பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவீச்சு 421

ஆகையால், அது நேர்குத்துத் திசையை நோக்கி விலகலடைந்து, வளைந்து வளைந்து மேலே சென்று விடுகிறது. ஆகவே, அருகில் உள்ளவர்களுக்கும் ஒலி கேட்பதில்லை. இக்காரணத்தினால் தான் பகலை விட இரவுநேரத்தில் ஒலி நெடுத்தொலைவு கேட்கிறது இரவில் அமைதி நிலவுவதோடு கூட, மேல் மண்டலங் களில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் ஒலிக் கதிர்கள் வளைந்து வந்து மிகத் தொலைவுவரை கேட்கின்றன. பூமியும் அதைச் சார்ந்த இடங்களும் விரைவில் வெப்பமடைந்து விடுகின்றன. காற்றடுக் குகள் அப்படி வெப்பம் அடைவதில்லை. ஒலி வேகம் மேலே மட்டத்தில் அதிக வேகமாகவும், தரை போகப் போகக் குறைவாகவும் இருக்கிறது. எனவே ஒலி விலகவால் அது மேலே சென்றுவிடுகிறது. பகல் வேளையில் இரைச்சலும் அதிகமாகவுள்ளது. அண் மையிலுள்ளவர்கள் கூடக் கேட்பது எளிதன்று. ஆனால், இரவு வேளைகளில் விரைவில் குளிர்ந்து விடுகிறது. ஒலி மேலே செல்லச் செல்ல அடர்த்தி குறைவான மண்டலங்களில் வில் நுழைவதால் கலடைந்து வளைந்து மிகத்தொலைவு சென்று பூமியை அடைகிறது. தரையில் உருண்டு, உராய்தலில் செறிவு குறைந்து, வலிவில்லாவிடினும் நெடுந்தொலைவிற் கப்பால் கேட்கிறது. . ஒலி அலைகளின் பாதையிலுள்ள தடைகளின் அளவு ஒலி அலை நீளத்தைவிடச் சிறியதாக இருந் தால், அவை தடையின் விளிம்புகளிலே வளைந்து விலகி, தடைக்குப் பின்னால் ஒன்றுகூடி வழியில் தடையே இல்லாதது போல் மேல் செல்கின்றன. இருந்த போதிலும், கணக்கிட்டுப் பார்த்தால் ஒலி யின் ஆற்றலில் ஒருபகுதி திசைமாறிச் சென்று விடு வது விளங்கும். தடையிலிருந்து எல்லாத் திசைகளி லும் ஆற்றல் பரவுகின்றது. பல திசைகளிலும் திகழும் இவ்வாற்றல் பரவுதலுக்கு ஒவிச் சிதறல் (scattering of sound) என்று பெயர். தடையின் அளவு பெரிதாக இருந்தால் ஆற்றலில் பெரும்பகுதி சிதறிவிடுகிறது. சிதறிய ஆற்றல் 'எந்தத் திசையில் செல்கின்றதென்பது தடையின் உருவத்தைப் பொறுத்திருக்கும். ஓர் அறையில் எழுப்பப்படும் ஒலி நெடுநேரம் நிலைப்பதில்லை. சுவர், கூரை, தரை எல்லாமே ஒலியைத் தொடர்ந்து எதிரொலிக்கின்றன. இருந்தும் ஒலி சீக்கிரம் அழிந்து விடுகிறது. இதற்கு அடிப் படைக் காரணம் ஒலி உட்கவரப் படுவதுதான். ஊடகங்களில் தேங்கி நிற்கக்கூடிய தூசி முதலிய பொருள்களும் ஒலியை உட்கவருகின்றனவாவென்று இன்னும் தெளிவாக விளங்கவில்லை. இருந்தபோதி லும், இத்தகைய மாற்றம் பொருள்களின் நிலைமம் inertia) போதிய அளவு இருந்தால், அவை காற்றுத் துகள்களுடன் துடிக்காமல் பெருமளவில் இழுவை யேற்படுத்தி, அவையே ஒலியை உட்கவராவிடினும் உட்கவருதலுக்குப் பெரிதும் உதவி புரிகின்றன. ஒலி அலைவீச்சு 421 அலைகளின் நீளம் சாதாரணமாக இருந்தால் இவ் யுதவி அதிகம் தெரிவதில்லை. தூசி,பனி முதலிய துகள்கள் இடை நிலைப் பொருளுடன் கலந்திருந் தால், ஒலியின் உரப்பு குறைவதில்லையென்றும், அதிகதூரம் ஒலி கேட்கிறதென்றும், ட்டிண்டால் (Tyndall) காண்பித்துள்ளார். உட்கவர்தல் இல்லா மலிருப்பதற்குக் காரணம், இந்நிலையில் இடை நிலைப் பொருளின் வெப்பநிலை சீராக இருப்பது தான் என்றும் விளக்கியுள்ளார். ஆனால், ஒலியின் அலைநீளம் மிகச் சிறியதாக இருக்குமானால் தூசி பனி போன்ற துகள்கள் அதிக உட்கவருதலை உண் டாக்குகின்றன. நூலோதி எஸ்.௩. 1. சண்முகசுந்தரம், வி. சபேசன், ஆர். ஒளியியல். தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை. 2. முருகையன், டி.ஒலி நூல், கல்லூரி நூல் வெளி யீட்டு இயக்குநரகம், சென்னை. . Book 3. Noakes, G. R., A Text of Light, Macmillan & Company Ltd., London, 1982. 4. Harnam Singh, Principles of Light, S. Chand & Co. Delhi-6, 1985. 3. Sharma, L. P., Saxena, H. P., A Text book of Sound, S. Chand & Co. Delhi-6, 1984, அலைவீச்சு அலை இயக்கம் (wave motion) என்பது இயற்கையில் நிகழும் மிக அடிப்படையான நிகழ்ச்சிகளில் ஒன்றா கும். எடுத்துக்காட்டாக, கல் எறிவதால் குளத்தின் நீர்ப் பரப்பில் வட்டமான நீர் அலைகள் உண்டா கின்றன; வீணை அல்லது வயலின் இசைக்கப்படும் பொழுது கம்பிகள் அதிர்ந்து இனிய ஓசைபரவுகிறது; வானொலி நிலையத்திலிருந்து செய்திகள் ஒலி பரப்பப் படும்போது அவை மின் அலைகளாக வெளியில் பரவுகின்றன. அலை ஓட்டம் நிகழ்வதை இவை தெளி வாக விளக்குகின்றன. படம் 1.