பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 அலைவெண்‌ குறிப்பேற்ற வானொலிமுறை

456 அலைவெண் குறிப்பேற்ற வானொலிமுறை அலைவரிசை மிகப் பரந்ததாக இருப்பதால், ஒரே நேரத்தில் வழக்கமான நிகழ்ச்சிகள் தவிர பல்வேறு வகையான வணிக ஒலிபரப்புப் பணிகளை மேற் கொள்ளமுடிகிறது. மிகப் பலதிறப்பட்டநிகழ்ச்சிகளுக்கு குரிய அலைவெண்களுக்கும் (programme frequencies) ஏற்ப பல அலைவெண்களில் குறிப்பேற்றம் செய்தல், அலைவெண்பகுப்பு - பன்முகப்படுத்தல் (frequency division multiplexing) செயல்முறையால் செய்யப்படு கிறது. 25முதல்75 கிலோஹெர்ட்சு வரையுள்ள அலைப் பட்டைகள் இடம்பெற்றுள்ள அ. கு. செய்யப்பட்ட துணை ஊர்தி அலைகளைப் (subcarrier waves) பயன் படுத்தி ஒன்று முதல் மூன்று தனித்தனி ஒலிபரப்பு களை, வணிக நிகழ்ச்சிகளுக்கும், பிறவகை நிகழ்ச்சி களுக்கும் பயன்படுத்துதல் இவ்வகையில் ஒரு சிறப் புப் பயன்பாடாகும். இந்தப் பன்முகப்படுத்தப்பட்ட அலைகளை வழக்கமான வானொலிக் கேளலைக் கருவிகள் ஈர்ப்பதில்லை; ஆனால் இதற்கெனத் தனிக் கேளலைக் கருவிகளைப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் வழக்கமான மற்ற ஒலிபரப்பு நிகழ்ச்சி களை ஒதுக்கிவிடப்படுகின்றன. மாறாக, பன்முகப் படுத்தப்பட்ட அ. கு. ஒலிபரப்பில், ஏதேனும் ஒன்று ஈர்க்கப்படுகிறது. இவ்வாறான பன்முகப்படுத்தப் பட்ட சிறப்பு அ. கு. ஒலிபரப்பு முறைகள் சிறப் புச் செய்தித் தொடர்பு அதிகார இசைவுகள் communication authorisations, S.C.A.) (special என அழைக்கப்பெறுகின்றன. இவ்வகை ஒலிபரப்பில் ஒலிபரப்புத்தரம் இயல்பான அ.கு. ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை விடக் குறைவாகவே இருக் கும். இவை குறிப்பேற்ற அலைவரிசையில் மிகக் குறுகிய பகுதியில் இயங்குவன. ஒலிபரப்பியின் மொத்தத் திறனில் சிறிதளவே பயன்படுத்துவன. இருப்பினும், இத்தகைய சிறப்பு ஒலிபரப்புகள் நிறை வாகவும் பரவலாகவும் நடைமுறையில் பயன்படுத்தப் படுகின்றன. திட்ப ஒலிபரப்பு (Stereophonic broadcasting). தற்போது பரவலாக நிறுவப்பட்டு வரும் மற்றொரு அ.கு. ஒலிபரப்பு, முப்பருமான ஒலி நிகழ்ச்சிகளை ஒலி பரப்புவதாகும். இதற்குத் திட்ப ஒலிபரப்பு என்று பெயர். இவ்வகை நிகழ்ச்சிகளைப் பெறு வதில் முழுமை அளிப்பதற்காக திட்ப ஒலிவாங்கி களும் (stereo receivers), இடைவெளிவிட்டுப் பொருத்தப்பட்டுள்ள தனி ஒலிபெருக்கிகளும் பயன் படுத்தப்படுகின்றன. நாம் இருகாதுகளால் கேட்பது போன்று, நிகழ்ச்சிகளை ஈர்க்க இரண்டு ஒலி அவை மாற்றிகள் (microphones) பயன்படுத்தப்படுவதால் இவை ஒலித் திட்பத்தை (auditory perspective) அளிப்பதோடு இயற்கையான பரந்தவெளித் தன்மை