அலையெழுச்சி அமிழ்த்தி 397
காட்டாக, இவை மின்தூண்டு சுமை அல்லது மின் கொண்மச் சுமைகளை (inductive/capacitive loads) மின்சுற்றில் இணைக்க/பிரிக்க வல்ல சுற்றுவழிப் பிரிப்பிகளை (circuit breakers) இயக்கும்போது (swit- ching) நேரிடக்கூடும்; காப்பிட்ட நடுநிலைக் கம்பி யுடன் கூடிய முத்தறுவாய் அமைப்பில் (three phase system with insulated neutral) திடீரென ஏதேனும் ஒரு தறுவாயில் நிலத்தொடர்பு (earth fault) ஏற்படு மாயின் முதல் வகை அலையெழுச்சிகள் உருவாக லாம். இரண்டாம் வகையில் அலையெழுச்சிகள் மின் அமைப்பின் குறிப்பிட்ட மின்திறன் அலைவெண்ணை (power frequency) ஒத்த அலைவெண்ணுடன் சில நொடிகளே நீடிக்கும் இயல்புடன் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, மின்வலையிலிருந்து (grid) துண்டிக்கப்பட்ட ஒரு மின் ஆக்கியின் (generator) அதிவேகச் சுழற்சி மூலம் இரண்டாம் வகை அலை யெழுச்சி ஏற்படுகிறது. ஒரு பெரிய சுமை (load) திடீரெனத் தவிர்க்கப்பட்டாலும் இத்தகைய அலை யெழுச்சி ஏற்படலாம். மூன்றாம் வகையான நிலையான அலையெழுச்சி, மின் அமைப்பின் இயல்பு அதிர்வெண்ணில் (normal frequency of the electrical system ) நேரிடும். இவை சில மணி நேரங்கள் நீடிக்கவல்லன. (எ - டு) ஒரு மின்தொடரில் தொடர்ச்சியான தரைத்தொடர்பு ஏற்படுமாயின் ஏனைய மின்தொடர்களில் மேற் கூறிய அலையெழுச்சி தோன்றும். தகுந்த மின் காப்பு நுட்பத்தைக் (proper insulation technique) கையாள் வதனால் இவ்வகை அலையெழுச்சிகளால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்கலாம். புற அலையெழுச்சிகள் (external surges). இவை சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் வானிலை மாறுதல் காரணமாகவோ, மின்னல் அல்லது நிலைமின் னேற்றம் காரணமாகவோ தோன்றலாம். இவற்றில் அலைவெண்கள் மின் அமைப்பின் அலைவெண் ணுக்கு முற்றிலும் தொடர்பற்றன. இவை பெரும் பாலும் மின்காப்பைப் பாதிக்குமளவுக்கு உயரலாம். மின்னல் மூலம் ஏற்படும் அலையெழுச்சி மின்னல் தாக்கும் போக்கைப் பொறுத்து ஊறு விளைவிக்கும். நேரிடையாக அல்லது கிளைக் கருவிகளைத் தாக்குவ தால் மின்தொடருக்கு அருகில் தொடாமலே (with- out contact) பாயும் அலையெழுச்சிகள் ஏற்படலாம். இத்தகைய அலையெழுச்சிகளால் மின்சாதனங் களின் மின்காப்பு (insulation) கெடாமலிருக்கச் சுற்றுப்பிரிப்பி (circuit breakers) மின்மாற்றிகள் (transformers), தனிமைப்படுத்திகள் (isolators) ஆகிய சாதனங்களின் மின்அழுத்தத் தாங்கு திறன் (with- stand voltage), அலையெழுச்சி அமிழ்த்தி (surge அலையெழுச்சி அமிழ்த்தி 397 suppressor ) யின் மின் அழுத்தத் தாங்கு திறனைக் காட்டிலும் கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது காப்பிழையின் (fuse) தாங்கு திறனைவிடக் குறைந்த அளவுக்கு அலையெழுச்சியின் உயர் மின்அழுத்தம் உயரும்போதே அலையெழுச்சி அமிழ்த்திகள் இந்த உயர் மின் அழுத்தத்தை நிலத்தினுள் கடத்திவிட வேண்டும். அலையெழுச்சி அமிழ்த்தி (surge suppressor). இத்தகைய அலையெழுச்சிகளால் மின்சாதனங் களுக்கு ஊறு நேராமல் உயர் மின் அழுத்தத்தினை நிலத்தினுள் செலுத்திவிடக்கூடிய பாதுகாப்புக் கருவி (protective apparatus)அலையெழுச்சி அமிழ்த்தி (surge suppressor) ஆகும். இது அலையெழுச்சி வழி மாற்றி (surge diverter) என்றும் வழங்கப்படுகிறது. இதில் இரு முக்கியப் பகுதிகள் உள்ளன. அவை மின் தடைப் பகுதி (resistor part), பொறியிடை வெளிப்பகுதி (spark gap) என்பனவாகும். மின்தொடர் இணைப்பு அலுமினியமூடி கம்பிச்சுருள் விதரைட்டுத் நட்டுகள் பொறியிடை வெளிப்பகுதி நில் லவ- இணைப்புப் பற்றி சிமெண்டுக் அமிழ்த்தியின் அடிப்பகுதி அடிமண படம் 11.5 வோல்ட்டு அலையெழுச்சி அமிழ்த்தி