பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 அலையகம்‌

386 அலையகம் நிலையில் அமைந்தால், அப்படிகத்தின் அலைமுனை வாக்கத் திசை, அதன் நீக்கத் திசையாக அமையும். இரு குறுக்கிட்டமைந்த அலைமுனைவாக்கிகளுக் கிடையில், ஒரு நிறமற்ற, சீரற்ற படிகம் வைக்கப் பட்டால் அது பல நிறங்களில் காட்சியளிக்கும். படி கங்களில் ஏற்படும் முறுக்கமைப்புகளில் சிலவற்றைக் கூடக் கண்டறியலாம். ஒரு படிகத்தின் ஒளி அச்சைப் பற்றிய அதன் வடிவ அமைப்பையும் எளிதில் காண லாம். ஒரு சீரான ஒளிபுகும் ஊடகம், அழுத்தத் தினால் சீரற்ற ஒளிபுகும் ஊடகமாக மாற்றமுறும் என்ற உண்மையினை புரூஸ்டர் 1816 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். அழுத்தப்பட்ட ஒரு பொருளைக் குறுக்கிட்டமைந்த அலை முனைவாக்கிகளுக்கிடையில் வைத்தால் பொருளில் தோன்றும் இரட்டை ஒளி விலகல், சிறிதளவு ஒளியைக் குறுக்கிட்டமைந்த அலைமுனைவாக்கி வழியாக வெளிவிடும். கட்டடக் கலைத்துறையில் ஒரு கட்டட மாதிரியை ஒளி ஊடுருவும் பொருளினால் செய்து அதன் மீது பளுவை வைத்தால் கட்டடத்தில் ஏற்படும் அழுத் தத்தின் தன்மையை அலை முனைவாக்க ஒளியைக் கொண்டு எளிதில் அறியலாம். எனவே, இம்முறை அதிக அழுத்தத்தில் பயன்படும் கருவிகளின் தரக் கட்டுப்பாட்டில் பெரிதும் பயன்படுகிறது. அலை முனை வாக்க நுண்ணோக்கிகளின் உதவியால் ஒரு பொருளில் அடங்கியுள்ள நுண்பகுதிகளின் கட்ட எமப்பு பற்றியறிய இயலும். இது துறையில் பெரிதும் உதவுகிறது. நூலோதி மருத்துவத் அ.பா. 1. Clarke D., and Grainger, J. F., Polarized Light and Optical Measurements 1971. 2. Shurcliff, W. A., Polarized Light. Harvard Univeristy Press. Cambridge. 1966. அலையகம் இரண்டு நீள வேறுபாடுடைய அலைகளின் மேற் படிவு (superposition) அலையகத்தை (wave packet) ஏற்படுத்துகிறது. இந்த அலைகள் தக்க தறுவாய் வேறுபாட்டுடன் பரவும்போது இவற்றின் தொகு அவையில் சில இடைவெளிகளில் மட்டும் வீச்சுகள் அமைகின்றன. அப்பகுதி அலையகம் எனப்படுகிறது. அலைநீளத் தலைகீழ் மதிப்பான k(k-i-) அளவு டைய ஒரு பருமான (One dimensional) அலை யகம் Ak என்ற பட்டையில் அமைந்தால் அலையகத் தின் சிறும அளவு x = (2 Ak)-1 ஆகும். எல்லா உறுப்பு அலைகளும் ஒரே திசையில் செல்லும்போது அலையகத்தின் விரைவு, தொகுதி விரைவான vg=dfg/dk- க்குச் சமம். இது k யின் சராசரியில் அளக் கப்படும். இங்கு f என்பது அலைவெண் தறுவாய் விரைவு வைச் சார்ந்தமைந்தால் Vg#c; மேலும் (x நேரத்தைப் பொறுத்து மாறும். காண்க, தொகுதி விரைவு (group velocity); தறுவாய் விரைவு; குவான்ட்டம், (குவைய) இயக்கவியல்; குவான்ட்டம் (குவையக்) கோட்பாடு, சார்பியலற்ற. அலையளவி ஒரு மின்காந்த அலையில், சமதறுவாய் உள்ள அடுத் தடுத்த பரப்புகளுக்கு இடையில் உள்ள வடிவஇயல் இடைவெளியை(geometric spacing) அளக்கும் சுருவியே அலையளவி (wavemeter). அளக்கப்படும் அலை செலுத்த அமைப்பைச் சார்ந்த தறுவாய் விரைவால் (phase velocity) ஏற்படும் கருவி அளவீட்டுப் பிரச் சினைகளைத் தவிர்க்க, ஒளியின் விரைவைக் குறிப் பலையின் (signal) அலைவெண்ணால் வகுக்கும்போது கிடைக்கும் வெட்டவெளியின் அலை நீளத்தை (free space length) மேற்கோள் அலைநீளமாகக் கொண்டு அலை அளவிகளை அளவீடு செய்து (calibrate) கொள்ளலாம். 100 MH அலைவெண் வரை பயன்படும் அலை அளவி, ஓர் ஒத்திசைவு காட்டி (resonance indicator) உடனமைந்த ஒத்திசைவித்த LC மின்சுற்றுவழியே. ஹெச்.எர்ட்சு அவர்கள் பயன்படுத்திய அமைப்பே இது. அலைகாணியின் தேர்வு, குறிப்பலையின் திறன் மட்டத்தையும் (power level) துல்லியத் தேவையையும் பொறுத்தது. பல வாட்டுகளுக்கும் அதிகமாகத் திறன் மட்டமும் நடுத்தரத் துல்லியமும் தேவைப்பட்டால் D என்றதொடர்-நிலைத் தூண்டியுள்ள (scries inductor) சிறிய குமிழ் விளக்கை ஒத்திசைவு காட்டியாகப் பயன்படுத்தலாம். தூண்டல் மின்னோட்டம் பெரும மாகும்போது குமிழ் விளக்கு சுடருடன் எரியும். உயர்துல்லியமும் குறைந்த திறன் மட்டமும் உள்ள போது விளக்கின் சுமையைத் தாங்க முடியாது. ஒத்திசைவின்போது அதிகமான மின்னழுத்தம் உள்ள மின்கொண்மியின் (capacitor) மின்னழுத்தத்தை ஒரு மின்துகளியல் ஓல்ட்டளவியால் (electronic voltmeter) அளக்கலாம். கொண்மி அளவில் மாறும் இயல்புடையதாகவும் அலைநீள அலகுகளிலோ, அலைவெண்ணிலோ அளவீடு செய்யப்பட்டதாகவும் இருக்கவேண்டும்.