அலை வழிப்படுத்திகள் 415
மட்டுப்பாட்டு மாறிலி அலை வெண் படம் 2. செய்து கொள்ளலாம். அலைவழிப்படுத்தியினுள் ஆற்றல் இழப்பிற்குக் காரணமான சில காரணி களைத் தக்கவாறு மாற்றி அமைத்துக் கொள்ளு வதனால், ஆற்றல் மட்டுப்பாட்டைக் குறைவாக வைத்துக் கொள்ள முடியும். ஓர் அலை வழிப்படுத்தி யினுள் ஏற்படும் ஆற்றல் இழப்பு, ஜூல் விளைவு, current) போன்ற சுழிப்பு மின்னோட்டம் (eddy விளைவுகளினால் ஏற்படும் செம்பு இழப்பு (copper losses) களினால் உண்டாகின்றது. இதனால் அலை வழிப்படுத்தியின் உட்சுவரை மிகவும் உயர்ந்த அளவு மின்கடத்தும் திறன் கொண்ட பொருள்களால் அமைக்க வேண்டியது தேவையாகிறது. பொதுவாக உயர் அதிர்வெண்ணில் மாறுதிசை மின்னோட்டம், கடத்தியின் மேற்புரை வழியாகவே செல்கின்றது என்பதை நாம் அறிவோம். மேற் புரை யிலிருந்து ஒரு குறுகிய தடிப்பில் மட்டும் ஏற்படும் இந்த மாறுதிசைமின்னோட்டத்தினைபுறணிவிளைவு (skin effect) என்று கூறுகின்றார்கள். மின்னோட்டம் நிகழும் மேற்புரைப் பகுதியின் தடிப்பைப் புறணி ஆழம் (skin depth) என்பார்கள். இந்த ஆழம் அலை வெண்ணின் வர்க்க மூலத்திற்கு எதிர்விகிதத்தில் இருக்கின்றது. இதனால் நுண்ணலைகளுக்குப் புறணி விளைவின் ஆழம் மிகக்குறைவு என்பது தெளிவு. இது காரணமாக மெல்லிய உலோகச் சுவர்களே நுண் ணலை ஆற்றலைப் புற வெளியிலிருந்து காப்பீடு செய்யக்கூடியனவாக இருக்கின்றன. நுண்ணலைப் பகுதி அலைவெண் நெடுக்கத்தில் புறணி விளைவின் ஆழம் ஒரு சென்ட்டிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கை அலை வழிப்படுத்திகள் 415 யும் விடக் குறைவாக இருக்கின்றது. இதனால் அலை வழிப்படுத்தியை, விலை அதிசுமில்லாத, பித்தளை அல்லது அலுமினியம் போன்ற சாதாரண உலோகப் பொருள்களில் வடித்துப் பின் அதன் மேல் ஒரு மெல்லிய படலமாகத் தங்கம், வெள்ளி அல்லது செம்பைக் கடத்தும் திறனை அதிகரிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். துருவேறிக் கெட்டுப் போய் விடாமல் இருப்பதற்கு ரோடியம் (rhodium) என்ற உலோகத்தின் ஒரு மெல்லிய பூச்சொன்றைப் பூசுகின் றார்கள். எனினும் ரோடியத்தின் மின்தடை வெள்ளியைவிட அதிகம் என்பதால், இப்பூச்சின் தடிப்பு, புறணி மின்விளைவு ஏற்படும் ஆழத்தை விடக் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவது மிகவும் அவசியமாகும். அப்போது மின்னோட்டம் சார்ந்த இயக்கங்கள் மேற்பூச்சை அடுத்துள்ள வெள்ளிப் படலத்தில் ஏற்படும். பொதுவாக அலை வழிப்படுத்திகளைச் செய் வதற்குப் பித்தளையைப் பெரிதும் பயன்படுத்துகின் றார்கள். ஏனெனில் பித்தளையை எந்திர வினை களுக்கு மிக எளிதாக உட்படுத்த முடிகின்றது. மேலும் மிக எளிதாகப் பற்றுவைத்து இணைத்துக் கொள்ள முடிகின்றது. வளி மண்டலம், விண் வெளி ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் சென்று பெறப்படும் பயன்களுக்கு, தாழ்ந்த எடையுள்ள அலுமினியம் அல்லது மக்னீசியம் (magnesium) போன்ற உலோகங் களினால் ஆன அலை வழிப்படுத்திகளே பெரிதும் பயன்படுன்றன. எளிய கட்டமைப்பு, குறைந்த ஆற்றல் இழப்பு போன்றவை நீங்கலாக, அலை வழிப்படுத்திகள் மின் வடத்தைவிடக் கூடுதலான திறன் செலுத்தும் தன்மையைப் (power transmission capacity) பெற்றி அலைவழிப்படுத்திகள் ருக்கின்றன. முற்றிலும் காப்பீடு செய்யப்பட்ட திறன் செலுத்தத்தொடர் போன்ற அமைப்பாகும். ஆற்றல் இழப்பு ஏதும் இல்லாத வகையில் அவை வழிப்படுத்திகளைத் தக்க வாறு வளைத்துக் கொள்ளலாம் அல்லது முறுக்கிக் கொள்ளலாம். எனினும் ஓர் அலை வழிப்படுத்தியை இப்படி வளைத்து அதன் வழிச்செல்லும் அலையின் திசையை மாற்றும்போது அலைகள் வளைவுகளில் பட்டு எதிர்பலிக்கப்பட்டுவிடாமல் குறுக்குவெட்டு சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அலை வழிப்படுத்திகளில் உள்ள எல்லா வகை யான இடையீடுகளும் (discontinuities)திரள் சுற்று வழி உறுப்புக்களுக்குச் (lumped circuit constants ) சமம் எனக் கருதலாம். அலை வழிப்படுத்தியின் அகலச் சுவரில் பொருத்தப்பட்டுள்ள சிறியகூர்முனை அல்லது திருகு ஓர் இணை நிலை கொண்மி போலச் (shunt capacitor) செயல்படுகின்றது; அலை வழிப் படுத்திக்கு குறுக்கே அமையும் சிறிய குத்துக்கம்பி ஓர் இணைநிலைத் தூண்டம் (shunt inductance