பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவெண்‌ குறிப்பேற்ற முறை ஒற்றிகள்‌ 445

IF அலைவெண் குறிப்பேற்ற முறை ஒற்றிகள் 44 Vs - Vp VDL Vp Vp V, (04) (ஆ) படம் 5. ஃபாஸ்டர்-சீலி பிரித்துணரி தறுவாய் விளக்கப்படம் V1. முதன்மைச் சுருளின் மின்னழுத்தம் Vp ஆகியவற்றின் தறுவாய்க் கட்டு மின்னழுத்தம், மேற்பகுதியிலுள்ள இருமுனையம் Dr, அதன் மின் தடை R ஆகியவற்றிற்குச் செலுத்தப்படுகிறது. இவ்வாறே மின்னழுத்தம் VD, கீழ்ப்பகுதியிலுள்ள இருமுனையம் D,, அதன் மின் தடை R1 ஆகிய வற்றிற்குச் செலுத்தப்படுகிறது. C1 மற்றும் C என்ற கொண்மிகள் வானொலி அலைவெண்ணை மின் தடைகளைச் சுற்றி வழிமாற்றி விடுகின்றன (bypass). வெளிப்பாட்டு மின்னழுத்தம் இவ்விரு மின்தடை மின்னழுத்தங்களின், குறிக்கணக்கியற் கூட்டுத் தொகையாகும் (algebraic sum)., ஆனால், இவ்விரு இருமுனையம் சுமையின் வழி செல்லும் மின்னோட்டங்கள் எதிரெதிர்த் திசைகளில் செல்வ தால், வெளிப்பாட்டு மின்னழுத்தம் உண்மையில், இவ்விரு மின்சுமை மின்னழுத்தங்களின் இடையே உள்ள வேறுபர்டேயாகும். துணைச்சுருணை உள் தருகை அலைவெண்ணுக்கு இசைப்பித்த நிலையில், இவ்விரு மின் தடைகளும் சமமாக இருப்பின் வெளிப்பாட்டு மின்னழுத்தம் சுழியாகும். ஒத்திசைவு அல்லது நடு அலைவெண்ணுக்கு மேல், உள்தருகை அவைவெண் உயரும்பொழுது, துணைச்சுருள் (secondary coil) தூண்டல் எனவே துணைச் தன்மை (inductive) உடையதாகிறது; துணைச்சுருள் மின்னோட்டமும், சுருளின் மின்னழுத்தமும் தத்தம் ஒத்திசைவு நிலைக்குப் பிந்தி நிற்கின்றன. இந்நிலை, தறுவாய் விளக்கப்படம் 5 (இ) இல் காட்டப்பட்டுள்ளது. மேற் பகுதியிலுள்ள இருமுனையம் D, மற்றும் அதன் மின்தடை இவற்றிற்குச் செலுத்தப்படும் மின்னழுத் (இ) தம் Vor கீழ்ப் பகுதியிலுள்ள இருமுனையம் D அதன் மின்தடை இவற்றிற்குச் செலுத்தப்படும் மின்னழுத்தம் Vo, வை விட அதிகமாக ஆகிறது. VDi மற்றும் V D, இவற்றினிடையே உள்ள வேறு பாடு, நேர்முனைமையுள்ள ஒரு வெளிப்பாட்டு மின்ன ழுத்தத்தைத் தருகிறது. மாறாக, உள்தருகை அலை வெண், ஒத்திசைவு நிலைக்குக் கீழ் குறைந்தால், துணைச் சுருள் கொண்மத் தன்மை (capacitive) உடையதாகிறது; துணைச் சுருள் மின்னோட்டம், முந்தும் திசைக்கு (leading direction) தறுவாய்ப் பெயர்ச்சி அடைகிறது. ஆகவே எதிர்முனைமை யுள்ள மொத்த வெளிப்பாட்டு மின்னழுத்தம் உண் டாகிறது. பிணிந்த சுற்றுவழியின் (coupled circuit) துலங் கல் வளைவு (response curve) நேர்கோட்டுப் பகுதி யில் அலைவெண் இருக்கின்றவரை, வெளிப்பாட்டு மின்னழுத்தம், அலைவெண், விலக்கத்திற்கு நேர் தகவிலேயே இருக்கும். அலைவெண் கடத்துப் பட்டையின் (pass band) விளிம்பை நோக்கி நகர்வதாகக் கொள்வோம். இப்போது முதன்மைச் சுருள் மின்னழுத்தத்தின் (Vp) வீச்சு குறைவதால், ஒரு குறிப்பிட்ட உள்தருகை அலைவெண் மாற்றத் துக்கு, வெளிப்பாட்டு மின்னழுத்தத்தில் ஏற்படும் மாற்றம், ஒத்திசைவு நிலைக்கு அருகில் ஏற்படுவதை விடக் குறைவாகும். இவ்வாறாக, இசைப்பித்த சுற்றுவழிகளில், அவற்றின் வடிவமைப்பு (desigu) அலைவெண்ணுக்கு மேற்பட்டவற்றில் பிணிந்த சுற்றுவழியில் ஏற்படும் அலைவெண் பிரித்துணரல், வெளிப்பாட்டு அலையின் அலைவடிவில் குலைவை ஏற்படுத்தும்.