பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 அலைவெண்‌ குறிப்பேற்ற வானொலிமுறை

454 அலைவெண் குறிப்பேற்ற வானொலிமுறை வானொலிமுறையாகும்.மனிதரால்நொடிக்கு 15முதல் 15,000வரை அலைவுகள் கொண்டஒலி அலைகளை மட் டுமே கேட்க முடியும். இவை கேள் அலைவெண் (audio frequency) எனப்படும். இசை நிகழ்ச்சிகள், உரை யாடல்கள் போன்ற கேள் அலைவெண்ணில் உள்ள ஒலிகள், வானொலி நிலையத்தில் மின்காந்த அலை களாக மாற்றப்பட்டு ஒலிபரப்பப்படுகின்றன. இவை நெடுந்தொலைவுக்குச்செல்வதற்குப் போதிய வலிமை அற்றவை. எனவே, உயர் அலைவெண் கொண்ட, திறன் வாய்ந்த ஊர்தி அலைகளின் (carrier waves) மேல் ஏற்றி, இவை பரப்பப்படுகின்றன. இவ்வாறு கேள் அலைவெண் அலைகளை, மிகவும் அதிக அலை வெண்ணுடைய ஊர்தி அலைகளின் மேல் ஏற்றி அனுப்புவதைக் குறிப்பேற்றல் (modulation) என்கி றோம். வீச்சுக் குறிப்பேற்றம் (வீ. கு) (amplitude modulation, AM) அலைவெண் குறிப்பேற்றம் (அ.கு) (frequency modulation, FM) என இருவகைக் குறிப்பேற்றங்களை வானொலி நிலையங்கள் பயன் படுத்துகின்றன. அவை முறையே வீ.கு வானொலி நிலையங்கள், அ.கு. வானொலி நிலையங்கள் என அழைக்கப்படுகின்றன. வீ.கு. அமைப்பில் (A.M. system), ஊர்தி அலையானது சுழியிலிருந்து (Zero) வீச்சின் (amplitude) இருமடங்கு அளவுக்கு முன்னும் பின்னும் மாறும்போது குறிப்பேற்றம் பெருமமா கிறது. இது 100 விழுக்காட்டுக் குறிப்பேற்றம் எனப் படுகிறது. ஆனால், அ.கு. முறையில் (F.M. system) வானொலி அலையின் வீச்சு மாறாமலே இருக்கும். குரல் மின்னோட்டங்களுக்கு (voice currents) ஏற்ப, அலைவெண் மாறுபடும். அ.கு. அமைப்பில் பெருமக் குறிப்பேற்றம் (maximum modulation), ஒலி பப்படும் அல்லது பெறப்படும் அலைவரிசையால் அல்லது அலைப் பட்டையால் (width of the band) தீர்மானிக்கப்படுகிறது. இக் காரணத்தால்தான், அ.கு. வானொலி நிலையத்தின் அலைவெண் பட்டை கள் (frequency bands), வீ.கு. வானொலி நிலையத் தின் அலைவெண் பட்டைகளைவிட இருபது மடங்கு அகன்றனவாக அமைகின்றன. 535 முதல் 1605 கிலோஹெர்ட்சு வரை உள்ள செந்தர வீ.கு. ஒலிபரப்பு அலைப்பட்டைகளில் பல விரிவான கால் வழிகளைப் (channels) பெற முடிவதில்லை. ஆனால், அ.கு. ஒலிபரப்புகள், 88 முதல் 108 மெகாஹெர்ட்சு அமைந்த அகலமான அலைப்பட்டைகள் கொண்டுள்ளவையாதலால் அ.கு.அமைப்பில் பல் வேறு ஒலிபரப்பு நிலையங்களுக்குப் போதுமான இடைவெளி கொண்ட அலைப்பட்டைகளை ஒதுக்க முடியும். காட்சிக் குறிப்பலைகள் மட்டுமன்றி தொலைக் காட்சி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பப் படும் ஒலியும் அ.