7) கோட்டுக்கு நிலைப்படுத்தப்பட்ட He - Ne லேசர் உமிழும் ஒளியின் அலைநீளம் 3, 392,231.40 x 10 மீட்டர். - -19 2) 197 இன் 11-5 பட்டையில் R (127) கோட்டின் j உறுப்பிற்கு (i component) நிலைப் படுத்தப்பட்ட He - Ne லேசர் உமிழும் ஒளியின் அலைநீளம் 632,991.399 × 10 மீட்டர். உ -12 11-5 3) 'i' உறுப்புடன் தொடர்புடைய காரணத் தால் 1971 அல்லது 124I, ஆகியவற்றின் பட்டையில் R. (127) கோட்டுக்குரிய பிற உறுப்பு களையும் பல அலைவெண்களால் அளந்து செந்தர அலைநீளத்திற்குப் பயன்படுத்தலாம். கணக்கிடப் பட்ட இந்த அலைநீளங்களும் i உறுப்பினதைப் போன்றே துல்லியமானதாகும். 4) பரிந்துரை 1-இல் செய்யப்பட்ட மீத்தேன் கோடுகளின் அலைவெண்ணான 88, 376, 181, 627+50Hz பயன்படுத்தி தற்போதைய நேர இடை வெளிச் செந்தரங்களுடன் (standards time interval) சீசியம் கதிர்க்கற்றை அலைவியற்றியுடன் (cesium beam oscillator) இணைத்து ஒரு நேரடி அலைவெண் தொடரை (direct frequency chain) உருவாக்கினர். நேர இடைவெளிச் செந்தரங்களைப் பரிந்துரை 1-இல் சொல்லப்பட்ட அலைநீளத்தால் பெருக்கும் போது, வெற்றிடத்தில் ஒளிபரவும் விரைவு (velocity) 299,792,459,2 + 1.1 nm எனக் கிடைக்கிறது. எதிர்கால ஆராய்ச்சிகள். ஒரு 'மீட்டர்' என்பதை வரையறுக்க (define) ஒளியின் வேகத்தை அளவிடுதல் போன்ற முக்கியமானச் செந்தரங்களை அதிதுல்லியத் தோடு பெறுவதற்கு மீ.வ.ப.கு. (மீட்டர் வரையறைப் பரிந்துரைக் குழு) அமைப்பு தொடர்ந்த ஆராய்ச்சியைத்