அலையியக்கம் 389
அதிரும் பொருள்களில் அதிர்வெண், 20-க்கும் 20,000-க்கும் இடைப்பட்டிருக்கும்போது உண்டாகும் ஒலி அலைகளை நம் காதுகளால் கேட்க இயலும். இதற்கு வெளிப்பட்ட அதிர்வெண்கள் கொண்ட ஒலி அலைகள் நம் காதுகளுக்குக் கேளா. இவ்வாறு நம் காதுகளுக்குக் கேட்காத, 20,000-க்கும் மேற்பட்ட அதிர்வெண்கள் கொண்ட ஒலி அலைகள் 'கேளா ஒலி' (ultrasonics) அலைகள் எனப் படும். இவ்வொலிகளின் ஆற்றல் வியுணரும் ஒலி அவைகளின் ஆற்றலைவிட மி அதிகமாகும். அலை இயக்கத்திற்குரிய பொதுவான பண்பு களாகிய அலை விலகல் (refraction), உட்கவர்தல் (absorption), அலை பிரிகை (dispersion), அலைக் குறுக்கீட்டு விளைவு (interference), அலை விளிம்பு விலகல் (diffraction) முதலியன ஒலி அலைகளுக்கும் பொருந்தும். திண்பொருளில் அலை இயக்கம். திண்பொருளில் செல்லும் அலை வடிவங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை, குறுக்கலைகள் (transverse waves), நெட்டலைகள் (longitudinal), முறுக்கலைகள் (torsio- nal waves) எனப்படும். விறைப்பாக இழுக்கப்பட்ட ஒரு மெல்லிய கம்பியில் செல்லும் அலைகள் குறுக்கு அலைகள் ஆகும்.குறுக்கலை இயக்கத்தில் ஊடகத்தின் துகள்கள் அலை செல்லும் திசைக்குச் செங்குத்தாக அதிரும். அப்பொழுது அலை முகடுகளும் அகடு களும் தோன்றும். நெட்டலை இயக்கத்தில் ஊடகத் தின் துகள்கள் அலை செல்லும் திசைக்கு இணை யாக அதிரும். அப்பொழுது அலை நெருக்கங்களும் அதிர்வு- தளர்வு அலை செல்லும் திசை படம் 4. குறுக்கலை நெருக்கம் அலை செல்லும் திசை படம் 5. நெட்டலை (condensations), தோன்றும். தளர்வுகளும் அலையியக்கம் 389 (rarefactions) ஒரு தடித்த உருளை வடிவத் திண்பொருளை எடுத்து அதன் ஒரு முனையை உள்ளங்கையில் தொட்டுக் கொண்டு, மறுமுனையில் ஒரு சுத்தியால் மெதுவாகத் தட்டினால் உள்ளங்கையில் அலை அதிர்வை உணரலாம். இதில் அலையானது நெட் டலை வடிவில் செல்கிறது. இந்த அலையின் வேகம் C = 9 P ஆகும். இதில் q என்பது திண் பொருளின் 'யங்' மீட்சிக் கெழு (Young's modulus of elasticity), p என்பது அடர்த்தி. ஓர் உலோகத் தண்டின் ஒரு முனையைத் தொடர்ந்த அதிர்வுக்கு உள்ளாக்கினால் அதனூடே தொடர்ந்த நெட்டலை இயக்கம் தோன்றும். இந்த அலை இயக் கத்தில் தோன்றும் ஒரு நெருக்க மையத்திற்கும் அதனை அடுத்துள்ள தளர்வு மையத்திற்கும் இடை யிலுள்ள தொலைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஓர் உலோகத் தண்டின் வழியாக முறுக்கு அலை களையும் செலுத்த முடியும். (படம் 6(அ)-இல் ஓர் உருளை வடிவ உலோகத் தண்டு காட்டப்பட்டுள் ளது. அதன் மீது அதன் அச்சுக்கு இணையாக AB என்னும் கோடு வரையப்பட்டுள்ளது. இந்தத் தண் டின் கீழ் முனையைக் கெட்டியாகப் பொருத்திவிட்டு மேல் முனையை ஒரு குறிப்பிட்ட அளவு திருகினால் AB என்ற நேர் கோடும் திருகல் அடைந்து A, B என்ற நிலையை அடையும். இவ்வாறு ஒரு நீளமாக உலோகத் தண்டைத் திடீரென்று திருகினால், தண் டில் முறுக்கலை தோன்றி ஓடும். இதே தண்டை மாறிமாறி முறுக்கினால் (alternating twists) முறுக் கலையானது தொடர்ச்சியாகத் தோன்றித் தண்டின் வழியாக ஓடும். இந்த நிலையைப் படம் 6 - ஆ காட்டு கிறது. த்தகைய முறுக்கலையின் வேகம் N/p ஆகும். இதில் N என்பது விறைப்புக் C கெழு (rigidity அடர்த்தி. modulus); p என்பது தண்டின் பாய்மப் பொருளில் ஒலி அலைகள். அதிரும் பொருள்கள் ஒலி அலைகளை உண்டாக்குகின்றன. அதிரும் ஒரு பொருளைக் கொண்டு ஒரு திண் பொருளைத் தொடும்பொழுது திண்பொருளிலும் அலைகள் உண்டாகின்றன. இந்த அலைகள் குறுக் கலைகளாகவோ, நெட்டலைகளாகவோ, முறுக்கலை களாகவோ இருக்கலாம். இந்தத் திண்பொருளுக்கு அருகில் காதை வைத்துக் கவனித்தால் ஒலி அலை களை உணரமுடியும். இதேபோல, நீர்மப் பொருள் களிலும் வளிமப் பொருள்களிலும் ஒலி அவை களைச் செலுத்த முடியும். ஆனால் நீர்மம், வளிமம்