கு. அலைவெண்களிலேயே ஒலி பரப்ப முடியும். வரை ஊர்தி அலையின் அலைவெண்ணைத் (frequency of carrier) தக்கபடி மாறச் செய்து, அலைபரப்பும் முறையே அலைவெண் குறிப்பேற்ற வானொலி முறை அல்லது அலைபரப்பு முறையாகும் (F. M. Radio Broadcasting). இடைநிலை அலைவெண்ணி லிருந்து எந்த அளவுக்குப் பெயர்வு உள்ளது என்பது, குறிப்பேற்றம்செய்யும் மின்னழுத்தத்தின் (modulating voltage) பெரும் (maximum) மதிப்பையும் அதன் அலைவெண்ணையும் பொறுத்தது. ஊர்தி அலை வெண்ணிள் எந்தவீதத்தில் (rate)மாறுதல்கள் நிகழும் என்பதைக் குறிப்பேற்றம் செய்யும் குறிப்பலையின் அலைவெண் முடிவு செய்கிறது. இந்தக் குறிப்பேற்ற முறையின்போது அ.கு.பக்க அலை வரிசைகள் அல்லது பக்க அலைப்பட்டைகள் (side bands) உண்டா கின்றன. இவை, கேள் அலைவெண்ணுக்கு ஈடான இடைவெளிகள் உள்ளவையாக, ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியே பிரிக்கப்படுகின்றன. இடைநிலை அலைவெண்ணிலிருந்து மிகவும் விலகிவிலகிப் பக்க அலைப்பட்டைகள் உண்டாக உண்டாக, இவற்றின் வீச்சு தொடர்ந்து குறைந்துகொண்டே போகிறது; குறிப்பேற்றம் செய்யும் குறிப்பு அலையின் வீச்சைப் பொறுத்து, பயன்மிகு (significant) பக்க அலைப் பட்டைகளின் எண்ணிக்கை அமையும். ஊர்தி அலை வெண் மாற்றம், ஒலி பரப்பப்படும் குறிப்பு அலை யின் பெரும் அலைவெண், இவ்விரண்டின் விலக்கத் தகவு (deviation ratio) சிறுபின்னத்திலிருந்து பெரிய எண்கள் வரை, எந்தத் தெரிந்தெடுத்த மதிப்பாகவும் இருக்கலாம். விலக்கத்தகவு அதிகமாக ஆக, ஒலிபரப் பிற்குத் தேவையான அலைப்பட்டையின் அகலமும் அதிகமாகிக் கொண்டே போகிறது. பற்பல வானொலி நிலையங்கள், அலைமாலையைச் (spectrum) சிக்கனமான முறையில், பல்வேறு பணி களுக்காகப் பயன்படுத்தக்கூடிய வகையில், விலக்கத் தகவுகள் செந்தரப்படுத்தப்பட்டுள்ளன. காண்சு, அலைப்பட்டை அகலம். அ.கு.வானொலி நிலையத்திலிருந்து பரப்பப் படும் அலைத்திறனின் அளவு (power) குறிப்பேற்றம் செய்யும்போது.மாறாமல் நிலையாகவே இருக்கும்; வெளிப்படுத்தப்படும் அலைவெண்களின் மாறுதலில் எல்லா அலைபரப்புச் செய்திகளும் அடங்கியிருக்கும். இடைநிலை அலைவெண், அல்லது ஊர்திஅலைவெண், ஒவ்வொரு வானொலி நிலையத்திற்கு மட்டுமே உரியதாக, ஆட்சி அதிகாரம் பெற்ற அரசால் ஒதுக் கீடு செய்யப்படுவதாகும். விலக்கத்தகவு எதுவாயினும், அ.கு. அலைபரப் பியின் (transmitter) வெளிப்பாட்டு அவையில் (output wave), வீச்சு மாறுதல்கள் இல்லாமையால் இம்முறை ஒலிபரப்பு, அலைவாங்கியைச் (receiver) சூழும் வீச்சுக் குறுக்கீட்டுச் சிக்கல்களுக்கு (interference problems) முழுமையான மாற்றாய் அமைந்துள்ளது. அ.கு. அலைவாங்கி, அ.கு.அலைபரப்புக்கு மட்டுமே துலங்கும் (respond).ஆகவே, குறிப்பலை நேரியலாகப்