430 அலைவு இயற்றிகள்
430 அலைவு இயற்றிகள் தாக ஆக்குவது, குறைந்த அலைவெண்களில் செயல் படும்போது சொல்லத்தக்க அளவு தறுவாய்ப் பெயர்ச்சி எதையும் உருவாக்கிவிடாமல் பார்த்துக் கொள்ள மிகப்பெரிய அளவிலான ஈரிணைப்புக் கொண்மிகள் பொருத்தப்பட்டுள்ளன. Rg என்ற தடை, சமனிக்கு ஓர் உறுப்பாகவும் வலைத்தடை யாகவும் இரட்டைச் செயல்புரிகிறது. w w எதிர்முனை பின்பற்றி வெளியீட்டுக்கு HID படம் 9. 'வீயென்' மின்சமனி அலைவு இயற்றி இரண்டு கொண்மிகளையும் (தொகுக்கப்பட்ட மாறும் கொண்மிகள்) ஒரே சமயத்தில் இயக்குவதன் மூலம் தொடர்ந்த அலைவெண் மாறுதல்கள் ஏற் படுத்தப்படுகின்றன. R என்ற இரண்டு ஒத்த தடைக ளும் வேறு அளவுகளுடன் ஒரே நேரத்தில் மாற்றப் பட்டு அலைவெண் வரிசைகளில் மாற்றம் ஏற்படுத்தப் படுகிறது. சுற்றிலுள்ள உறுப்புகளைப் பொறுத்துச் செய் லாக்க அலைவெண்களின் எல்லைகள் அமைகின்றன. மாறும் காற்றுக் கொண்மித் தொகுப்பு செயலாற்றும் அளவுக்கு மாறும் தடைத்தொகுப்புகள் கிடைப்ப தில்லை. மாறுகொண்மிகள் பயன்படுத்தப்பட்டால் அவை குறைந்த கொள்திறனையே கொண்டிருக்க வேண்டும். எனவே குறைந்த அலைவெண்களைப் பெறுவதற்கு உயர் அளவு தடை Rஐப் பயன்படுத்த வேண்டும். R வலைஒழுக்குத் தடையாகவும் செயல் புரிவதால் உயர் அளவு தடையுடைய R சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. வெற்றிடக்குழலில் தடுப்பு ஏற்படுத் துவதும், வலைக்கும் தரைக்கும் இடையிலுள்ள அதிக மறிப்பு இருப்பதனால், ஊட்ட மின்சாரத்திலிருந்து சிதறிய 50/60Hz. மின்னழுத்த அலைகளைக் கவச மிடுவதில் உள்ள சிரமமும் இச்சிக்கல்களுக்குக் காரணம். 10 மெகாஓம் தடையுடைய R -ஐப் பயன் படுத்தி 2Hz. வரையிலான அலைவெண்களைப் பெறலாம். மேலும் குறைந்த அலைவெண்களில் தகுந்த அளவு பெரிய இணைப்புக் கொண்மிகளைத் தேர்ந்தெடுப்பதும் மிகக் கடினமாகிறது. உயர்ந்த அலைவெண்களுக்குச் சிறிய மதிப்புடைய தடைகள் பயன்படுத்தப்படுகின்றன. வீயென் சமனியுடைய உள்ளீட்டு முனைகளின் மறிப்பு அளவை இவை குறைப்பதால் மிகைப்பியின் சுமை அதிகமாகிறது. அலைவு இயற்றலினை நிறுத்துமளவுக்குச் அதிகமாக இல்லாவிட்டாலும் அலைவெண் வரிசை யில் ஏற்படும் மாற்றம் அலைவீச்சின் நிலைத் தன்மையை மிகவும் பாதிக்கிறது. சுமை படம் 9 இல் உள்ள R, தடைக்குப் பதிலாக டங்ஸ்டன் இழைக்குழல் பயன்படுத்தப்பட்டு அலை வீச்சு நிலைப்படுத்தப்படலாம். அலைவெண் வரிசை மாற்றப்படும்போதும் சுற்றிலுள்ள குழல், மற்ற உறுப்புகள் பழமையடைவதாலும் ஏற்படும் வேறு பாடுகள் இங்ஙனம் தவிர்க்கப்படுகின்றன. A மாற்ற மடைந்தாலும் டங்ஸ்டன் இழைக்குமிழிலுள்ள ஒரு சீரான இயக்கம் BA - ஐ நிலைத்த எண்ணாக இருக் கும்படி நீ -வின் மதிப்பை மாற்றி அமைக்கிறது. வெப்பநிலை அதிகமாகும்போது இழையின் தடை யும் அதிகமாகிறது. அந்த வெப்ப நிலையை அறுதியிடு வதற்கும் இழையின் வழியே செல்லும் மின்னோட் டத்தின் சராசரி வர்க்கமூல (r.m.s.) மதிப்பே உதவு கிறது. இரட்டை T, சமனி T போன்ற பிறவகைச் சமனிச்சுற்றுகளும் அலைவு இயற்றிகளின் பின்னூட்டி களாகப் பயன்படுகின்றன. இவற்றுக்கும் மேற்கூறிய பொது அடிப்படைகள் பொ பாருந்துவனவாகும். ஆனால் செயல்படுத்துவதில் ஒரு சில மாற்றங்கள் தேவைப்படலாம். படி க அலைவியற்றிகள் (Crystal oscillators). அழுத்த மின்படிகத்தின் (piezo electric crystal) குறிப் பாக குவார்ட்சு (quarts) படிகத்தின் எதிர்எதிர் முகங்களில் முலாம் பூசி மின்முனைகள் உருவாக்கப் பட்டு, அவ்விரண்டு முனைகளிலும் மின்னழுத்தம் கொடுக்கப்படுவதால், படிகத்தின் உள்ளே அடங்கிய மின்னேற்றத்தில் விசைகள் ஏற்படுகின்றன. படிகம் ஏற்புடைய வகையில் பொருத்தப்பட்டால் படிகத்தி னுள்ளே வடிவமாற்றங்கள் ஏற்பட்டு மின்னியக்க அமைப்பு (electro mechanical system) உருவாகும். முறையாகத் தூண்டப்படும்போது அது அதிர்வடை கிறது. படிகத்தின் அளவு, அச்சுக்களைச் சார்ந்த புறப்பரப்பு அமைவு, பொருத்தப்பட்ட நிலை