பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 அலை வடிவம்‌

410 அலை வடிவம் அலை வடிவம் நீரில் அலைகள் ஏற்படுகின்றன. அந்த அலைகளைப் படமாக வரைந்து காட்ட வேண்டுமானால் அவற்றை வளைகோடுகளால் காட்டலாம் (படம் 1).இதே போல் மாறுதிசை மின்அழுத்தத்தை ஒரு வரைபடத் தில் பதிவு செய்யும் போது அது அலை வடிவத்தில் (wave form) அமைந்திருக்கும். அந்த அலைகள் ஒரு குறிப்பிட்ட காலவட்டத்தில் ஒரே அளவுடனும் வடிவத்துடனும் அமைவதைக் காணலாம் (படம் 2). அலை வடிவங்கள் எண்ணிறந்தனவாகும். நடை முறையில் மிகப்பொதுவாகவுள்ள அலை வடிவமே படத்தில் காட்டப்பட்டுள்ளது. இவை காலவட்ட முறை (periodic) மின் அழுத்தத்தைப் பதிவு செய்த வரைபடங்கள் ஆகும். மின்னோட்ட அலை வடிவங் களும் இத்தகையவையே. படம் 1.பொது அலைவடிவம் படத்தில் (படம் 2) ஒரு வளைகோடு புள்ளி 1 இல் தொடங்கி புள்ளி 5இல் முடிவடைகிறது. இதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஆகும். இந்தக் கால அளவு தொடர்ச்சியாக ஒவ்வோர் அலைக்கும் ஒரே அளவாக இருக்கும். புள்ளி 1இலிருந்து புள்ளி 5 வரையுள்ள அலையின் பகுதியை ஓர் அலைவு என்று குறிப்பிடு வர். ஓரலைவிற்கு ஆகும் நேரத்தை அலைநேரம் (period) என்பர். டால் குறிக்க முடியும். ஒரு நிலையான அலைவு நேரத்துடனுள்ள ஒரு தொடர்ச்சியான அலையினை இம்முறையில் உருவாக்க முடியும். 'சைன்', 'கொசைன்' என்ற சொற்களால் குறிப்பிடப்பெறும் 'ஃபூரியர்' வரிசையில் கொடுக்கப்பட்டுள்ள அலைவடிவங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இவை நேரத்தைப் பொறுத்து மாறுபவை. மேற்குறித்த அலைவுகள், அடிப்படையான அலைவுகளைப் போல பன்மடங்கு அலைவெண் உடையவை. சுவர்க் கடிகாரத்தில் இருக்கும் 'தனி ஊசல்' ஒரு குறித்த நேரத்தில், ஒரே சீரான இடைவெளியில் முன்னும் பின்னும் ஆடுகிறது. இதனை அலைவு என்று குறிப்பிடுவார்கள். இம்மாதிரி முன்பின்னாக ஆடும் சீரான அலைவுகளைப் பதிவு செய்யும் கருவி தனி ஊசல் எனப்படும். 'சைன்' அலைகளைக் கீழ்க்காணும் கருலிகள் மூலம் உருவாக்க முடியும். அவையாவன, 'சைன்' அவை இயற்றி (sine wave generator),அலைவு இயற்றி (oscillator) என்பனவாகும். பன்மை அதிர்விகள் (multivibrators), தறிப்பிகள் (choppers) போன்ற சதுர அவை இயற்றிகள் மூலம் சதுர அலைகளைப் பெறலாம். வளிமக் குழாயில் அமைந்துள்ள ஓய்பாட்டு அலை வியற்றிகள் (relaxation oscillator), 'தைரட்ரான்' (thyratron), திரிதடையம் (transistor), வெற்றிடக் குழல் (vacuum tube) ஆகியவற்றாலான சரிவுவீச்சு சுற்றுவழி (sweep circuit) ஆகியவற்றின் மூலம் வாள் பற்கள் போன்ற அலைவடிவத்தைப் பெறலாம். VM A T/2 Vm படம் 2. காலவட்டமுறை அலை ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளுடன் கூடிய அலை வடிவங்களைக் கணிதவியலாகக் குறியீட் T/2 படம் 3. திருத்திய அரைஅலைவடிவமும் முழுஅவை வடிவமும்