அலைவெண் குறிப்பேற்ற முறை ஒற்றிகள் 441
சுற்றுவழிகள் உள்ள ஒற்றி, எண்ணும் சுற்றுவழியை (counter circuit), பிரித்துணரியாகப் (discriminator) பயன்படுத்தும் ஒற்றி, பூட்டிய அலைவியற்றி (locked oscillator) கோட்பாட்டைப் பயன்படுத்தும் ஒற்றி என்பனவாகும். அ.கு. வீ.கு. மாற்றிகளைக் கொண்ட அ.கு. ஒற்றிகள். அலைவெண் குறிப்பேற்றம் பெற்ற குறிப் பலையை (signal) ஒற்றலுக்கான மிகவும் தெளிவான ஒரு முறையாக இது இருக்கக் கூடும். இதில், ஊர்தி அலையின் அலைவெண் மாறுபாடுகள், ஒத்திசைந்த வீச்சு மாறுபாடுகளாக மாற்றப்பட்டு, வீச்சுக் குறிப் பேற்ற ஒற்றியில் செலுத்தப்படுகின்றன. சரிவளவு ஒற்றி (Slope detector). அ.கு - வீ.கு. மாற்றத்துக்கான எளிய வழி, ஓர் இசைப்பித்த சுற்று வழியின் சிறப்பியல்பு வரைபடத்தின் (characteristic) விளிம்புகளின் சரிவளவைப் பயன்படுத்திக் கொள் வதேயாகும். அதாவது, படம்-1 இல் காட்டியவாறு, குறிப்பலையின் நடு அலைவெண் (centre frequency), அலைவெண் குறிப்பேற்ற முறை ஒற்றிகள் 441 சிறப்பியல்பு வரைபடத்தின் பொருத்தமான பாகத் தில் படுமாறு, ஓர். இசைப்பித்த சுற்றுவழியின் ஒத்திசைவு அலைவெண் (resonance frequency) தெரிந் தெடுக்கப்பட்டுள்ளதாகக் கொள்வோம். அப்போது வெளிப்படும் அலை, ஒரே குறிப்பேற்றம் செய்யும் குறிப்பலையால், வீச்சுக் குறிப்பேற்றமும், அலை வெண் குறிப்பேற்றமும் பெறும் ஒரு குறிப்பலை யாகும். இந்த வெளிப்பாட்டு அலை ஓர் எளிய அ.கு. ஒற்றியின் வழியாகச் செலுத்தப்பட்டால், அலைவெண் குறிப்பேற்றம் புறக்கணிக்கப்படும்; ஆனால், வீச்சுக் குறிப்பேற்றம் குறிப்பேற்ற அலை வெண்ணில் (modulation frequency) ஒரு வெளியீட் டைத் தரும். ஒத்திசைவு வளைவின் (resonance curve) குலைவை விளிம்புகளின் வளைவு, கிளையலைக் (harmonic distortion) ஏற்படுத்தக் கூடும். தக்க இசைப்பித்த Q மதிப்பையும், சுற்று வழியின் ஒத்திசைவு அலைவெண்ணையும் தெரிந்தெடுப்பதன் மூலம் இக்குலைவைக் குறைக்கலாம்; இருப்பினும் இக்கிளையலைக்குலைவு கடுமையாகவே இருக்கும். வீச்சு அலைவெண் ஒத்தசைவு அலைவெண் நடு அலைவெண் வீ.கு. வெளியீட்டுக் குறிப்பலை அ.கு.உள்தரு குறிப்பலை 1.5-2-56. படம் 1. எளிய அ.கு. சரிவளவு ஒற்றி