பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவிலகல்‌ 419

இன்றைக்குக் கண்டுபிடித்துப் தொடங்கியிருக்கின்றார்கள். பயன்படுத்தத் பிற வகையான அலை வழிப்படுத்திகள். அலை வழிப்படுத்திகள் பல்லுறுப்பு எத்திலீன் (poly ethylene ) போன்ற திண்ம மின்காப்புப் பொருள்களினாலும் செய்யப்பட்டிருக்கும். மின்காப்புப் பொருள்களால் ஆன அலைவழிப்படுத்திகள் கட்புலனுக்கு உள்ளாகும் அலைகளுக்குப் பயன்படுகின்றன. மின்காப்புப் பொருள்களால் ஆன குழாயினுள், மின் காப்புப் பொருள் தன்மையின் காரணமாக, மின் ஆற்றல் ஒரு வரையறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. பார்க்க, நுண்ணலைகள்; நுண்ணலை இயற்றிகள்; நுண்ணலை அலைமாலையியல். நூலோதி - மெ.மெ. McGraw-Hill Encyclopaedia of Science & Technology. Vol. 14, 4th Edition, McGraw-Hill Book Company, New York, 1977. அலைவிலகல் . இயற்கையின் ஆற்றல்களில் ஒன்று ஒளியாகும். ஞாயிறும் வின்மீண்களும் ஒளியின் பிறப்பிடங்களாய் விளங்குகின்றன. பழங்கால மக்களால் நிலை நிறுத்த முடிந்த உண்மைகளாவன, ஒளி நேர்பாதையில் செல் லும் தன்மையுடையது. ஓர் ஆடியில் ஒளி எக்கோணத் தில் விழுகின்றதோ, அதேகோணத்தில் பிரதிபலிக் கும் தன்மையுடையது; ஒளிக்கற்றையானது காற்றி லிருந்து கண்ணாடி, நீர் போன்ற ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய. (transprent) பொருளின் வழியே செல்லும் போது அதனுடைய திசை மாறுகின்றது என்பனவாகும். 1678 இல் டச்சு இயற்பியல் நிபுணரான கிறிஸ்டி யன் ஹைகன்ஸ் (Christian Hygens) ஒரு நுட்பமான கருத்தை அளித்தார். அதாவது ஒளி அலைகளாகப் பரவுகின்றது என்றார். ஒளி அலைகளாகப் பரவி னால் பலவகை ஒளிக்கதிர்கள், ஓர் ஊடகத்தின் வழியே செல்லும்போது, வெவ்வேறு அளவில் விலகிச் செல்லும் (diffraction) தன்மையை விளக்குவதில் யாதொரு வகையான சிக்கலும் இராது ஆனால், ஒளி, திசைமாறச் செய்யும் ஊடகத்தின் வழியே செல்லும்போது காற்றினூடே செல்வதைவிடக் குறைந்த வேகத்தில் செல்வதாக இருக்கவேண்டும். ஒளி விலகிச் செல்லும் அளவு அலைகளின் நீளத்திற் அலைவிலகல் 419 கேற்ப மாறுபடும். குறைந்த அலை நீளமாக (wave 1ength) இருந்தால் அதிகமாக விலகிச் செல்லும். எடுத்துக்காட்டாக, ஊதா ஒளி நீல ஒளியைவிடக் குறைந்த அலை நீளத்தைக் கொண்டிருக்கும். அலை நீளத்தில் உள்ள இந்த மாறுபாடுதான் கண்ணுக்கு நிறங்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. உண்மை யிலேயே ஒளி, அலைகளைக் கொண்டுள்ள தாக இருந்தால் இரண்டு கற்றைகளும் எவ்வித இடையூறு மின்றி ஒன்றையொன்று கடந்து செல்லமுடியும். அலை நீளங்களின் குறுகிய அளவு மிகவும் முதன்மை வாய்ந்தது. ஒளி அலைகள் நேர்பாதையில் சென்று கூர்மையான நிழல்களைக் கொடுப்பதற்குக் காரணம், அவை வழக்கமான பொருள்களைவிட ஒப்பிடமுடியாத அளவுக்குச் சிறியனவாக இருப்பதே யாகும். தடை செய்யும் பொருள் ஒளியின் அலை நீளத்தைவிட மிகவும் பெரியதாக இல்லாது இருந்தால் மட்டும் அலைகள் அப்பொருளைச் சுற்றி வளைந்து செல்ல முடியும். எடுத்துக்காட்டாக, நோய்க்கிருமிகள் (bacteria) கூட அலை நீளத்தைவிட அதிக அகலமாக இருக்கின்றன. ஆகையினால்தான், நுண்நோக்கி (microscope) யின் அடியில் இருக்கும் நுண்ணுயிர் களை ஒளியால் வரையறுத்துத் தெளிவாகக் காட்ட முடிகின்றது. ஒளியின் அலை நீளத்திற்குக் கிட்டத் தட்டச் சமமாக உள்ள பொருள்களாக இருந்தால் மட்டும் ஒளி அலைகளால் அவற்றைச் சுற்றிச் செல்ல முடியும். எதிரொளிர்வு, ஒளிவிலகல், குறுக்கீட்டு விளைவு போன்ற இயற்பியல் உண்மைகளை அலையியக்கக் கொள்கை தெளிவான முறையில் விளக்குகின்றது. ஒரு தொட்டியிலுள்ள நீர்ப்பரப்பில் ஏற்பட்டுப் பரவும் சிற்றலையின் வழியில் ஒரு தக்கையை மிதக்க விட்டிருந்தால் சிற்றலைகள் அந்தத் தக்கையிலிருந்து விலகி வளைந்து பரவுவதைக் காணலாம். ஒளி அலையியக்கத்தின் மூலம் பரவுவதாகக் கொண்டால் அதன் வழியில் ஏற்படும் தடைகளை வளைந்து கடந்து சென்று பரவவேண்டும். ஆனால் ஒளிநேர் கோட்டு வழி செல்வதையும், தடை ஏற்படுகின்ற இடத்து அது வளைந்து சென்று பரவாததையும், தடையினால் ஏற்படுகின்ற நிழல் நமக்குக் காட்டு கின்றது. தடை செய்யும் பொருள் போதுமான அளவு சிறிய தாக இருந்தால்,ஒளி அலைதிட்டமாக அதனைச்சுற்றிச் செல்லும் என்று நிறுவினார் பிரெஞ்சு இயற்பியல் மேதை அகஸ்டின்ஜீன் ஃபிரெனல் (Augastin Jean Fres nel) . இந்நிகழ்ச்சி"விளிம்பு விலகல்" என்று (diffraction) சொல்லப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு கண்ணாடித் துண்டில் ஏராளமான மென்மையான இணைகோடு களினால் கீறல்களை உண்டுபண்ணினால் ஒவ்வொரு கோடும் அதன்மேல் ஒளிவிழும்பொழுது திசை மாறு