436 அலைவெண்
436 அலைவெண் ஒருவர் பெறமுடிகிறது. இவை அனைத்துக்கும் இக் கருவி உதவுகிறது. இக்கருவியைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இன்னமும் முழுமையாக முழுமையாக நிறைவெய்தி விட்டதாகக் கூறமுடியாது. எதிர்காலத்தில் இதன் பயன் வளர்ந்து விரிந்து கொண்டே செல்லும். நூலோதி ரா= Vasudavan, D. N., Fundamentals of Magnetism and Electricity, S. Chand and Company & Ltd. Ramnagar, New Delhi, 1951. அலைவெண் ஒரு நொடி நேரத்தில் முழு சுழற்சியுடைய அலை யைப் போலத் தமது சமநிலை இருப்பிலிருந்து ஒலி, அழுத்தம், மின் செறிவு போன்ற புறநிலை அளவுகள் (physical quantities) எத்தனை தடவை மாறு கின்றனவோ அந்த எண்ணிக்கை அலைவெண் (frequency ) என வழங்கப்படுகிறது. வழக்கிலுள்ள அலைவெண்ணின் அலகு எர்ட்சு Hz. ஒரு Hzஎன்பது ஒரு நொடியில் ஒரு சுழற்சி ஏற்படுவதற்குச் சம மாகும். ஒரு சுழற்சியில் ஒரு நேர் மதிப்பு மாற்றமும் பிறகு ஒரு சமநிலை இருப்பும் பிறகு ஓர் எதிர் மதிப்பு மாற்றமும் பின் மற்றொரு சமநிலை இருப்பும் அமையும். இது பெரும்பாலும் சைன் வடிவ அலை யால் விளக்கப்படும். சண்க, சைன் வடிவ அலை. அலையியக்கத்தில் அலையை அலைவெண்ணால் குறிப்பிடுவது ஓர் ஏற்ற முறையாகும். எடுத்துக்காட் டாக கேளலையின் அலைவெண் 20Hz முதல் 20,000 Hz அலைவெண் இடைவெளியில் அடங்கும். அகஒலி அலைகள் 20Hz க்குக்கும் குறைந்தவை. கேளலைக்கு அப்பாற்பட்ட மேற்புற ஒலியலை, புறஒலியவை ultrasound) அல்லது கேளா அலை எனப்படுகின்றது. மின்காந்த அலைவெண்கள் 1Hz முதல் 10 Hz வரை அமைகின்றன. காட்சியலை 4x10*Hz முதல் 7.5x1014Hz வரை அமையும். அலைவீச்சுக் குறிப் பேற்ற வானொலி KHz இலும் அலைவெண் குறிப் பேற்ற வானொலி MHz இலும் இயங்குகின்றன. காண்க, கோண அலைவெண்; அலையியக்கம். அலைவெண் எண்ணி . ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு குறிப் பலையிலுள்ள சுழற்சிகளின் எண்ணிக்கையை அதா வது, அதன் அலைவெண்ணை எண்ணும் அமைப்பே இது. துல்லியமான நேர அடிப்படை (time base) இருந்தால் தற்கால மின்துகளியல் அலைவெண் எண்ணி (electronic frequency counter) அலை வெண்ணை அளப்பதில் மிகவும் பயன்மிக்க கருவியா கும். இது இலக்க முறையில் எண்ணும் அல்லது இதில் கொடுக்கப்பட்ட கால இடைவெளியில் நிகழும் நிகழ்ச்சிகளின் மொத்த எண்ணிக்கையைப் பதிவு செய்யும் அளவீட்டு அமைப்பு (scaling device) இருக்கும். இத்தகைய மின்துகளியல் முறையில் எண்ணும் சுற்றுவழிகள் (counting circuits) பல வணிகப் பயன் பாடுகளில் நொடிக்கு 107 எண்ணிக்கை வீதத்தில் எண்ணுகின்றன. ஒரு நொடிக்கு 5x10 எண்ணிக்கை அளவுக்கு வேகமாக எண்ணும் கருவிகளும் நடை முறையிலுள்ளன. இலக்கச் சுற்றுவழிகளின் எல்லையி லுள்ள ஓர் அலைவெண்ணை அளக்க, செந்தர அலைவெண் இயற்றியை (standard frequency generator) நேர அடிப்படைக் கட்டுப்பாடாகப் பயன் படுத்தி நேரடியாக இவ்வகை எண்ணியைப் (counter) பயன்படுத்தலாம். 12 மின் துகளியல் அலைவெண் காட்டி மாற்றி 0000000 பகுப்பி (நேர அடிப்படை) எண்ணும்நேர இடைவெளி விகிதம் மின்துகளியல் இலக்க அவாயில் எண்ணி படம் 1. மின்துகளியல் இலக்க எண்ணி படம் 1 ஒரு மின்துகளியல் இலக்க எண்ணியைக் (electronic digital counter) காட்டுகிறது. fI என்பது செந்தர அலைவெண். I/R என்பது செந்தர நேர