442 அலைவெண் குறிப்பேற்ற ஒற்றிகள்
442 அலைவெண் குறிப்பேற்ற ஒற்றிகள் ரௌண்டு-டிரேவிசு ஒற்றி(Round-Travis Detector). இவ்வகை ஒற்றியில், இசைப்பித்த சுற்றுவழியின் சிறப்பியல்பு வரைபடத்தின் வளைவு காரணமாக ஏற்படும் குலைவு, "தள்ளல் - இழுத்தல்" கோட் பாட்டைப் (push-pull principle) பயன்படுத்திக் குறைக்கப் படுகிறது. இதற்கு ஒத்த இரண்டு இசைப்பித்த சுற்று வழிகள் பயன்படுத்தப் படுகின்றன. ஒன்றில் (L) C ) மைய அலைவெண் ணுக்கு மேலே f, அலைவெண்ணிலும், மற்றதில் (Lz C) மைய அலைவெண்ணுக்குக் கீழே f, க்கு சமமாக f2 அலைவெண்ணிலும் ஒத்திசைவு ஏற்படும். L, C மற்றும் L, C சுற்று வழிகளுக்கிடையே உண்டாக்கப்படும் குறிப்பலைகள் தனித்தனி அ.கு. ஒற்றிகளால் ஒற்றப்படுகின்றன. அச்சுற்றுவழிகளின் வெளியீடுகள், தொடர்நிலை எதிர்த்தல் முறையில் (series opposition) இணைக்கப்படுகின்றன. படம் 2 இல் ரௌண்டு - டிரேவிசு ஒற்றியின் சுற்று வழி படம் காட்டப்பட்டுள்ளது. படம் 3 -இல் இவ்வகை ஒற்றியின் செயல்முறை விளக்கப்பட்டுள்ளது. மத்திய அலைவெண்ணில், இருமுனையங்களிலிருந்தும் பெறப் படும் வெளியீடு சமஅளவில் (எதிர் துருவத் துடன்) இருப்பதால், மொத்த வெளியீடு சுழியாகும். மைய அலைவெண்ணுக்கு மேலுள்ள அலைவெண் களில் D, இருமுனையம் D, வை விட அதிக வெளி யீட்டைத் தருவதால், கூட்டு வெளியீடு, நேர் முனைமை உள்ளதாகிறது; நடு அலைவெண்ணுக் குக் கீழுள்ள அலைவெண்களில், D. இருமுனையம் D. ஐவிட அதிக வெளியீட்டைத் தருவதால், கூட்டு வெளியீடு, எதிர் முனைமை உள்ளதாகிறது. இவ் வாறு, மொத்த வெளியீடு அதன் முனைமையின் மூலமாக, குறிப்பிட்ட நேரத்தில் உள்தருகை அலை யின் அலைவெண், மைய மதிப்புக்குக் கீழுள்ளதா அல்லது மேலே உள்ளதா என்பதைக் குறிப்பிடு கிறது; அதன் பருமை (magnitude) விலக்கத்தின் அளவைக் குறிப்பிடுகிறது. அ. கு. உள்தருகை உயர்நிலை இசைப்பித்தது ++ குறிப்பேற்ற அலைவெண் வெளியீடு c2 Dz தாழ்நிலை இசைப்பித்தது படம் 2. ரௌண்டு-டிரேவிசு ஒற்றியின் சுற்று