பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவெண்‌ குறிப்பேற்ற முறை ஒற்றிகள்‌ 451

ஆக, அதாவது, மாறுதல் ±0.1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும்; இது மாறுமின்னோட்டம் நீக்கப்பட்டு நேர்மின்னோட்டமாக்கப்பட்ட குறிப் பலையின் சராசரி மதிப்பில் மிகச் சிறிய மாறுதலே ஏற்படுவதைக் குறிக்கிறது. இதனால் தாழ் அலை வெண் கடத்தும் வடிப்பியிலிருந்து மிகச்சிறிய கேள் அலைவெண் கொண்ட வெளிப்பாட்டு அலையையே பெற முடிகிறது. ஆனால் இ. அ. சுற்றுவழிகளில்(I.F circuits) இந்த மாறுதல் பெரிதாக உள்ளது; 10.7 மெகாஹெர்ட்சில் +75 கிலோஹெர்ட்சு +0.7 விழுக் காடு உள்ளது. இருப்பினும் துடிப்பு-எண்காட்டி பிரித்துணரிகளைப் பயன்படுத்தும் ஒலிவாங்கிகளில் (receivers) 455 கிலோஹெர்ட்சு அல்லது அதற்கும் குறைவான இடைநிலை அலைவெண்ணே பயன் படுத்தப்படுகிறது. 455 கிலோஹெர்ட்சு அலைவெண் ணில், மிக அதிக அலைவெண் மாற்றம் +17 விழுக் காடு அளவுக்கு உள்ளது; இதனால் நேர்மின்னோட் டம் ஆக்கப்பட்ட குறிப்பலையில் பயனுள்ள குறிப் பேற்ற அலைவெண் கூறு பெறப்படுகிறது. தாழ் அலைவெண் கடத்தும் வடிப்பிக்கு வழங்கப் படும் குறிப்பலை, வீச்சு மாற்றங்களற்றதாக இருத் போலியான தல் வேண்டும். ஏனெனில் இவை (spurious) வெளிப்பாட்டைத் தருபவை, மேலும் எல்லா உள்தருகைத் துடிப்புகளும் ஒரே மாதிரி வடிவமுடையனவாக இருத்தல் வேண்டும்; ஏனெனில் வடிவ மாறுபாடுகளும் கூட வெளிப்பாட்டில் தேவை யற்ற கூறுகளைத் தரக்கூடும். இ. அ. குறிப்பலை யிலிருந்து, குறிப்பேற்றத்துக்கு ஏற்ப மாறுபடும் + அலைவெண் குறிப்பேற்ற முறை ஒற்றிகள் 451 அடிப்படை அலகு நேர எண்ணிக்கையுள்ள, ஒரே மாதிரி வடிவமும் வீச்சும் கொண்ட, தொடர்ந்த துடிப்புகளை உண்டாக்குவதே நமது தேவை. இ. அ. மிகைப்பியின் இறுதி வரம்புப்படுத்து நிலையிலிருந்து பெறப்படும் சதுர வடிவ அலைகளே ஆரம்ப கால துடிப்பு எண் பிரித்துணரிகளுக்குச் செலுத்தப்பட்டன. இச்சதுர வடிவ அலைகள் ஒரு மின்தடை - கொண்மச் சுற்றுவழியால் வகைப்படுத் தப் பட்டன (differentiate). படம் 11 இல் காட்டிய படி, இந்தச் சுற்றில் எதிர் முனைமையுள்ள அலைப் பகுதிகளை (negative going blips) விலக்குவதற்காக. இருமுனையங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இச் முனைமை சுற்றுவழியிலிருந்து பெறப்படும் நேர் யுள்ள அலைப்பகுதித் தொடர் (train of positive gain blips), காட்டாக, 30 கிலோஹெர்ட்சு இணைப்பு விடுபடு அலைவெண் (cut off frequency) கொண்ட தாழ் அலைவெண் கடத்தும் வடிப்பி வழியாகச் செலுத்தப்படுகிறது. தற்காலத்து மேம்பட்ட துடிப்பு எண்ணிப் பிரித் துணரிகளில், நேர்முனைமையுள்ள அலைப்பகுதிகள். பன்மை அதிர்வி (multi vibrator) ஒன்றை முடுக்கி விடப் பயன்படுத்தப்படுகின்றன. அது வெளியிடும் துடிப்புகள், ஒரு சதுரப்படுத்திக் கட்டம் (squarer- stage) வழியாகச் செலுத்தப்பட்டு, மிகை வீச்சு அலைப் பகுதிகள் (overshoots) நீக்கப்பட்டு, பின்னர் தாழ் அலைவெண் கடத்தும் வடிப்பிக்குள் விடப்படுகின்றன. வகைப்படுத்தும் உறுப்புகள் குறிப்பிறக்கம் செய்யும் உறுப்புகள் குறிப்பேற்ற அலைவெண் வெளியீடு தாழ் அலைவெண் கடத்தும் வடிப்பு அ.க.2-29 அ படம் 11. துடிப்பு எண்காட்டிப் பிரித்துணரியின் அடிப்படை அமைப்பு