யையும் (natural space effect) அளிக்கின்றன. இரண்டு ஒலி அலைமாற்றிகளிலிருந்தும் வெளிவரும் மின் அலைகள் தனித்தனியே, பன்முகப்படுத்தல் முறையில் ஒலிசெலுத்திக்குள் விடப்படுகின்றன; ஒரே ஊர்தி அலைப்பட்டையில் இவை வெட்டவெளியில் செலுத் தப்படுகின்றன; பெறுமிடத்தில் ஒலிவாங்கியில் பிரித் தெடுக்கப்பட்டு, மிகைக்கப்பட்டு, இரு தனியான இடைவெளி விட்டுப் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி களில் திரும்பக் கேட்கப்படுகின்றன. வ திட்ப ஒலிபரப்பில், திட்பமில்லா ஒலிபரப்புக் கான அ.கு. ஒலிவாங்கிகளிலும், இயல்பாக நிகழ்ச்சி களைப் பெற வழிவகை செய்தாக வேண்டியுள்ளது. இதில் உள்ள இரண்டு ஒலி அலை மாற்றிகளையும் இடம் (இ), வலம் (வ) எனக் கொள்வோம். நேரடி யான நிகழ்ச்சியின் அலைக் குறிப்பேற்றத்துக்கு, வெளிவரும் அலைமாற்றிகளிலிருந்து அலைகள், இணையும் முனைமை கொண்டனவாகக் கொண்டு (additive polarities) இணைக்கப்படுகின் றன. ஆனால் பன்முகப்படுத்தப்பட்ட திட்ப ஒலிக் கால்வழியில் இ,வ அலைமாற்றிகளின் மின் அலைகள், எதிர்த்தறுவாய்க்கு மாற்றப்பட்டுச் (antiphased ) செலுத்தப்படுகின்றன. நேர்க் கால்வழியில், இயல் பான அ.கு. ஒலிவாங்கிக்கு மொத்த இயற்கையான குறிப்பவைகளும் (இ+வ) செலுத்தப்படுகின்றன. திட்ப ஒலிக் கால்வழியில், (இ-வ) குறிப்பலைகள் ஒவ்வொரு செலுத்தப்படுகின்றன. கால்வழியி ஒத்த செய்யப் இணைக்குறிப்பேற்றம் படுகிறது; எனவே, ஒத்த ஒலியியல் மூலத்தின் நம்பசுத்தன்மை (sound fidelity) கிடைக்கிறது. ஏனெனில் இ+வ, இ-வ ஆகிய குறிப்பலைகள் மாற் றுத் தறுவாய் கொண்டவையாக ஒரு கால்வழி யில் உயர் ஒலிப்பெருமம் (high volume peak) ஏற் படுகையில் மற்றதில் அதன் ஒலிச் சிறும நிலையில் உள்ளது. ஒவ்வொரு கால்வழியும், அதன் மிக அதிக மதிப்புள்ள குறிப்பலைகள் உச்சத்திலிருக்கும்போது, மொத்த அலைவெண் விலக்கத்தில் ஏறத்தாழ பாதி வரைக்கும் இடம்பெறக் கூடியவை. கிடைக்கக கூடிய திறனை இரண்டும் கூட்டாகவும் ஓரளவு சமமாகவும் பகிர்ந்து கொள்ளும்போதும். திட்பமில்லா (ஒலி- பரப்பு ) ஒலிவாங்கி, இப்பன்முகப்படுத்தப்பட்ட கால்வழியால் ஒரு பாதிப்பும் இல்லாமல் செயல் படுகிறது. லும் இவ்வமைப்பில், சமச்சீரான பக்க அலைவெண் பட்டை மட்டுமே செலுத்தப்படும் வகையில், அடக்கப் பட்ட (suppressed) 38 கிலோஹெர்ட்சு துணை ஊர்தி அலையில், இ,வ கால்வழி வீச்சுக் குறிப் பேற்றம் செய்யப்படுகிறது; ஆனால் தாழ்நிலையில் உள்ள 19 கிலோஹெர்ட்சு முன்னோடி அலையும் (pilot wave) கூடவே செலுத்தப்படுகிறது. (இந்த 19 கிலோஹெர்ட்சு அலைவெண்ணிலிருந்தே முன்ன தாக ஒடுக்கப்பட்ட துணைஊர்தி அலை பெறப் பட்டது). முன்னோடி அலைவெண்ணும் வீச்சுக்