பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 அலைப்பட்டை அகலம்‌

384 அலைப்பட்டை அகலம் குறிப்பலையின் செய்தியை முறைத்தொகுப்பு (encoding) செய்வதன் மூலம் தேவையான அலைப் பட்டை அகலத்தைக் குறிப்பலையின் அலைப் பட்டை அகலத்தைக் காட்டிலும் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்படி செய்யலாம். காண்க, செய்திக் கோட்பாடு (Information theory), குறிப் பேற்றம் (modulation). அலை வீச்சுக் குறிப்பேற்ற அமைப்பிலுள்ள செலுத்தல், அலைவாங்கல் - மின்சுற்று வழிகளின் ஒட்டு மொத்த அலைப்பட்டையின் அகலத்தேவை, அந்த அமைப்பின் அலைவெண் துலக்கத் தரக்குறிப்பைத் (frequency response specification) சார்ந்து அமையும். ஒரு கதிர்வீச்சு (Radio) ஊர்தியலையின் (carrier) இருபுறங்களிலும் பக்க அலைப்பட்டை (side band) எனும் அலைப்பட்டைகள் இருக்கும். தனியாக உள்ள ஒரு பக்க அலைப்பட்டையின் அகலம், குறிப்பலையின் அலைப்பட்டை அகலத்துக்குச் சமமாகும். குறிப்பலை யாகச் செலுத்தப்படும் கேள்வி அலைவெண் கள் 3,000 Hz ஆக இருந்தால் கதிர்வீச்சு அலையின் அலைப்பட்டையகலம், மேல், கீழ் ஆகிய பக்கப் பட்டைகள் இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால். ஏறத்தாழ 6,000 Hz ஆக அமையும். இங்கு ஒவ்வொரு பக்க அலைப்பட்டையும் 3,000 H7ஐ மட்டுமே அலைப்பட்டையகலமாகப் பெற்றிருப் பதைக் காணலாம். அலைவெண் குறிப்பேற்ற அமைப்புகளில் குறிப் பலைக்கும், இரைச்சலுக்கும் உள்ள விகிதம் குறிப் பிட்ட வாயில் மதிப்பைவிட (threshold value) அதிக மாகும் போது அதனுடைய அலைப்பட்டை அகலத்தை வீச்சுக் குறிப்பேற்றத்தைவிட அதிக மாக்கிக் குறிப்பலைக்கும் இரைச்சலுக்கும் உள்ள மின்திறன் விகிதத்தைப் பயன்மிக்கதாக்கலாம். இதைக் கீழேயுள்ள சமன்பாடு குறிக்கிறது. = F" அ.கு. குறிப்பலை/இரைச்சல் விகிதம் வீ.கு. குறிப்பலை/இரைச்சல் விகிதம் B2 இங்கு F என்பது குறிப்பேற்றமில்லா நிலையிலிருந்து குறிப்பேற்றிய நிலைக்கு மாறும்போது ஏற்படும் பெரும் அலைவெண் இடைவெளி, B என்பது பெரும குறிப்பேற்ற அலைவெண். இந்தச் சமன்பாட்டுக் கருத்து, துடிப்புக் குறிப்பேற்ற அமைப்பு போன்ற பிறவகைக் குறிப்பேற்றங்களுக்கும் பொருந்தும். அலைப்பட்டை அகலத்தேவைகள் செய்தித் செய்தித் தொடர்பு முறை தொலைவரி (100 சொற்கள்!நி) தொலைபேசி உயர்வேகத் தகவல் செலுத்தம் (1,000 பிட்கள் /நொடி) தொடர்பு அமைப்புகளுக்கு வேண்டிய கதிர்வீச்சு அலைமாலையைத் (Radio spectrum) தீர்மானிக் கின்றன. பல்வேறு வானொலி பணியகங்களுக்கும் நிலையங்களுக்கும் தேவையான கதிர்வீச்சு அலை மாலையை ஒதுக்கீடு செய்வதில் அவற்றின் அலைப் பட்டை அகலத் தேவைகள் கருத்தில் கொள்ளப்படு கின்றன. இத்தகைய ஒதுக்கீடுகளைப் பாதிக்கும் கூறுபாடுகளை அறிய, காண்க, வானொலி அலை மாலை ஒதுக்கீடுகள். குறிப்பேற்றும் அலைவடிவமும் குறிப்பேற்றும் முறையின் தன்னளவுகளும் (parameters) கொடுக்கப் பட்டால், ஃபூரியர் பகுப்பாய்வு மூலம் வீச்சுக் குறிப் பேற்ற அமைப்பிலும் துடிப்புமுறைக் குறிப்பேற்ற அமைப்பிலும் செலுத்தப்படும் குறிப்பலை மாலையைக் கண்டறியலாம். அலைவெண் குறிப் பேற்ற அமைப்புகளில் பெசல் சார்புகளைப் பயன் படுத்திச் செலுத்தப்படும் குறிப்பலைமாலையைக் கண்டறியலாம். வானொலி செய்தித் தொடர்பு முறைகளின் அலைப்பட்டை அகலத் தேவைகள், செலுத்தப்படும் குறிப்பலைப்பட்டை அகலத்தையும், குறிப்பலைகள் கடந்து செல்லும் அலைசெலுத்திகளிலும் அலை வாங்கிகளிலும் உள்ள மின்சுற்றுவழிகளின் அலை வெண் துலக்கத்தையும் சார்ந்து அமையும்.உமிழ்வு அலைப்பட்டை அகலம் (emission bandwidth) மொத்தக் குறிப்பலைத் திறனையும் உள்ளடக்கிய அலைவெண்பட்டையால் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக, 1947 ஆம் ஆண்டின் அனைத்துலக வானொலி விதிமுறைகளின்படி உமிழ்வு அலைப்பட்டையகலம் கீழ்க்காணும்படி வரையறுக்கப்பட்டுள்ளது. உமிழ்வு அலைப்பட்டை என்பது அந்த அலைப்பட்டைக்குக் கீழும் மேலும் இரு பக்கங்களிலும் அமைந்துள்ள மின்திறன், குறிப் பிட்ட உமிழ்வால் வெளியிடப்பட்ட மொத்தச் சராசரி மின்திறனில் 0.5 விழுக்காடு மட்டுமே உள்ளபடி அமையும் அலைப்பட்டை ஆகும். ஒவ்வொரு வகைச் செய்தித் தொடர்பு முறைக் கும் தேவையான அலைப்பட்டை அகலத்தைத் தக்க செந்தரங்களில் காணலாம். கீழே ஒவ்வொரு செய்தித் தொடர்புக்கும் பயன்படும் அலைப்பட்டை அகலம் அந்தந்தச் செய்தித் தொடர்பு முறைக்கு எதிராகத் தரப்பட்டுள்ளது. அலைப்பட்டை அகலம் Hz) 170 3,000 100 2,000 - 3,000