414 அலை வழிப்படுத்திகள்
414 அலை வழிப்படுத்திகள் a படம் 1. வகையான அலைமுறைகளைக் குறிப்பிடுவதற்கு இரண்டு கீழ்ப் பின்னடைகளைக் (subscripts) பயன் படுத்துகிறார்கள். கீழ்ப்பின்னடையில் உள்ள முதல் எண் பகுதி(இரு வகையிலும்) அலை வழிப்படுத்தியின் அகலத்தில் உள்ள மின்புல அலைகளின் அரை அலை மாறுபாடுகளின் எண்ணிக்கையைக்குறிப்பிடுகின்றது. இரண்டாவது எண்பகுதி, தடிப்பில் உள்ள மின்புல அலைகளின் அறைஅலை மாறுபாடுகளின் எண்ணிக் கையைக் குறிப்பிடுகின்றது. TE, TEg, TM, TEg என்பன அலை வழிப்படுத்தியில் உள்ள புலத்தின் ஒரு குறிப்பிட்ட பங்கீட்டு இயல்பின் அமைப்புகளைக்குறிப் பிடுகின்றன. எடுத்துக் காட்டாக TEgs அலைமுறை என்றால், அதில் மின்புலம் அரை வழிப்படுத்தியின் அச்சுக்கு எப்பொழுதும் செங்குத்தாக இருப்பதோடு, அகலத்திற்குக் குறுக்காக ஈரலை மாறுபாடுகளும், தடிப்புக்குக் குறுக்காக ஓர் அரைஅலை மாறுபாடும் இருக்கும். ஓர் அலை வழிப்படுத்தி, ஒரு மின்செலுத்தத் தொடரைப்போலச் செயல்பட்டாலும், அவற்றிற் கிடையே ஒரு முக்கியமான வேறுபாடு காணப்படு கின்றது. ஓர் அலை வழிப்படுத்தி குறைந்த அளவு மட்டுப்பாட்டு மாறிலியுடன் (attenuation constant ) அலைகளை உட்புகுந்து செல்ல அனுமதிக்க வேண்டு மானால், அந்த அலைகளின் அலைநீளம், ஒரு குறிப் பிட்ட அலை நீளத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும். இந்தக் குறிப்பிட்ட அலை நீளத்தின் மதிப்பு, எடுத்துக் கொண்ட அலை வழிப்படுத்தியின் அளவுகளைப் பொறுத்தது. இக்குறிப்பிட்ட அலை நீளத்தை வெட்டு அலை நீளம் (cut off length) என்று சொல்கின்றார்கள். எனவே அலை வழிப் படுத்தியின் வழியே செல்லும் அலையின் அலைநீளம், வெட்டு அலை நீளத்திற்குத் தாழ்வாக இருந்தால் எளிதாகக் கடத்தப்படுகின்றது; வெட்டு அலை நீளத் திற்கும் அதிகமாக இருந்தால், விரைந்து மெலிவுற்று அழிந்துபோய் விடுகின்றது. வெவ்வேறு அலை முறைகள், வெவ்வேறு வெட்டு அலை நீளங்களைப் பெற்றுள்ளன. ஓர் அலை வழிப்படுத்தியைப் பயன் படுத்த இயலக்கூடிய பல்வேறு அலைமுறைகளில் எதற்கு அதிகமான வெட்டு அலைநீளம் இருக் கின்றதோ அது விஞ்சிய அலைமுறை (dominant mode) எனப்படும். வெட்டு நிலையை அலை வெண்ணிலும் குறிப்பிடலாம். எந்த ஒரு குறிப்பிட்ட அலைவெண்ணுக்குக் கீழே அலை வழிப்படுத்தி உயரளவு மட்டுப்பாட்டு மாறிலியைக் கொடுத்து அலை ஆற்றல் கடத்தும் செயலுக்குப் பயன்படாது போகின்றதோ, அவ்வதிர்வெண், வெட்டு அலை வெண் (cut off frequency) எனப்படும். இதை f என்று குறிப்பிடுவார்கள். அதிர்வெண்ணுக்கு ஏற்ப மாறுபடும் மட்டுப்பாட்டு மாறிலியைப் படம். 2. காட்டுகிறது. அலை வழிப்படுத்தியின் மூலம் செல்லும் ஓர் அலையின் ஆற்றல் மட்டுப்பாடு, அவ்வலை வழிப் படுத்தி எப்பொருளால் ஆக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பொறுத்து அமைந்திருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட பொருளைப் பயன்படுத்தி ஓர் அலை வழிப்படுத்தியை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில், அதே அளவுகளுடைய மின்தடத்தை விடக் குறைந்த அளவு ஆற்றல் மட்டுப்பாட்டைப் பெற்றிருக்குமாறு