பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 அலைவெண்‌ குறிப்பேற்ற முறை ஒற்றிகள்‌

440 அலைவெண் குறிப்பேற்ற முறை ஒற்றிகள் பட்டையின் அளவு அதிகமாகின்றது.உருமாற்றம் மேல் பக்க அலைவெண்ணிலும் கீழ்ப்பக்க அலைவெண்ணி லும் ஏற்படுகின்றது. பக்கப் பட்டைகளின் அலைவு களின் எண்ணிக்கையும், ஆற்றலும் குறிப்பேற்ற எண்ணை வைத்தே அமைகின்றன. ஆகவே அவை வெண் குறிப்பேற்ற அமைப்பில் செய்தியை அனுப் பும் போது மொத்தமான அலைவெண் மாற்றத்தின் அல்லது விவகலின் அளவும் இரண்டு மடங்கு குறிப்பு அலைவெண்ணும் சேர்ந்த அளவிற்கு அலைவெண் அகல்பட்டை அமையவேண்டும். பக்கப்பட்டைகளில் உள்ள மின்குறியின் வீச்சைக் கணக்கிடலாம். அதன் அலைவெண்ணிற்கும் வீச்சுக்கும் வரையப்படும் படம் அலைவெண் அலைமாலை (frequency spectrum) என்று கூறப்படும். குறிப்பேற்ற எண் மாறும்போது அலைமாலை எவ்வாறு உள்ளது என்பதைப் படம் 2 காட்டுகிறது. יו لاس அலைவெண் படம் 2. அலைமாலை (spectrum செய்திகளை அனுப்பப் பலமுறைகளிலிருந்தாலும் அலைவெண் குறிப்பேற்ற முறை அமைப்பில் நாம் கேட்கும் ஒலியில் இனிமையும் தெளிவும் இருக்கும். பட ஒளி பரப்பிற்கும், முப்பருமான (stereo) ஒலிபரப் பிற்கும் அலைவெண் குறிப்பேற்றம் பெரிதும் பயன் படுகிறது. முக்கியமாக வீச்சுக் குறிப்பேற்றத்தில் (amp- litude modulation) உள்ள குறைகளைப் போக்க அலை வெண் குறிப்பேற்றத்தைப் பயன்படுத்தலாம். நூலோதி க.அர.ப. 1. Stark H. and Teuteur, F. B., Modern Electrical Prentice Inc., New Communications, Jersey, 1979. 2. Rodem, M. S., Analog and Digital Communica- tion Systems, Prentice-Hall Inc., New Jersey 1979. 3. Jacobwitz, H., Electronics Made Simple, Vakils Fetter and Simons Pvt. Ltd., Bombay, 1965. அலைவெண் குறிப்பேற்ற முறை ஒற்றிகள் அலைவெண் குறிப்பேற்றம் செய்யப்பட்ட ஊர்திய அலையிலிருந்து குறிப்பலையைப் பிரித்தெடுக்கும் மின் துகளியற் சுற்றுவழியே அலைவெண் குறிப்பேற்றமுறை ஒற்றி (frequency modulation detector) ஆகும். ஒரு குறிப்பேற்றம் செய்யப்பட்ட ஊர்தி அலையில் நமக் குத் தேவையான தகவல் (information) குறிப்பேற் றத்தில் (modulation) அடங்கியுள்ளது. இத்தகவலைப் பிரித்தெடுக்கக் கையாளப்படும் முறையே ஒற்றல் (detection) அல்லது குறிப்பிறக்கம் (demodulation) எனப்படும். வீச்சுக் குறிப்பேற்றத்தில், குறிப்பேற்றம் செய்யப்பட்ட ஊர்தி அலையின் வீச்சில் கவிந்துள்ள பகுதியைப் (envelope) பிரித்தெடுக்க வேண்டும்.அலை வெண் குறிப்பேற்றத்தில், ஒற்றலுக்கு, ஊர்தி அலை வெண்ணின் (carrier frequency) கண (instantaneous ) அலைவெண் விலக்கத்துக்கு நேர் தகவில் உள்ளவாறு ஒரு மின்னழுத்தம் உண்டாக்கப்பட வேண்டும். ஒற்றலுக்கு முன்பாக, குறிப்பேற்றம் செய்யப்பட்ட அலை, வழக்கமாக, ஒரு இசைப்பித்த (tuned) உயர் அலைவெண் மிகைப்பியால் (amplifier) முதலில் மிகைக்கப்படுகிறது. ஒற்றல் செயல்முறையில் இரு முனையங்கள் (diodes) மும்முனையங்கள் (triodes) திரிதடையங்கள் (transistors) போன்ற மின்துகளியற் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அலைவெண் குறிப்பேற்றம் செய்யப்பட்ட குறிப்பலையை ஒற்ற லுக்குத் தேவையான சுற்றுவழியில் (circuit) அதன் வெளிப்பாடு (output) குறிப்பேற்றம் செய்யப்பட்ட, குறிப்பேற்றம் செய்யப்படாத ஊர்தி அலைகளின் கண அலைவெண் வேறுபாட்டிற்கு நேர் தகவில் இருக்க வேண்டும். . க - வகை. அலைவெண் குறிப்பேற்ற ஒற்றிகளைப் பின்வரும் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை யாவன, அலைவெண் குறிப்பேற்றத்தை வீச்சுக் குறிப் பேற்றமாக மாற்றும் சுற்றுவழியும் (அ. கு - வி.கு அலைமாற்றி FM to AM converter) @nligg வீச்சுக் குறிப்பேற்ற ஒற்றியும் அமைந்த ஒற்றி, தர (phase comparators ஒப்புநோக்கிகளைப் பயன்படுத்தும் ஒற்றி அதாவது, இரு தொகுதி ஊர்தி அலைவெண் துடிப்புகள் (pulses) ஒன்றின் மேல் ஒன்று படிந்துள்ள அளவீட்டைப் (degree of overlap பொறுத்த வெளிப்பாட்டு அலைகளைக் கொண்ட வாய்